பாண்டியன் ஸ்டோர்ஸ்: சரவணனிடம் கோமதி கேட்ட கேள்வி, பலருக்கு பாடம்.. பாவம் கதிர்.. உடைபட்ட உண்மை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial April 20 Episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஏப்ரல் இருபதாம் தேதிக்கான எபிசோடில், கதிர் நல்லது செய்தது கடைசி அவருக்கே வினையாக போகிறது. அவர் மீது குடும்பத்தினருக்கு சந்தேகம் வருகிறது. மறுபக்கத்தில் சரவணன் அவருடைய முன்னாள் காதலியுடன் பேசிக் கொண்டிருப்பதற்கு கோமதி கேள்வி மேல் கேள்வி கேட்டு அவருக்கு வார்னிங் கொடுத்து இருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் (Pandian Stores 2 serial today episode) இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் கதிர் தன்னுடைய வீட்டு வாசலில் உட்கார்ந்து தன்னுடைய மாமனாரை பற்றி யோசித்து கொண்டு இருக்கிறார். அவருக்கு ஆபரேஷன் பண்ண வேண்டும் என்று டாக்டர் சொன்ன விஷயம் மற்றும் அவருடன் ஹாஸ்பிடலுக்கு போயிட்டு வந்தது தெரியாமல் சக்திவேல் கதிரை அடிக்க போனது போன்றவற்றையெல்லாம் நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.
பழனி கேட்ட கேள்வி
அந்த நேரத்தில் பழனி அங்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பேச்சுவாக்கில் என்னோட பெரிய அண்ணன் உன் கூட வந்தாரா? சின்ன அண்ணன் சொன்னாரே என்று பழனி கேட்டதும் கதிர் சமாளிக்கிறார். ஆனாலும் பழனி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க அதற்கு கதிர் நான் காரில் வரும்போது அவர் நடந்து வந்துட்டு இருந்தாரு அதனால கூட்டிட்டு வந்தேன் என்று சொல்கிறார்.
சிக்கும் கதிர்
அதற்கு பழனி எங்க அண்ணன் வேற மாதிரி சொன்னாரு, அவரு நடந்து வந்து கொண்டிருக்கும் போது தலைசுத்து வந்ததாகவும் அப்போ நீ தான் கூட்டிட்டு வந்ததாகவும் சொன்னாரு என்று சொன்னதும் ஏதோ பேசி சமாளித்து விட்டு கதிர் அங்கிருந்து டக்குனு போய் விடுகிறார். அப்போது ராஜி அங்கு வர ராஜிடமும் கதிருடைய நடவடிக்கை இப்போ சரி இல்லை என்று பழனி பேசிக் கொண்டிருக்கிறார்.

மன்னிப்பு கேட்ட சரவணன்
அதைத்தொடர்ந்து சரவணன் பாண்டியனிடம் தங்கமயில் குழந்தை பற்றி சொன்னபோது தான் தவறாக பேசியது குறித்து மன்னிப்பு கேட்கிறார். அந்த நேரத்தில் அங்கு வந்த கோமதி நீ ஒரு பொண்ணு கூட பேசிட்டு இருக்கியாமே ஊர்ல எல்லாரும் என்கிட்ட சொல்றாங்க... இத்தன நாளா உன்கூட ஒரு பொண்ணு வாழ்ந்துட்டு வீட்டை விட்டு வெளியே போய் இருக்கா அவ போய் நாலு மாசம் கூட ஆகல அதற்குள்ள நீ இன்னொரு பொண்ணு கிட்ட பேசிட்டு இருக்க இது தப்பு இல்லையா? இப்ப உனக்கு ஒரு குழந்தை வரப் போகுது இந்த நேரத்தில் நீ இன்னொரு பொண்ணிடம் பேசுவது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல.
கோமதி கேட்ட கேள்வி
இனி அந்த பொண்ணு கூட பேசினா நடக்கிறதே வேற என்று மிரட்டி விட்டு போகிறார். அடுத்ததாக சரவணன் அஞ்சலிக்கு போன் பண்ணி வீட்டில் நடந்த விஷயங்களை பற்றி சொல்கிறார். அப்போது அஞ்சலி உங்க வீட்டில் இனி தங்கமயில் கூட சேர்ந்து வாழ சொன்னா நீ என்னை விட்டுட்டு போயிருவியா என்று சென்டிமென்ட் ஆக பேச அதற்கு அப்படியெல்லாம் போகமாட்டேன் என்று சரவணன் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

கதிருக்கு வந்த சந்தேகம்
அந்த நேரத்தில் ராஜி இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த கதிரிடமும் உங்க அண்ணனுடன் நடவடிக்கை சரியில்லை என்று ராஜி சொல்ல உடனே கதிர் நானே அண்ணன் கிட்ட பேசுறேன் என்று சரவணனிடம் போய் பேசுகிறார். அப்போது நீ யார் கிட்ட பேசிட்டு இருக்க என்று கதிர் கேட்டதும், உனக்கு தெரிஞ்ச பொண்ணு தான் அஞ்சலி என்று சரவணன் சொல்ல கதிர் அதிர்ச்சியாகி நீ முன்னாடி லவ் பண்ணுனியே அந்த பொண்ணு தானா என்று கேட்கிறார்.
அதற்கு சரவணனன் ஆமா இப்ப என்னை மாதிரி தான் அவளோட வாழ்க்கையும் இருக்கு. எனக்கு அவ ஆறுதல், அவளுக்கு நான் ஆறுதலா இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications