பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: பாண்டியன் எடுத்த நல்ல முடிவு.. இது பலருக்கு பாடம்! ஆனால் ரகளை செய்யும் மகன்கள்.. இனி தான் சம்பவமே!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 ஜூலை 22ஆம் தேதிக்கான எபிசோடு பாண்டியன் தன்னுடைய குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி குமாரவேல் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கிறார். இதனால் போலீஸ் குமாரை அரெஸ்ட் செய்திருக்கும் நிலையில் பாண்டியனின் மகன்கள் ரகளை செய்கின்றனர். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாண்டியன் சுகன்யாவை கூப்பிட்டு எச்சரிக்கிறார், இனி இந்த வீட்டில் எந்தவித பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்று கண்டிப்புடன் கூறுகிறார். அதற்கு சுகன்யாவும் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து செல்கிறாள். பாண்டியன், பழனியை அழைத்து வீட்டில் உள்ள அனைவரையும் வரச் சொல்கிறார். அவர்கள் வந்ததும், குமரவேல் மீது புகார் கொடுக்கப் போவதாக பாண்டியன் சொல்ல, அதற்கு மயில், "நம்ம வீட்டுப் பிள்ளையை எதுக்காக போலீஸ் ஸ்டேஷன் கூட்டிக்கிட்டு போணும்?" என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன், "தப்பு செஞ்சிட்டுப் போனாத்தான் சங்கடம்; நம்ம அப்படி இல்லதானே?" என்று பதிலளிக்கிறார்.

கதிர் கேள்வி
கதிர், "அப்போ அந்த குமரவேலை எதுவும் செய்ய வேண்டாமா?" என்று கேட்கும்போது, "அடிச்சிட்டா எல்லாம் சரியாகிடுமா?" என்கிறார் பாண்டியன். செந்தில், "அவன் சொல்றதுல தப்பு இல்லையே" என்று கூற, பாண்டியன் அவரை முறைக்கிறார். உடனே சரவணன், "அதான் அப்பா சொல்லிட்டாருல; அமைதியா இருங்கடா" என்று சமாதானம் செய்கிறார்.
பாண்டியனின் சரியான முடிவு
ஊர் பேசும், உலகம் பேசும்; நினைச்சா பேசிட்டே இருக்கும். பொம்பள பிள்ளையை பெத்தவங்க மத்தவங்களுக்கு பயந்துகிட்டே இருக்க முடியுமா? என்றும் பாண்டியன் ஆதங்கத்துடன் கூறுகிறார். பாண்டியன் பேசி முடித்ததும், செந்திலும் கதிரும் வெளியில் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது மீனா மற்றும் ராஜி அங்கு வர, "என்ன இங்க நிக்கிறீங்க?" என்று கேட்கிறார்கள். அதற்கு அவர்கள், "அரசி விஷயம் தான்" என்கிறார்கள்.
மீனாவிடம் கேட்ட கேள்வி
அந்த கல்யாண விஷயத்தில் நீங்க அவளுக்கு ஆதரவு கொடுத்தது தப்பு என்று மீனாவிடம் ராஜி சொல்கிறாள். அதற்கு மீனா, அரசி தன்னிடம் சத்தியம் கேட்டதாக கூறுகிறாள். "அங்க சத்தியம் பண்ணிட்டு இங்க வந்து எங்ககிட்ட சொல்லி இருக்கணும்" என்கிறாள் ராஜி. அப்போது குமார் வர, அவரைப் பார்த்து கதிர் கோபப்படுகிறான். ஆனால் குமாரோ திமிராக நிற்கிறான். இதனால் கடுப்பான செந்திலும் கதிரும் சண்டைக்கு செல்ல, ராஜி மற்றும் மீனா அவர்களைப் பிடித்து தடுக்கின்றனர்.
போலீஸ் கம்ப்ளைன்ட்
பாண்டியன், அரசி மற்றும் கதிரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார். அங்கு சூழ்நிலை சரியில்லாத நிலையில், இன்ஸ்பெக்டர் வந்ததும் அரசிக்கு குமரவேல் செய்த எல்லா விஷயத்தையும் சொல்கிறார் பாண்டியன். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இன்ஸ்பெக்டர், "நாங்க என்ன செய்யணுமோ செய்றோம்" என்கிறார். மேலும், "படிக்கிற பொண்ணு லைஃப்" என்று பாண்டியன் சொல்ல, "அவங்க விஷயமே வெளியில் வராம பாத்துக்கிறேன்" என்று இன்ஸ்பெக்டர் உறுதியளிக்கிறார்.
குமாரை அரெஸ்ட் செய்த போலீஸ்
முறையாக போலீஸ் கம்ப்ளையண்ட் கொடுத்ததும், உடனடியாக போலீசார் சக்திவேல் வீட்டுக்கு வந்து குமரவேலை கைது செய்ய வேண்டும் என்கிறார்கள். அப்போதும் குமரவேல் திமிராக பேச, சக்திவேல் அரசி தான் தங்களை ஏமாற்றி விட்டதாக சொல்கிறார். ஆனால் போலீசார் கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் குமரவேலை கைது செய்ய வேண்டும் என்று கூறி அரெஸ்ட் செய்து அழைத்து செல்கின்றனர். அனைவரும் பதறி துடித்து பின்னால் செல்ல, குமாரை இன்ஸ்பெக்டர் இழுத்து செல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications