Pandian Stores 2: பாண்டியன் ஸ்டோர்ஸை அழிக்க சுகன்யா செய்த செயல்! அதிர்ச்சி கொடுத்த பழனி, கோபத்தில் சரவணன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியல் இன்றைய எபிசோடு ரொம்பவே உணர்ச்சிப் பூர்வமான சண்டைகளோடும், அதே சமயம் வியாபாரப் போட்டியோடும் போயிருக்கு. சரவணன் அவனோட அப்பா பாண்டியன்கிட்ட கோபமாப் பேசுனது மற்றும் சுகன்யா கடை வியாபாரத்தை கெடுத்தது மாதிரி பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கு. அதைப் பற்றி விரிவா பார்க்கலாம்.

Pandian Stores serial vijay tv

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயிலோட வயது உண்மை வெளியானதுக்கு அப்புறம், சரவணன் இன்னும் கோபத்தில்தான் இருக்காரு. மயிலோட அப்பா கடைக்கு வரவும், சரவணன் கடுங்கோபம் அடைஞ்சு எதுக்கு இந்தாளு வந்தாரு, முதலில் கிளம்பச் சொல்லுனு ஆத்திரப்படுறார். மயில் அப்பாவை வெளியில கூட்டிட்டுப் போன அப்புறமும் சமாதானம் ஆகாமல், மயிலைப் பார்த்து "நீயும் கிளம்பு, என் கண் முன்னாலேயே இருக்காத. கடையிலாவது என்னை நிம்மதியா இருக்க விடுனு கத்தி அனுப்பி வைக்கிறார்.

பாண்டியனின் மன வருத்தம்

இந்த சண்டையை பாண்டியன் நேரடியாப் பார்க்க, மயிலை ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார். அதுக்குப்பின் சரவணனைக் கண்டமேனிக்கு திட்ட ஆரம்பிக்கிறான் பாண்டியன். பாண்டியன் திட்டுனதை ஏற்காத சரவணன், அப்பாவிடம் என்னோட பிரச்சனையைச் சொல்ல முடியாத நிலைமைல இருக்கேன். சொன்னால் மட்டும் என்ன பண்ணிருவீங்க நீங்க? என் பிரச்சனையை நான் பார்த்துக்குறேன் னு பாண்டியனோட முகத்தில அறைஞ்சது மாதிரி பேச பாண்டியன் அதிர்ச்சியில அமைதியாகிறான்.

சுகன்யாவின் சதி

ஒரு பக்கம் பாண்டியன் வீட்டு பிரச்சனையில் இருக்க, மறுபக்கம் புதிய கடை திறந்த சுகன்யா பாண்டியன் கடையோட வியாபாரத்தைக் கெடுக்கிறாள் (சுகன்யாதான் இப்போ புதுக் கடையோட முக்கியப் பொறுப்பில் இருக்கிறாள்). குமாருடன் கடையில் இருக்கும் போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குப் போய்க்கிட்டு இருக்கிற இரண்டு பெண்மணிகளை மறிச்சு, "எங்கக்கா போறீங்க? நம்ம கடைல பொருளெல்லாம் வாங்குங்க" னு கேட்கிறாள்.

அவங்க பாண்டியன் ஸ்டோர்ஸ்லதான் தரமா இருக்கும்னு சொல்ல, அவுங்க வாங்குற அதே இடத்துலதான் நாங்களும் எல்லாம் வாங்குறோம் அக்கா. அது மட்டும் இல்லாம ஆஃபர் எல்லாம் தர்றோம்னு ஆசைக்காட்டி தன் கடைக்குக் கூட்டிட்டுப் போறாள். இதையெல்லாம் பார்த்த பழனி சுகன்யா மேல கடும் கோபம் அடைகிறார்.

எதுக்காக இப்படியெல்லாம் பண்ற? யாருக்கும் என்னால துரோகம் செய்ய முடியாதுனு திட்ட, சுகன்யா நீங்கதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் கிளைனு சொல்லக் கூடாதுன்னு சொன்னீங்க. அதான் இப்படிப் பண்ணேன்னு சப்பைக்கட்டு கட்டுறாள். பழனி சுகன்யாவையும், அவளுக்கு ஆதரவாப் பேசுற குமாரையும் எதுவும் ஏற்காம, என் கடைக்கு வர்ற வியாபாரம் வந்தால் போதும். யாரோட தொழிலையும் கெடுத்து எனக்கு லாபம் வர வேண்டாம். இனிமேல் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை பெயரே உன் வாய்ல வரக் கூடாது னு கடுமையாக எச்சரிக்கிறான் பழனி.

வீட்டில் நடந்த பிரச்சனைகள்

கடைசியில வீட்டுக்குத் திரும்பி வந்த போது என்ன நடந்துச்சுன்னு பார்க்கலாம்: கோபத்துல அப்பாவிடம் பேசினதை நினைச்சு மன வருத்தத்துல இருக்கிற சரவணன், பாண்டியன்கிட்ட போய் நான் யார் மேலயோ இருக்கிற கோபத்துல உங்ககிட்ட பேசிட்டேன் அப்பா. மன்னிச்சுருங்கப்பானு சொல்லி மன்னிப்புக் கேட்டான். ஆனா, பாண்டியன் அவனைச் சற்றும் கண்டுகொள்ளாம அமைதியாகவே இருக்கிறான்.

மயில் வீட்டுக்கு வந்ததிலிருந்தே சோகமா இருக்கிறதால கோமதி குழப்பத்துல இருக்கிறார். பாண்டியன், சரவணன் வந்ததும் என்ன பிரச்சனைனு விசாரிக்கும்போது, பாண்டியன் கோபத்தோட அவர்ட்ட எதுவும் கேட்காதடி. இவ்வளவு நாள் நம்ம வளர்த்த பையன் இவன் கிடையாதுனு சலிச்சு பேசிட்டு போய் சாப்பிட உட்கார்றான். மயிலையும் கூட்டிட்டு போய் சாப்பிட சொல்ல, அவர் பயந்துகிட்டே சரவணன் பக்கத்துல உட்கார்றார். இதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை நாளைக்கு வரும் எபிசோடில் பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+