பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் பற்றிய இன்னொரு உண்மையை சொல்ல போகும் ராஜி.. கோமதி கேட்ட கேள்வி, அழுத கதிர்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 டிசம்பர் 18ஆம் தேதிக்கான எபிசோடில் கோமதி தன்னுடைய மருமகளிடம் நீங்கள் ஏதாவது பொய் சொல்லி இருக்கீங்களா? என்று கோபமாக கேட்க, அதற்கு மீனாவும் ராஜுயும் அதிர்ச்சியடைகின்றனர். அதே நேரத்தில் சரவணனுக்காக செந்தில் தன்னுடைய முடிவை மாற்றி இருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அரசி தனியாக இருக்கும் தன்னுடைய அண்ணன் சரவணனுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார். உன்னை பார்க்க கஷ்டமாக இருக்கு நீ பாவம் அண்ணேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, சரவணன் எனக்கு எதுவும் இல்ல அரிசி... கொஞ்ச நேரம் நான் தனியா இருக்கணும் நீ போ அம்மா கூட இரு என்று அனுப்பி வைக்கிறார்.

பிறகு செந்திலிடம் வந்து அரசி மோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார். நம்ம வீட்ல அடுத்தடுத்து பிரச்சினை நடந்துட்டு இருக்கு நான் முதலில் ஒரு பிரச்சனையை கொண்டு வந்து அதனால எல்லோரும் கஷ்டப்பட்டாங்க. அப்புறம் நீங்க வீட்டை விட்டு போனீங்க.. இப்போ சரவணன் அண்ணனுக்கு இப்படி ஒரு பிரச்சனை என்று அழுது கொண்டிருக்கிறார். அதைக் கேட்டது செந்திலும் வருத்தப்படுகிறார்.
அப்போது நீ இப்போ வீட்டுக்கு போயிடுவியா அண்ணே? என்று அரசி சோகமாக கேட்க, செந்தில் நான் எங்கேயும் போகல இங்கே இருக்க போறேன் என்று சொல்கிறார். அதைக் கேட்டு அரிசி நிம்மதி அடைகிறார். பிறகு செந்தில் ரூமுக்கு போகும்போது மீனா கோட்டர்ஸ் கிளம்பலாமா? டைம் ஆச்சு என்று கேட்க, அதற்கு செந்தில் நாம இன்னிக்கு இங்கேயே இருக்கலாம், அண்ணன் முகத்தை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது என்று சொன்னதும் நானும் இதைத்தான் சொல்லணும்னு நினைச்சேன் ஆனா நீங்க திட்டுவீங்க என்று தான் உங்ககிட்ட வந்து என்று சொல்கிறார்.
அதற்கு செந்தில் வீட்ல எல்லோரும் கஷ்டத்தில் இருக்கும்போது நாம தனியாக போய் சந்தோஷமா இருக்குற அளவுக்கு நான் மோசமானவன் கிடையாது என்று சொல்கிறார். மறுபக்கத்தில் கதிர் பழனியை பார்ப்பதற்காக கடைக்குப் போகிறார். அங்கு வீட்டில் நடந்த விஷயத்திற்கு மன்னிப்பு கேட்டு அப்போது பழனி, கதிருக்கு ஆறுதல் சொல்லி சரவணன் வாழ்க்கையே அடுத்து என்ன நடக்கணுமோ அதை பாக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது கதிர் அழுது கொண்டிருக்கிறார்.
அடுத்ததாக மயில் வீட்டில் மயில் அழுது கொண்டிருக்கும் போது அவருடைய அம்மா வந்து, உனக்கு ஒரு பொய் சொன்னா அதை சரியா மெயின்டைன் பண்ண தெரியல என்று மயில் மீது பழியை போட, அதனால் கோபமான மயில் என் வாழ்க்கை இப்படி ஆனதுக்கு காரணமே நீதான் என்று அவரை திட்டியிருக்கிறார். மறுபக்கத்தில் கோமதி, மீனா, அரசி, ராஜி என நான்கு பேரும் ஒன்றாக படுத்து நடந்த விஷயத்தை நினைத்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
அதேபோல மாடியில் செந்திலும், கதிர், சரவணன் எல்லோரும் சோகமாக படுத்து இருக்கின்றனர். அப்போது சரவணன் வீட்டில் இருக்கவங்களுக்கு உண்மை தெரிஞ்சா கஷ்டப்படுவாங்களேன்னு தான் நான் சொல்லாமல் இருந்தேன் ஆனா இப்போ எல்லா உண்மைகளையும் சொல்லியதால் மனசு ரொம்ப நிம்மதியா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
கடைசியாக கோமதி தன்னுடைய இரண்டு மருமகளிடம் நீங்க எதுவும் உண்மையை சொல்லாம ஏமாற்றி இருக்கீங்களாடி என்று கேட்க, ராஜி மற்றும் மீனா இருவரும் அதிர்ச்சியாகின்றனர். இனி தங்கமயில் நகை பற்றிய உண்மைகளை சொல்ல போகிறார்களா? இல்லையா? என்பது நாளைக்கான எபிசோடில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications