பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயிலுக்கு தெரிய வந்த சூழ்ச்சி.. இன்ஸ்பெக்டர் கேள்வியால் அதிர்ந்த சக்திவேல்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 டிசம்பர் 30ஆம் தேதிக்கான எபிசோடில் மயிலின் அம்மா பொய் கம்ப்ளைன்ட் கொடுத்த விஷயம் மயிலுக்கு தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொன்ன விஷயத்தை கேட்டு கோமதியின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சரவணன் மயில் பற்றிய உண்மைகளை குடும்பத்திடம் சொல்லி இருந்தார். இதனால் குடும்பத்தினர் எல்லோரும் மயில் மீது கோபத்தில் இருக்கும் போது சரவணன் மயிலை வீட்டை விட்டு துரத்திவிட்டு இருந்தார். அதோடு டைவர்ஸ் நோட்டீசும் அனுப்பி இருந்தார். இதனால் தன்னுடைய மகள் விவாகரத்தை தடுத்து நிறுத்த மயிலுக்கு தெரியாமலேயே மயிலுடைய அம்மா பாண்டியன் குடும்பத்தினர் மீது வரதட்சனை புகார் கொடுத்திருக்கிறார்.

மயில் அம்மா கொடுத்த புகாரால் பாண்டியனின் மொத்த குடும்பத்தையும் போலீஸ் அரெஸ்ட் செய்து கூட்டிக்கொண்டு போய் இருக்கின்றனர். இதனால் தன்னுடைய தங்கைக்காக சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்திருக்கின்றனர். அப்போது கோமதி தன் அண்ணன் முத்து வேலுவை பார்த்து எங்க நிலைமையைப் பார்த்தியா அண்ணா என்று கேட்டு அழுது கொண்டு இருக்கிறார்.
அதை பார்த்த சக்திவேல் என்ன பிரச்சினை என்று சொன்னால் தானே தெரியும் என்று சொல்ல, கோமதி எனக்கும் ஒன்னும் புரியல ஆனா, நாங்க சாமி சத்தியமா எந்த தப்பும் பண்ணல என்று கோமதி அழுதுகொண்டே இருக்கிறார். அப்போது முத்துவேல் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுகிறார்.
அப்போது சக்திவேல் பெண்களை வீட்டில வைத்து விசாரிச்சா போதாதா ஸ்டேஷன் வரைக்கும் கூட்டிட்டு வரணுமா என்று கேட்க, அதற்கு இன்ஸ்பெக்டர் அவங்க மருமக வீட்டில் இருந்துதான் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க. நாங்க எங்களுடைய வேலையை செய்கிறோம். இவங்க மேல தப்பு இல்லை என்றால் இவங்க எதற்காக பயப்படனும்? இது பொய் கம்ப்ளைன்ட் என்றால் அதற்கு சரியான ஆக்சன் நாங்க எடுப்போம் என்று இன்ஸ்பெக்டர் சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து முத்து வேலை இங்கிருந்து போங்க என்று இன்ஸ்பெக்டர் சொல்கிறார். மறுபக்கத்தில் பாக்கியம் மயிலிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது நீ பயப்படாத விவாகரத்து நடக்காமல் இருக்க என்ன பண்ணனுமோ அதை செஞ்சுட்டு வந்துட்டோம் என்று சொல்கிறார். அப்போது மயில் என்ன விஷயம் பண்ணுனீங்க என்று கேட்க, போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்த விஷயத்தை பற்றி சொல்கிறார்.
Pandian Stores 2 serial promo: கோமதி குடும்பத்திற்காக வந்த அண்ணன்கள்.. அதிர்ச்சியில் பாண்டியன்!
இதை கேட்டதும் மயில் அதிர்ச்சியாகி ஏன் இப்படி எல்லாம் செஞ்சீங்க? அவங்க எந்த தப்புமே பண்ணல. அப்புறம் எப்படி அவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்கிறது? நாமதானே தப்பு பண்ணுனோம் என்று மயில் கேட்க, அதற்கு பாக்கியா அவங்க வழியில் போய் தான் நாம இந்த பிரச்சனையை முடிக்கணும் என்று சொல்கிறார். அதற்கு மயில் நாம இப்படி பொய் கம்ப்ளைன்ட் கொடுக்கறது எல்லாம் ரொம்ப தப்புமா என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கத்தில் குமார் பழனியிடம் போய் கோமதி வீட்டில் இருந்த எல்லாரும் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க என்று சொல்கிறார். அதைக்கேட்டு பழனி உடனே ஸ்டேஷனுக்கு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
அந்த நடிகர் என் நகையை ஏமாற்றி விட்டார்... பிக் பாஸ் தாமரை செல்வி கண்ணீர் வீடியோ! சீரியல் பழக்கம் சீரியஸானது! -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
சிறகடிக்க ஆசை: முத்து கண்டுபிடித்த உண்மை, சிக்கும் விஜயா! மீனாவுக்கு இனி தான் கம்பேக்.. செம சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications