பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ராஜியின் நிஜ கணவர் யார் தெரியுமா? இந்த பிரபலம் தானா? இப்படி ஒரு மறுபக்கமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் ராஜி கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஷாலினியின் திருமண புகைப்படங்கள்தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஷாலினி யாரை திருமணம் செய்திருக்கிறார். அவருடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது? திருமணத்திற்கு பிறகு எப்படி சீரியலில் நடிக்க வந்தார் என்பது பற்றி ஷாலினி ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியிருந்தார்.
அதை பார்த்த பல ரசிகர்கள் ஷாலினிக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு பல பெண்களின் கனவுகள் முடக்கப்படுவதை அதிகமான வீடுகளில் பார்க்க முடிகிறது. ஆனால் ஷாலினியின் கணவன் அவர் ஆசைப்பட்ட மாதிரி ஷாலினிக்கு வாழ்க்கை வெற்றி அடைய அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறாராம். ஷாலினியின் கணவர் மட்டுமல்லாமல் அவருடைய மாமியாரும் ஷாலினிக்கு உதவியாகத்தான் இருக்கிறாராம். இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷாலினி உருக்கமாக பேசியிருந்தார்.

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலின் ராஜியாக பலருக்கும் தெரிந்த ஷாலினி ஆரம்பத்தில் சின்ன திரையில் அறிமுகமானது கதாநாயகி என்ற நிகழ்ச்சியில் தான். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் தன்னுடைய திறமையை காட்டி பலருக்கும் பரிச்சயமாக இருந்தார். ஷாலினி தமிழ் பொண்ணு அதுவும் தமிழில் சரளமாக பேசக்கூடியவராக இருந்தாலும் இவருக்கு சீரியலில் டப்பிங் குரல் தான் பேசி இருக்கின்றனர். ஷாலினியும் சொந்த ஊர் கோயம்புத்தூர் தானாம்.
அங்கு தான் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாமே. சின்ன வயசுல இருந்து ஆடுவது, பாடுவது போன்றவற்றில் ஆர்வமாக இருந்த ஷாலினிக்கு வீட்டில் இதற்கெல்லாம் அனுமதி கிடையாதாம். அதனால் படித்து முடித்து ஐடியில் சாப்ட்வேர் டெவலப்பராக இருந்து போது தான்
ஷாலினிக்கு இது நம்முடைய லைஃபே கிடையாது. நம்ம கேரியரை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவுக்கு வந்திருக்கிறார். அந்த நேரத்தில் பிரபு என்பவரை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார்.
பொதுவா பலரும் நடித்த பிறகுதான் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகுவார்கள். ஆனால் ஷாலினி திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்திருக்கிறார். தன்னுடைய மனைவிக்கு நடிப்பில் அதிக ஆர்வம் இருப்பதை தெரிந்து கொண்ட கணவர் பிரபு ஷாலினியை பல இடங்களுக்கு ஆடிசனுக்கு கூட்டிட்டு போயிருக்கிறார். அந்த மாதிரி கிடைத்த வாய்ப்பு தான் கதாநாயகி நிகழ்ச்சி. கோயம்புத்தூரில் நடந்த அந்த ஆடிஷனில் பல ஆயிரம் பேர் கலந்து இருக்காங்க.
அதில் முதலில் 80 பேரை செலக்ட் பண்ணி, அப்புறம் அதுல 50 பேரை செலக்ட் பண்ணி, அதுல இருந்து 30 பேரை செலக்ட் செய்து பிறகு 20 பேரை செலக்ட் செய்து கடைசியா அதுல எட்டு பேரை தான் செலக்ட் பண்ணி இருக்காங்க. அதில் எட்டு பேர்ல அடுத்தடுத்த பெர்ஃபார்மன்ஸ் பண்ணி அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக வந்த கே. எஸ் ரவிக்குமார், நடிகை ராதிகா இருவருடைய மனதிலும் இடம் பிடித்து கதாநாயகி நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்று இருந்தார்.
அதுபோல ஷாலினி கதாநாயகி நிகழ்ச்சியில் பருத்தி வீரன் ப்ரியாமணி, சின்னதம்பி குஷ்பூ போன்ற பல கெட்டப்களில் நடித்து அங்கிருந்தவர்களை வியக்க வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஷாலினியின் கணவர் பிரபு நடத்திய ஸ்டுடியோவில் ஷாலினி நடன பயிற்சி வகுப்பில் சேர்ந்துதான் அவரை காதலித்திருக்கிறார்.
காதலித்ததை நேரடியாக பிரபுவின் அம்மாவிடம் ஷாலினி கூறி, உங்க பையனை எனக்கு ரொம்பவும் பிடிக்கும் ஆனால் அவர் ஷை டைப்பாக இருக்கிறார் என்று பேசி இருக்கிறார். அதுபோல ஷாலினிக்கு கணவர் மட்டும் இல்லாமல் ஷாலினியின் மாமியாரும் அவருடைய கனவு நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருக்கிறாராம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications