Pandian Stores: ராஜி - கதிர் உறவு எப்படி? சரவணனுக்கு ஷாக் கொடுத்த கதிர்! குமாருக்கு பதில் இனி வில்லன் இவரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தொடரின் இன்றைய எபிசோடு, ராஜியின் கடந்த காலம் குறித்துக் கதிர் அளித்த பதில்களால் சுவாரஸ்யமாக அமைந்தது. ராஜியின் மீது கதிர் கொண்டுள்ள அன்பும், முத்துவேல் சந்திப்பும் இந்த எபிசோடின் முக்கிய அம்சங்கள்.

மீனா - கோமதியின் பதற்றம்
நேற்றைய எபிசோடில் ராஜியின் கடந்த கால உண்மை வெளிவந்த நிலையில், இன்றைய எபிசோடில் மீனா மற்றும் கோமதி இருவரும் தங்கள் கணவர்களிடம் எதுவும் உளறக் கூடாது என்ற எண்ணத்துடன் ரூமிற்குச் செல்கின்றனர். பாண்டியன் கதிர் குறித்துப் பெருமையாகப் பேச, கோமதி எதுவும் சொல்ல முடியாமல், "ஆமாங்க, ஆமாங்க," என்று மட்டுமே கூறுகிறார். அதுபோலவே, செந்திலும் கதிர் குறித்துப் பெருமையாகப் பேச, மீனாவும் "அதாங்க, ஆமாம்," என்று சமாளிக்கிறார். பாண்டியன், "என்னடி ஆமாம்னு சொல்லிட்டு இருக்க," என்று கேட்க, கோமதி, "வேற என்ன சொல்றதுன்னு தெரியலை," என்று தவிப்புடன் சொல்கிறார்.
காதலில் சிக்கிய கதிர்
அடுத்த நாள் காலையில், செந்தில் மற்றும் சரவணன் கதிரிடம், "ஏன் எங்களின் காதலுக்கு உதவி செய்யவில்லை?" என்று விசாரிக்கின்றனர். "நான் மீனாவுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செஞ்சு கொடுத்தேனே, எவ்வளவு?" என்று செந்தில் கேட்க, "149" என்கிறார் கதிர். "நான் காதலித்த பெண்ணை முதல்முறையா எங்கே அழைச்சிட்டு போனேன்?" என்று சரவணன் கேட்க, "கோயில்" என்கிறார் கதிர்.
"அப்போ ஏன் எங்களிடம் இதைச் சொல்லலை?" என்று கேட்க, "சொல்லத் தோணலை," என்கிறார் கதிர். "சொல்லியிருந்தால் நீ நல்லவனா மாறியிருப்பியே," என்று கேட்க, "அது சரி, ஆனா ராஜி என்ன ஆகியிருப்பா?" என்று கதிர் கேட்க, செந்தில் மற்றும் சரவணன் ஆச்சரியத்துடன், "ராஜியுடன் இப்போ உன் ரிலேஷன்ஷிப் எப்படி இருக்கு?" என்று கேட்கின்றனர். இதற்குப் பதிலளிக்காமல், "ராஜிக்கு டைம் ஆச்சு. அவளை அழைச்சிட்டு வரப்போறேன்," என்று கதிர் கூறிவிட்டுச் செல்கிறார்.
ராஜியைச் சந்தித்த முத்துவேல்
கதிர், ராஜியைப் பார்க்க வரும்போது, ராஜி "பைக் எங்கே?" என்று கேட்கிறார். "எல்லாரும் கலாய்ச்சாங்க. அதான் பைக்கை எடுத்துட்டு வராம நடந்து வந்துவிட்டேன்," என்று கதிர் சொல்கிறார். பின்னர் ராஜி மற்றும் கதிர் பேசிக்கொண்டு நடந்து செல்கின்றனர். அப்போது பாட்டு கேட்டுக்கொண்டே வரும் ராஜியை கதிர் கண்டித்துக்கொண்டிருக்கிறார். அதற்கு ராஜி, "சரி அங்கிள்," என்று கிண்டல் செய்கிறார்.

அப்போது அங்கு முத்துவேல் வர, ராஜி மற்றும் கதிர் இருவரும் ரோட்டில் நின்றுவிடுகின்றனர். முத்துவேல் சற்று தள்ளி வந்து நிற்க, ராஜி முத்துவேல் அருகில் சென்று நிற்கிறார். இந்தத் தருணத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அதோடு ராஜியும் முத்துவேலுவும் ரோட்டில் பேசுவதை முத்துவேலுவின் தம்பி சக்திவேல் பார்க்கிறார். இதனால் இனி குமாருக்கு பதில் சக்திவேல் தான் வில்லனாக பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications