பாண்டியன் ஸ்டோர் 2: என்னை பற்றி பரவும் “அந்த” செய்தி தவறு.. நடிகர் ரவிச்சந்திரன் கொடுத்த விளக்கம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலில் ஜனார்த்தனன் கேரக்டரில் நடிக்கும் நடிகர் ரவிச்சந்திரன் தன்னை பற்றி பரவி வரும் வதந்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில் சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் ரவிச்சந்திரன் காட்சிகள் அதிகமாக இல்லை என்பதால் அவர் சீரியலில் இருந்து விலகி விட்டாரா? அல்லது அவருக்கு எதனால் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று அவருடைய ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அதற்கு ரவிச்சந்திரன் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீசன்2 சீரியல் முதல் பாகத்தை போலவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பிடித்திருக்கிறது. ஏற்கனவே ஒளிபரப்பாகி வந்த அதே நேரத்தில் இரண்டாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல இந்த சீரியலில் முதல் பாகத்தில் அண்ணன் தம்பிகளின் கதையை மையப்படுத்தி இருந்த நிலையில் இப்போது அப்பா மகன்களின் கதையை மையப்படுத்தி இந்த சீரியல் இருந்து வருகிறது.
அதுபோல முதல் பாகத்தில் நடித்த பல நடிகர்கள் இரண்டாவது பாகத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் ஸ்டாலின் முதல் பாகத்தில் மூர்த்தி கேரக்டரில் நடித்து வந்தார். இந்த இரண்டாவது பாகத்தில் பாண்டியனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல பாண்டியனுக்கு மனைவியாக நிரோஷா, கோமதி கேரக்டரில் நடிக்கிறார்.
அதோடு இந்த தம்பதியின் மகன்களாக ஆகாஷ் பிரேம்குமார், விஜே கதிர்வேல், வசந்த் ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு முதல் பாகத்தில் நடித்த நடிகை ஹேமா இரண்டாவது பாகத்திலும் மீனா கேரக்டரில் நடித்து வருகிறார். ஹேமாவின் அப்பாவாக நடித்து வந்த ரவிசந்திரன் முதல் பாகத்தில் ஜனார்த்தனன் ஆக நடித்திருந்தார்.
அதே பெயரோடு இரண்டாவது பாகத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். முதல் பாகத்தில் அவருடைய நடிப்பு வேற லெவல் என்று எல்லோராலும் பாராட்டும் நிலையில் இருந்தது. அதிலும் ரசிகர்கள் எந்த வார்த்தை எல்லாம் சொல்லி மூர்த்தியை திட்டிக் கொண்டிருக்கிறார்களோ? அதே போலவே மூர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினரை ஜனார்த்தனன் திட்டிக் கொண்டிருப்பதை பார்க்கும்போதே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருந்தது.
அதே நேரத்தில் இரண்டாவது சீசனில் ரவிச்சந்திரன் கேரக்டருக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவரை சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டார்கள் என்று அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இதற்கு ரவிச்சந்திரன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய கேரக்டருக்கு உரிய முக்கியத்துவம் இருக்கிறது. என்னுடைய காட்சிகளை விரைவில் நீங்கள் பார்ப்பீர்கள். முதல் பாகத்தில் எப்படி ஜனார்த்தனாக என்னை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்களோ? அதுபோலவே இரண்டாவது பாகத்திலும் என்னுடைய நடிப்பு வித்தியாசமாக இருக்கும் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். இப்போதைக்கு பாண்டியன் ஸ்டோர் சீசன் 2 சீரியலில் திருமண டிராக் போய்க்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து மீனாவிற்காக அவருடைய அப்பா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications