Pandian Stores 2 Episode: அரசியின் திடீர் முடிவு! சோகத்தில் குடும்பம்! பாண்டியனின் பிடிவாதம்
சென்னை, ஆகஸ்ட் 14, 2025: விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில், இன்று, பாண்டியனின் பிடிவாதமான முடிவும், ராஜி, கதிரின் காதல் சண்டையும், ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க வைத்துள்ளது. இந்த எபிசோடில், சக்திவேலின் பிடிவாதமும், குடும்ப கெளரவத்திற்காக, குமாரை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று, பெரியவர்கள் சொல்வதும், ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில் - மீனாவின் காதல்
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், செந்தில், மீனாவைப் பார்த்து, "எனக்கு இன்னும் ஒரு நாலு நாளில் சம்பளம் வரப்போகுது. உனக்கு என்ன வேணும் என்று சொல்லு, வாங்கித் தருகிறேன்," என்று சொல்கிறார். ஆனால், மீனா, "எனக்கு எதுவுமே வேணாம்," என்று மறுத்துவிடுகிறார். பின்னர், "சம்பளம் வர்றதுக்கு இன்னும் கொஞ்சம் நாள் இருக்கு. அதுக்குப் பிறகு யோசிப்போம்," என்று சொல்கிறார்.
ராஜி - அரசியின் பேச்சு
மறுநாள் காலையில், ராஜி, அரசியைப் பார்த்து, "நல்லா தூங்கினியா?" என்று கேட்கிறார். அதற்கு அரசி, "நல்லா தான் தூங்கினேன்," என்று சொல்கிறார். பின், அரசி, ராஜியிடம், "உங்க அண்ணனுக்கு எதிராக இன்னைக்கு கோர்ட்டில் பேசப்போறேன் என்று நீங்க ஏதும் நினைக்கிறீர்களா?" என்று கேட்கிறார்.
ராஜியின் ஆதரவு
அதற்கு ராஜி, "நீ அவன் செஞ்ச துரோகத்தை பேசுறதை நினைத்து, எனக்கு சந்தோஷமாத் தான் இருக்கு," என்று சொல்கிறார். இது, ராஜி, கதிர் மீதும், அரசி மீதும், வைத்திருக்கும் அன்பை, உணர்த்துகிறது. குமார் மீது கொடுத்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு போவதற்கு அரசி மற்றும் குடும்பத்தினர் தயாராகி கொண்டிருக்கின்றனர்.
கோபத்தில் சக்திவேல்
சக்திவேல், முத்துவேலைப் பார்த்து, "உங்க பொண்ணு வீட்டுக்கு வர்றதுக்காக என்னவெல்லாம் செய்தீங்க. அதில கொஞ்சமாவது என் பையனுக்காக செய்தீங்களா?" என்று கேட்கிறார். அதற்கு முத்துவேல் நான் குமாரை வெளியே கொண்டு வருவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்து கொண்டு தான் இருந்தேன் நீ எதுவும் தெரியாமல் பேசிகிட்டு இருக்க என்று சொல்கிறார்.
மறுபக்கத்தில் சரவணன், அரசியிடம், "கோர்ட்டில் என்ன பிரச்சனை என்றாலும், உடனே எனக்கு கால் பண்ணு," என்று சொல்கிறார். பின், சக்திவேலின் அம்மா, பாண்டியனிடம், "குடும்ப கெளரவத்திற்காக, நீங்க குமார் மேல கொடுத்த புகாரை, திரும்ப வாங்கிக்க," என்று சொல்கிறார். ஆனால், பாண்டியன், "இந்த விஷயத்தில மட்டும் நான் உங்க பேச்சைக் கேட்க மாட்டேன்," என்று உறுதியாக மறுத்துவிடுகிறார்.
இவ்வாறு, பாண்டியனின் பிடிவாதமும், சக்திவேலின் வருத்தமும், குடும்பத்தில் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குடும்பப் பிரச்சனைகள், அடுத்தடுத்த எபிசோட்களில், எப்படித் தீர்க்கப்படுகின்றன என்பதை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications