பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 : சுகன்யா செய்யும் சூழ்ச்சி, பரிதாப நிலையில் தங்கமயில்! கோமதி பேசுவது நியாயம் இல்லையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை, ஆகஸ்ட் 19, 2025: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலின் இன்றைய எபிசோடில், தங்கமயில் கர்ப்பமாக இல்லை என்ற உண்மை வெளிவந்ததால், சரவணன் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினரும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவித்தனர்.

Pandian Stores Vijay TV

குடும்பத்தின் சோகம்

கடந்த வாரம், தங்கமயில் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து, குடும்பமே கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. சரவணன் அவருக்கு புடவை வாங்கி கொடுத்தார். கேக் வெட்டி கொண்டாடினர். ஆனால், மருத்துவப் பரிசோதனையில், தங்கமயில் கர்ப்பமாக இல்லை என்பது தெரியவந்தது. பிரக்னன்சி கிட் தவறான ரிப்போர்ட் கொடுத்தது என்று டாக்டர் சொல்லிவிட்டார். மருத்துவரின் இந்த அறிவிப்பு, குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. வீட்டிற்கு வந்த பிறகும் அனைவரும் அழுது கொண்டே இருந்தனர். (உண்மையில் கரு கலைந்திருந்தால் கூட வருத்தப்படலாம். ஆனால், கர்ப்பமே ஆகாததற்கு குடும்பம் முழுவதும் அழுது கொண்டிருப்பது கொஞ்சம் வினோதமாக இருந்தது.)

பாண்டியனின் ஆறுதல்

இந்த சோகத்தில் கடைக்கு வந்த சரவணனுக்கு பாண்டியன் ஆறுதல் கூறுகிறார். அவரை டீ கடைக்கு அழைத்துச் சென்று டீ வாங்கி கொடுத்து சமாதானப்படுத்துகிறார். வீட்டிற்கு வந்த பாண்டியன், கோமதிக்கு ஆறுதல் கூறுகிறார். மருத்துவமனையில் நடந்தது என்னவென்று கோமதி பாண்டியனிடம் சொல்லி அழுதார். "மருத்துவர், தங்கமயில் பலவீனமாக இருக்கிறார். அவரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அவர் குழந்தை இல்லை என்று சொல்லிவிட்டார்" என்று கூறி கோமதி வருத்தப்பட்டார்.

தங்கமயிலுக்கு ஆறுதல்

பாண்டியன் தங்கமயிலை அழைத்து அவருக்கு ஆறுதல் கூறினார். சரவணன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என தங்கமயில் வருத்தப்பட்டார். வழக்கம்போல சுகன்யா தனது கணவர் வீட்டில் நடந்த விஷயங்களை எதிர் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிடுகிறார். இதனால் சிலருக்கு வருத்தம் ஏற்பட்டாலும் மற்றவர்கள் கேலியும் கிண்டலும் செய்தனர். குமரவேல் ஜெயிலுக்கு சென்று வந்ததிலிருந்து ஒரு மாதிரியாக இருப்பதாக குடும்பத்தினர் பேசிக் கொண்டனர்.

அடுத்த எபிசோடில் என்ன நடக்கும்

இன்றைய எபிசோட் தங்கமயிலுக்கு ஆறுதல் கூறுவதோடு முடிவடைகிறது. நாளை, சரவணன் மற்றும் தங்கமயில் தொடர்பான காட்சிகள் இடம் பெறும் என தெரிகிறது. முதலில் குடும்பத்தினர் அனைவரும் சரவணனிடம் பேசுவார்கள். அதன் பின்னர் இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிய நாம் நாளை வரை காத்திருக்க வேண்டும்.

ஆனால் நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் தங்கமயில் அழுது கொண்டிருக்கும் நேரத்தில் கதிர் அங்கு வருகிறார். கதிரை பார்த்ததும் தங்கமயில் கதிரை கண்டுபிடித்து அதற்கு நீ இன்னும் எத்தனை பொய் தான் என்கிட்ட சொல்லுவா? என்று சொல்லிவிட்டு கையை தட்டி விட்டு போகிறார். ஏற்கனவே தங்கமயில் படிப்பு விஷயம் கதிருக்கு தெரிய வந்திருக்கும் நிலையில் இப்போது கர்ப்பமான விஷயத்திலும் தங்கமயில் பொய் சொல்லி இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். இதனால் பெரிய பூகம்பமே வரப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+