பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கோமதி எடுத்த முடிவால் கலங்கி நிற்கும் குடும்பம்.. பாண்டியனுக்கு பெரிய தண்டனை! இது தேவைதான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஏப்ரல் நான்காம் தேதிக்கான எபிசோடில், கோமதி குடும்பத்தினர் புரிந்து கொள்ளாததால் வீட்டை விட்டு வெளியே போகிறார். இதுவரைக்கும் திமிராக இருந்தால் பாண்டியன் கோமதி இடம் இப்போது கெஞ்சு கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலின் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், கோமதி வீட்டை விட்டு வெளிய போறேன் என்று சொன்னதை வீட்டில் உள்ள யாருமே நம்பவில்லை. என்னம்மா காமெடி பண்ணிட்டு இருக்க, மறுபடியும் டிராமா போட போறியா என எல்லோரும் கிண்டலடிக்கிறார். இதனால் கடுப்பான கோமதி, வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
கோமதி வெளியே போனது பார்த்ததும், ராஜியும், அரசியும் அவரை தடுத்து நிற்க்க செல்கிறார்கள். அவர்கள் பேச்சை கேட்காத கோமதி விறுவிறுவென நடையை கட்டுகிறார். உடனே சரவணன், நான் போய் அம்மாவை கூட்டிட்டு வர்றேன் என சொல்லி கிளம்புகிறார். ஆனால் மீனா அவரை தடுத்து நிறுத்திவிடுகிறார்.
அப்போது கதிர், நீ எதுக்குனே போற, நமக்கு முன்னாடி அம்மாவுக்கு சொந்தம் அப்பா தான். அதனால, அப்பா போய் கூப்பிட்டா தான் அம்மா வருவாங்க. நம்ம அழைச்சு ஒரு பிரயோஜனமும் இல்ல. அதனால அப்பா போய் அம்மாவை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரச் சொல்லு என சொல்கிறார். இதையடுத்து கோமதியின் அம்மா காந்திமதி, பாண்டியனிடம், மாப்ள போய் அவளை கூட்டிட்டு வாங்க என சொன்ன உடன் வேறு வழியின்றி பாண்டியன் கோமதி பின்னாலேயே செல்கிறார்.
கோமதி போகும் இடம் எல்லாம் வந்து தயவு செஞ்சு வீட்டுக்கு வந்துரு என கெஞ்சுகிறார். ஆனால் கோமதி கேட்கவில்லை. பாண்டியனின் பேச்சைக் கேட்காமல் கோமதி விறுவிறுவென நடந்து செல்கிறார். ரோட்டில் செல்பவர்கள் எல்லாம் பாண்டியனை வேடிக்கை பார்க்கிறார்கள். இதனால் அவருக்கு அவமானமாக இருக்கிறது. இருந்தாலும் கோமதி பின்னாடியே கெஞ்சுகிட்டே போகிறார். மறுபுறம் வீட்டில் இருக்கும் செந்தில், மீனாவிடம் நீ தான் இப்படி ஒரு ஐடியாவை அம்மாவுக்கு கொடுத்தியா என கேட்கிறார்.
இதனால் டென்ஷன் ஆகும் மீனா, உங்க அம்மா என சின்ன குழந்தையா நாங்க சொல்லி கொடுத்து செய்யுறதுக்கு, அவங்களுக்கு கோபம் வந்து கிளம்பிட்டாங்க, அதுக்கு நான் என்ன பண்றது என செம டோஸ் கொடுக்கிறார். கடைசியாக கோமதி ஒரு இளநீர் கடைக்கு சென்று இளநீயை வாங்கி குடித்துவிட்டு, காசு அவர்கிட்ட வாங்கிக் கோங்க என சொல்லிவிட்டு செல்கிறார்.
பின்னர் பாண்டியன் காசை கொடுத்துவிட்டு, சரி வா வீட்டுக்கு போகலாம் என அழைக்கிறார். இளநீர் வாங்கி கொடுத்ததுக்காக நான் வீட்டுக்கெல்லாம் வர மாட்டேன் என சொல்லி மீண்டும் கோமதி முரண்டு பிடிக்கிறார். இதனால் அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமால் பாண்டியன் மாட்டிக் கொண்டு முழிக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications