Pandian Stores 2: மயிலின் பாதி உண்மை தெரிந்தே கோமதி எடுத்த முடிவு! ராஜி கொடுத்த அதிர்ச்சி! பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் டிசம்பர் எட்டாம் தேதிக்கான எபிசோடில் பெரும் திருப்பம் நிகழ்ந்தது. இதுவரை சிரிப்பும் சண்டையும் கலந்து நடந்துவந்த பாண்டியன் குடும்பம், தங்கமயில் பற்றிய உண்மையை அறிந்ததும் அதிர்ச்சி அடைகிறது.
நீண்ட நாட்களாக மனதில் வைத்துவந்த துயரங்கள் அனைத்தையும் சரவணன் பாண்டியன் மற்றும் கோமதியிடம் வெளிப்படுத்தும் காட்சி ரசிகர்களை மிகுந்த உணர்ச்சியில் ஆழ்த்தியது. "நீங்க இருவரும் கஷ்டப்படுவீங்கன்னு தான் இதை மறைச்சேன்" என்று சரவணன் கதறி அழும் தருணம் சீரியலின் முக்கியமான ஹைலைட்டாக இருந்தது.

தன்னைப் பற்றிய உண்மைகள் எல்லாவற்றையும் சரவணன் சொன்னதும் யார் முகத்திலும் முழிக்க முடியாத தங்கமயில் ரூமுக்குள் ஓடிப் போய் விடுகிறார். சரவணன் "அவளோட பேரே மயில் தானா என்று எனக்கே தெரியல, இவ்வளவு விஷயத்தை மறைக்கிறாளே?" என்று வருத்தப்பட எல்லோரும் சோகமாகின்றனர்
அப்போது ராஜிக்கு திடீரென நகை சம்பவம் ஞாபகம் வருகிறது. மயிலிடம் இதைப் பற்றி பேச ரூமுக்குள் சென்ற ராஜி-அங்கு மயில் அங்கு அழுது கொண்டிருக்கிறார். ராஜ்ய பார்த்ததும், நான் வேணும்னு எதையும் மறைக்கலை... என் அம்மா, அப்பா சொன்னதை கேட்டு நடந்துக்கிட்டேன்" என்று மயில் அழுவதை பார்க்கும் போது உண்மையிலேயே மயில் மீது பரிதாபம் வரும் வகையில் தான் இருந்தது.
அப்போதுவரை அமைதியாக இருந்த கோமதி, மயிலின் பேச்சைக் கேட்டு கோபத்தில், சொக்கத்தங்கம் மாதிரியான என் பையனை ஏமாத்துறதுக்கு உங்களுக்கு எப்படி மனசு வந்துச்சு? எவ்வளவு விஷயத்தை மறைச்சுக்கிட்டு இருந்தீங்க?" என்று கோபமாக கேள்வி கேட்கிறாள். அதோடு, நாளை காலையில பார்த்துக்கோ... உன் வாழ்க்கை எப்படி திரும்பப் போகுதுனு இந்த கோமதியே காட்டுறேன்!" என்று சொல்ல மயில் பயத்தோடு இருக்கிறார்.
இத்தனை பெரிய பிரச்சனைகளுக்கிடையில், சரவணனை தன்னருகில் படுக்க வைத்த பாண்டியன், வேற யாராவது இருந்தா ஆயிரம் கேள்வி கேட்டு இருப்பாங்க. ஆனா நம்ம கஷ்டப்படக்கூடாதுன்னு இதை மனசுக்குள்ளேவச்சிருக்கிறான் என்று வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அரசியும் அதிர்ச்சியுடன் "அண்ணன் பாவம்பா!" என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்
சூழல் இப்படி இருக்க, நாளைக்கு என்று வெளியான ப்ரோமோவில் மயிலின் அப்பா அம்மாவை போன் பண்ணி வீட்டிற்கு வர சொல்லி இருக்கிறார் பாண்டியன். இதனால் மயிலை பாண்டியன் வீட்டை விட்டு வெளியே அனுப்பப் போகிறார் என்று தெரிகிறது. அதற்குப் பிறகு மயில் மற்றும் கதிர் இருவரும் மீண்டும் ஒன்று சேருவார்களா? அல்லது இந்த பிரிவு நிரந்தரமாகிவிடுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஒரு வாக்குமூலத்தால் தலைகீழான கதை! மருத்துவமனையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications