Pandian Stores: பாண்டியன் குடும்பத்திற்குள் அடுத்து வெடிக்கும் பூகம்பம்! மயிலுக்கு பிரச்சனை! கலங்கிய மீனா
சென்னை: விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில், பழனியின் புதிய கடை பிரச்சனைக்கு இடையே ராஜியும் மீனாவும் மீண்டும் சேர்ந்து வருகின்றனர் ஆனால், இந்த சலசலப்பைப் பயன்படுத்தித் தன்னுடைய வயது ரகசியம் வெளியாகாமல் தப்பித்ததாக நினைத்திருந்த மயிலுக்கு, சரவணன் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
முந்தைய சண்டையால் ராஜிக்கு போன் செய்யலாமா வேண்டாமா எனப் பயம் கொண்டு வருத்தத்தில் இருக்கிறாள் மீனா. அப்போது செந்தில் அவளுக்கு ஆறுதல் சொல்லி, ராஜிக்கு போன் பண்ணிப் பேச சொல்கிறான். மீனா போன் பண்ணத் தயாரான சமயத்தில், கதிர், ராஜி இருவரும் மீனா வீட்டிற்கு வந்தனர்.

ராஜியை பார்த்ததும் எமோஷனலான மீனா, "நான் கோபத்துல ஏதேதோ பேசிட்டேன் தப்புதான் மன்னிச்சுடு" என்று கட்டிப்பிடித்து அழுகிறாள். அதற்குப் ராஜி, "விடுங்க அக்கா. என் அம்மாவும் நியாயம் இல்லாமல் தான் பேசுறாங்க" என சமாதானம் செய்து அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பழனி புலம்பல்
அண்ணன்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த சமயத்தில், பழனி தான் மீது அக்கா குடும்பம் சுமத்திய துரோகி என்ற பட்டத்தால் கடுமையான மன உளைச்சலில் சாப்பாடு முன்பு இருந்து அழுது கொண்டிருக்கிறார் அதை பார்த்து அண்ணிமார்கள் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது கடை ஆரம்பிக்கும்போதே வேற இடம் பார்த்திருக்கலாம் என்று காந்திமதி கவலைப்பட, அதற்கு முத்துவேல், அது என்னம்மா அந்த பாண்டியன் கடை வச்சிருந்தா அந்த தெருவில் நாம கடை வைக்கக் கூடாதா? ஊரில் "ஊர்ல நம்மதான் முதல்ல மில் திறந்தோம் இப்ப தெருவுக்கு நாலு மில்லு வந்துடுச்சு அதுக்காக எல்லார்கிட்டயும் போய் சண்டை போட முடியுமா? எனக் கேட்கிறார்.
உயிரைத்தான் விடுவேன்
பழனி, "யாராவது என்கிட்ட வந்து உன் அக்காவுக்கு துரோகம் பண்றீயா இல்லை சாகுறியான்னு கேட்டால் நான் உயிரை விடுவேன் தான் சொல்லுவேன் - என்னை போய் இப்படிச் சொல்லிட்டாங்க" என்று புலம்புகிறான். சக்திவேல் உள்ளிட்ட அண்ணன்கள் அவருக்கு ஆறுதல் சொல்கின்றனர்.
மயிலுக்கு சரவணன் கொடுத்த அதிர்ச்சி
மீனா - ராஜி இணைந்த சந்தோஷம், பழனியின் சோகம் என வீட்டில் நடந்த பிரச்சனைகளைக் காரணமாக வைத்து, தன்னுடைய வயது விஷயம் வெளியாகாமல் மயில் தப்பித்துவிட்டதாக நிம்மதியுடன் இருந்தாள். சரவணன் அறையில் இருந்தபோது வந்த மயில், "மாமா வீட்ல நடந்ததை நினைச்சு வருத்தமா இருக்கீங்களா" என்று ஆரம்பித்து, "பழனி சித்தப்பா செஞ்சது எனக்கே மனசு கேட்கலை - எப்படி இப்படியெல்லாம் துரோகம் பண்றாங்களோ" என்று டயலாக் பேசுகிறாள்.
சரவணின் மிரட்டல்
உடனே மயிலை முறைத்து பார்த்த சரவணன், "துரோகம் செய்றதை பத்தி நீ பேசுறீயா? இப்போ நீ தப்பிச்சு இருக்கலாம்டி. கொஞ்சம் வீட்ல உள்ளவங்க சகஜ நிலைக்கு வரட்டும் - உன்னைப்பத்தி சொல்லாமல் விட மாட்டேன் என உறுதியாக சொல்கிறான். இதனைக் கேட்டு அதிர்ச்சியான மயில் கெஞ்சினாலும், சரவணன் காதில் வாங்காமல் வெளியேறுகிறான். இப்படியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோட் முடிவடைந்தது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications