பாண்டியன் ஸ்டோர்ஸ்: இன்று மயிலுக்கு நடந்த அநியாயம்! பலருக்கு பாடம்.. சிக்கும் சரவணன்! மீனாவால் உடையும் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 பிப்ரவரி 14-ம் தேதிக்கான எபிசோடில் தங்க மயிலை அவருடைய அம்மா வீட்டை விட்டு விரட்டி விட்டிருக்கிறார். பெற்றோர் துணை இல்லாமல் புருஷனை நம்பி போன மயிலுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருக்கிறது. அதோடு மீனாவுக்கும் இப்போதே புது பிரச்சனை வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மயில் எனக்கு வேண்டவே வேண்டாம், எனக்கு டைவர்ஸ் வேண்டும் என்று நீதிமன்றத்தில் சொல்லி இருக்கிறார். அப்போது தங்கமயில் சரவணன் நல்லவர் தான் அவருடைய குடும்பத்தினர் தான் என்ன கொடுமை படுத்துறாங்க என்று ஒரு புது குண்டை தூக்கி போட அதற்கு நீதிபதி இந்த வழக்கை ஒத்தி வைத்து இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் (Pandian Stores 2 serial today episode) இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், வீட்டுக்கு வந்த தங்கமயிலை அவருடைய அம்மா பாக்கியம் கண்டபடி திட்டிக் கொண்டிருக்கிறார். நீ துப்பு கெட்டவா.. உனக்கு அறிவே இல்லை.. எப்படியாச்சும் பேசி கெஞ்சி கூத்தாடி அவங்களோட போக சொல்லிதான நான் உன்ன சொன்னேன். ஆனா நீ என் பேச்சைக் கேட்காமல் அங்க போய் ஏதேதோ பேசிக்கிட்டு இருக்க..எதுக்கு அவங்க கொடுமை படுத்துறாங்கன்னு சொன்ன என்று திட்டுகிறார்.
அதோடு இதுக்கு அப்புறம் நீ இந்த வீட்ல இருக்க கூடாது எங்கயாச்சும் போய் செத்து தொலை என்று சொன்னதும் தங்கமயில் அழுது கொண்டே வீட்டை விட்டு போகிறார். மறுபக்கம் பாண்டியனும் சரவணனும் கடையில் இருக்கின்றனர்.
தங்க மயிலை விரட்டிய சரவணன்
அப்போது சரவணன் அப்பாவிடம் எனக்கு அந்த மயில் வேண்டவே வேண்டாம் அப்பா என்று சொல்ல, உனக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல ஆனா உன்னுடைய நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாக தான் நடக்கும் என்று சொல்லிவிட்டு ஒரு லிஸ்ட் கொடுத்து இதில் இருப்பதை போட்டு வை என்று சொல்லிவிட்டு பாண்டியன் கிளம்புகிறார்.
அந்த நேரத்தில் அங்கு தங்கமயில் வந்து சரவணனிடம் மாமா என்னை போக மட்டும் சொல்லிடாதீங்க.. வீட்டுல என்னை துரத்தி விட்டுட்டாங்க. நான் இனி உங்க கிட்ட எந்த பொய்யும் சொல்ல மாட்டேன் என்று கெஞ்சி அழுகிறார். அதற்கு சரவணன் செவி கொடுக்காமல் எதுவாயிருந்தாலும் நீ கோர்ட்ல போய் பேசிக்கோ.. என்கிட்ட எதுவும் சொல்லாத என்று விரட்டி விடுகிறார். அதனால் தங்கமயில் கடையிலிருந்து அழுது கொண்டே வெளியே வரும்போது சரவணனுடைய முன்னாள் காதலி அஞ்சலி பார்த்து விடுகிறார்.
அஞ்சலி கேட்ட கேள்வி
அஞ்சலி கடைக்கு வந்த நேரம் தங்கமயில் அழுது கொண்டு போவதை பார்த்து சரவணனிடம் யாரது என்று விசாரிக்கிறார். அதற்கு சரவணன் அது என்னுடைய பொண்டாட்டி தான் என்று சொல்கிறார். கொஞ்சம் சண்டை அதனால தான் அழுதுட்டு போற என்று மட்டும் சொல்கிறார். ஆனால் இருவருக்கும் இருக்கும் விவாகரத்து பிரச்சனை பற்றி சரவணன் சொல்லவில்லை.
அந்த நேரத்தில் கடைக்கு ஆட்கள் வந்ததால் நான் போனில் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு அஞ்சலி கிளம்புகிறார். அடுத்ததாக சரவணன் திட்டிய சோகத்தில் இருந்த தங்கமயில் யாரும் இல்லாத பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது ஆட்டோவில் வந்த மீனா இவங்க எதுக்கு இங்க தனியா நடந்து போறாங்க என்று சந்தேகப்பட்டு தங்கமயிலை பாலோ பண்ணுகிறார்.
மீனா எடுத்த முடிவு
அப்போது தங்கமயில் ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய போக, மீனா அவரை சரியான நேரத்தில் காப்பாற்றி விடுகிறார். பிறகு என்ன ஆச்சு என்று விசாரிக்க வீட்டிலே என்ன சேர்த்துக்க மாட்டுக்காங்க, இங்கேயும் சேர்த்துக்க மாட்டாங்க எனக்கு இவங்க ரெண்டு பேரும் தவிர வேற எங்க போறதுன்னு தெரியலை என்று சொல்கிறார். உடனே மீனா தான் வந்த ஆட்டோவில் தங்கமயிலை கூட்டிக்கொண்டு போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
எதுவா இருந்தாலும் சரி குடும்பத்திடம் உண்மையைச் சொல்ல வேண்டும். அதேபோல சார் என்ன சொன்னாலும் சரி என்று நம்பி தன்னுடைய கல்யாண வாழ்க்கையை தொலைக்கக்கூடாது என்று மயிலுக்கு நடந்த சம்பவம் பலருக்கு பாடமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications