Pandian Stores 2 Promo: தங்கமயில் எடுத்த விபரீத முடிவு! மீனா கண்ட காட்சி.. பாண்டியன் ஸ்டோரில் அடுத்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் ( Pandian Stores 2 serial promo (Feb 16-21)) அடுத்த வாரம் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத கதைக்களம் தான் வந்திருக்கிறது. அதாவது மொத்த குடும்பத்தினரும் செய்த செயலால் தங்கமயில் தற்கொலை முயற்சி செய்கிறார். அப்போது மீனா பார்க்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் (Pandian Stores 2 serial promo) அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதுதான் எல்லோரும் ஆர்வமாக எதிர்பார்ப்பது. ஏற்கனவே மயில் தன்னுடைய அம்மா அப்பா வற்புறுத்தலால் ஒவ்வொரு உண்மையையும் மறைத்து அவருக்கே சூனியம் வைத்துக்கொண்டார். ஆரம்பத்திலேயே தன்னைப் பற்றிய உண்மைகளை பாண்டியன் குடும்பத்திடம் சொல்லி இருந்தால் அவருக்கு பிரச்சனை வந்திருக்காது.

ஆனால் அம்மா சொன்னதை நம்பி இவரும் உண்மையை மறைக்க இப்போது மொத்த உண்மைகளும் சரவணன் மூலமாக குடும்பத்திற்கு தெரிந்து டைவர்ஸ் கேஸ் வரைக்கும் போய்விட்டது. சரவணன் இனி எனக்கு தங்கமயில் வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறார். ஆனால் தங்கமயில் எப்படியாவது சரவணன் உடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று இருக்கிறார்.
இந்த நிலையில் ஏற்கனவே வீட்டில் இருக்கும் கஷ்டத்தில் தங்கமயிலும் அவருடைய புருஷன் வீட்டிற்கு போகாமல் மீண்டும் வந்ததை பார்த்து கோபத்தில் இருக்கும் பாக்கியம், தற்போது வந்த ப்ரோமோவில் இனி தங்கமயில் நம்ம வீட்டில் வைத்து பார்க்க முடியாது என்று நீ எங்கேயாவது வெளியே போ என்று விரட்டி விடுகிறார். அப்போது தங்கமயிலின் அப்பா மயிலை வெளியே போக சொன்னா அவ எங்க போவா என்று கேட்கிறார். அவ செத்துப் போகட்டும் என்று பாக்கியம் சொல்லிவிடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை விலாசினிக்கு ரகசிய மறுமணமா? என்ன நடந்தது? அவரே கொடுத்த விளக்கம்
இதனால் மயில் வேறு வலி இல்லாமல் அங்கிருந்து சரவணன் கடைக்கு மீண்டும் வருகிறார். சரவணனிடம், அம்மா என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க என்று அழ அதற்கு சரவணன் மறுபடியும் உன்னை என் வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியாது நீ எப்படி போனாலும் எனக்கு கவலை இல்லை... நீ எதுவாயிருந்தாலும் கோர்ட்டில் போய் பேசிக்கோ என்று அனுப்பி விடுகிறார்.

இதனால் தங்கமயில் தற்கொலை பண்ண போகிறார். அந்த நேரத்தில் அந்த பக்கமாக ஆட்டோவில் போகும் மீனா மயில் தனியாக போவதை பார்த்து அவர் பின்னாடியே போகிறார். அப்போது மயில் ஒரு கிணற்றில் குதிக்க போகிறார். இதனால் மீனா தான் மயிலை காப்பாற்றுவார் என்று தெரிகிறது. அப்படி காப்பாற்றும் போது மயில் மற்றும் சரவணன் இருவரையும் சேர்த்து வைக்க மீனா ஏதாவது முடிவெடுப்பார், அப்போது மீனாக்கு தான் பிரச்சனை வரும்.
ஷபானா உடன் பிரச்சனை.. பேசாமல் இருக்க இதுதான் காரணம்! வெளிப்படையாக பேசிய கயல் சீரியல் சைத்ரா
தங்கமயிலை காப்பாற்றும் மீனாவை இனி யாருக்காப்பாற்ற போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே மயில் போன் செய்ததால் செந்தில் மீனா மீது கோபத்தில் இருக்கிறார். இந்த பஞ்சாயத்தில் இப்போது புது பஞ்சாயத்திலும் மீனா சிக்குகிறார்.












Click it and Unblock the Notifications