பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் அம்மா போட்ட சபதம், மன்னிப்பு கேட்ட பாண்டியன்! சரவணன் சொன்ன விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 டிசம்பர் 16ஆம் தேதிக்கான எபிசோடில் வீட்டை விட்டு வெளியே அனுப்பிய மயிலை மீண்டும் அதே வீட்டிற்குள் வாழ வைப்பேன் என்று மயிலின் அம்மா சபதம் போட்டிருக்கிறார். அதேபோல பாண்டியன் சரவணனிடம் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். பாண்டியன் செயலைப் பார்த்து மொத்த குடும்பத்தினரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மயில் பற்றிய உண்மைகளை தெரிந்ததும் அவரை வீட்டை விட்டு துரத்தி இருக்கின்றனர். இந்த நேரத்தில் சக்திவேல் பாண்டியனுக்கு எதிராக மயில் குடும்பத்தை திருப்புகிறார். போலீஸ் ஸ்டேஷனில் பாண்டியன் குடும்பத்தின் மீது கம்ப்ளைன்ட் கொடுங்க, அதுவும் வரதட்சணை கம்பளைண்ட் கொடுங்க என்று ஏற்றி விட இதனால் கடுப்பான பாண்டியன் செந்தில் குடும்பத்தை வைத்து இப்போது மீண்டும் ஒரு பெரிய பூகம்பமே வெடித்திருக்கிறது.

தன்னால் இவ்வளவு பிரச்சனை நடந்திருந்தாலும் திருந்தாத மயில் வழக்கம் போல சரவணனிடம் சென்று என்னை மன்னிச்சிடுங்க மாமா என்று கெஞ்சி இருந்தார். இதனால் கடுப்பான சரவணன் உன்னால தான் இந்த வீட்ல எல்லா பிரச்சனையும் வந்தது. மரியாதையா இங்கிருந்து கிளம்பு என்று ஷாக் கொடுத்திருக்கிறார். அப்போது மயிலின் அம்மா பாக்கியம் என் பொண்ணை வீட்டைவிட்டு துரத்துற நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க என்று சாபம் கொடுத்துவிட்டு தன்னுடைய மகளை கூட்டிக்கொண்டு போகின்றார்.
இன்றைய எபிசோடில் கோமதியின் அண்ணன் குடும்பத்துடன் சண்டை போட்டுவிட்டு பாண்டியன் குடும்பத்தினர் எல்லோரும் அமைதியாக வீட்டிற்குள் போகின்றனர். வீட்டிற்குள் போய் யாருமே பேசாமல் ஆளுக்கு ஒரு பக்கமாக சோகத்தில் இருக்கின்றனர். அப்போது செந்திலும், கதிரும் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டு வருகின்றனர்.
எல்லோரையும் சாப்பிட கூப்பிட பாண்டியனும் கோமதியை கூப்பிடுகிறார். அதற்கு கோமதி ஏற்கனவே அவளால மனசு நிறைஞ்சு போச்சு இதுல வயிறு நிறையனுமா என்று வேதனையோடு பேசுகிறார். பிறகு பாண்டியன் நான் உங்க அத்தையை கூட்டிட்டு வரேன் நீங்க எல்லாரும் போய் உட்காருங்க என்று மற்ற இரண்டு மருமகள்களையும் சாப்பிட அனுப்பி வைக்கிறார்.
பிறகு கோமதியை கூட்டிக்கொண்டு வந்து சாப்பிட உட்கார வைக்கும்போது சரவணன் சோகமாக உட்கார்ந்து இருப்பதை பார்க்கிறார். சரவணனிடம் போய் நீ எதுவும் கவலைப்படாதடா. என்னால தான் எல்லாம் தப்பும். நானே இது சரி பண்றேன் டா. எல்லா தப்பையும் பண்ணிட்டு அவங்களே இவ்வளவு திமிரா பேசிட்டு இருக்கும்போது நீ ஏன் கவலைப்படுற என்று ஆறுதல் சொல்கிறார்.
அப்போது நான் அவங்களை பற்றி விசாரிக்காமல் கல்யாணம் பண்ணி வச்சது தப்பு தாண்டா என்ன மன்னிச்சிடு என்று பாண்டியன் சொன்னதும், சரவணன் பெருந்தன்மையாக பேசுகிறார். மறுபக்கத்தில் மயில் அழுது கொண்டே நடந்து வரும் போது, திடீரென மயக்கம் அடைந்துவிட அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்து அப்பாவும் அம்மாவும் ஆறுதல் சொல்கின்றனர்.
அப்போது மயிலுக்கு குழலி வீட்டை விட்டு வெளியே தள்ளியது ஞாபகத்துக்கு வர மயில் நான் வீட்டுக்கு போறேன் என்று மீண்டும் அழுது கொண்டிருக்கிறார். அவளிடம் அங்கிருந்து உன்னை துரத்திட்டாங்க நீ இப்ப நம்ம வீட்டுக்கு வா அவங்களை என்ன பண்ணனுமோ அதை பண்ணலாம் என்று பாக்கியா வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வருகிறார். வீட்டுக்கு வந்த பிறகும் மயில் அழுது கொண்டே இருக்க அவர்களுடைய தங்கச்சி சமாதானம் செய்கிறார்.
அப்போது நீ அழாத நாம அவங்கள பத்தி விசாரிச்ச மாதிரி அவங்க நம்மளை பத்தி விசாரிச்சு கல்யாணம் பண்ணி இருக்கணும். அதை பண்ணாம இப்ப நம்ம மேல குறை சொல்றாங்க. அவங்களுக்கு சரியான தண்டனை நான் கொடுக்கிறேன். இன்னும் ரெண்டே நாளில் உன்னை அந்த வீட்டில் மீண்டும் வாழ வைக்க போறேன் என்று ஒரு பாக்கியா சவால் விடுகிறார். மறுபக்கத்தில் பாண்டியன் நான் கோயிலுக்கு போயிட்டு வரேன் சரவணனை பத்திரமா பாத்துக்கோங்க என்று கோமதியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று நாளைக்கான எபிசோடில் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications