Pandian Stores : மனம்மாறும் குமார்! ராஜியிடம் சித்தி கேட்ட விஷயம்! பாண்டியன் குடும்பத்துக்கு வரும் பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 2025 ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கான எபிசோட் கதிர் மற்றும் ராஜி நடவடிக்கையை பார்த்து குமார் மனம் மாறுகிறார். அதே நேரத்தில் குமார் குடும்பத்தில் புது பிரச்சனையும் வெடிக்கிறது. அதை வைத்து குமாருடைய அம்மா ராஜியிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்று வைத்திருக்கிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கதிர் ராஜிக்கு ட்ரெயினிங் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பின் ராஜி கதிரைப் பார்த்து இன்றைக்கு ஒரு மாதிரி டயர்டா இருக்கு என்கிறார். அதைக் கேட்ட கதிர் என்ன சாப்பிட்டாய் என்று கேட்க அதற்கு ராஜி லெமன் சாதமும் உருளைக்கிழங்கு ப்ரை சாப்பிட்டதாக சொல்கிறார் பிறகு ராஜி சோகமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து என்ன கிழவி மாதிரி சொல்லுற என்று கதிர் கேட்கிறார். மேலும் இனிமேல் உன்னுடைய டயட்டை மாற்ற வேண்டும் என்கிறார். அப்போது அங்கு வரும் குமார் இவங்க ரெண்டு பேரும் பேசிக் கொண்டிருப்பதை கொண்டிருக்கிறதைப் பார்த்த குமாரவேல் ரொம்பவே கவலைப்படுறார்.

பீல் பண்ணும் சக்திவேல்
இதனைத் தொடர்ந்து வடிவு குமாரைக் காணவில்லை என்று சொல்லுறார். அதைக் கேட்ட சக்திவேல் குமாரை நினைத்தால் ரொம்ப பயமாகிடக்கு என்று தன்னுடைய அண்ணனிடம் சொல்லுறார். அதைக் கேட்ட சக்திவேலோட மனைவி ஏன் இப்புடி எல்லாம் பேசுறீங்க என்று கேட்கிறார். பின் இதுக்கெல்லாம் காரணம் அந்த பாண்டியனோட மகள் என்று கோபமாக சொல்லுறார் சக்திவேல்.
குமாருக்கு அடுத்த கல்யாணம்
இதனை அடுத்து சக்திவேல் திரும்ப குமாருக்கு கல்யாணம் பண்ணி வைப்போம் என்கிறார். அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். பின் சக்திவேலுவின் அம்மா வேற பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கு பதிலா அரசியை கல்யாணம் பண்ணி வைக்கலாம் என்கிறார். அதைக் கேட்ட சக்திவேல் ரொம்பவே கோபப்படுறார். அதற்கு சக்திவேலின் அண்ணன் இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் சக்திவேல் மீது கேஸ் நடந்துட்டு இருக்கு, அதனால் என்ன மாதிரி தீர்ப்பு வரும்னு தெரியல. அதுவரைக்கும் பார்த்து முடிவு பண்ணலாம் என்று சொல்கிறார்.

குமார் அம்மா கேட்ட விஷயம்
அதைத் தொடர்ந்து சுகன்யா ராஜியைப் பார்த்து உங்க வீட்டுக் கதை ஏதும் உனக்குத் தெரியுமா என்று கேட்கிறார். மேலும் உன்னுடைய வீட்ட நினைத்து உனக்கு கஷ்டமா இல்லையா என்று கேட்கிறார் சுகன்யா. அதைக் கேட்ட ராஜி எனக்கும் கஷ்டமா தான் இருக்கு என்று சொல்லுறார். பின் ராஜி குமாரோட அம்மாவிடம் கோவிலில் சந்தித்து பேசுகிறார். அந்தநேரம் குமாரின் நிலைமையை பார்க்க பயமா இருக்கு என்று சொல்லி கதறி அழுகிறார் குமாரோட அம்மா. அதோடு அரசி கொடுத்த கேஸை வாபஸ் வாங்குவதற்காக பாண்டியனிடம் பேச சொல்லி குமாரின் அம்மா கெஞ்சி கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications