பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மயில் முன்பு ஜோடியாக வந்து நின்ற சரவணன்.. மீனா கொடுத்த அதிர்ச்சி! பாவம் பாண்டியன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial today episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 பிப்ரவரி 25ஆம் தேதிக்கான எபிசோடில், சரவணன் பாண்டியனை ஏமாற்றி விட்டு அவருடைய முன்னாள் காதலியுடன் கோவிலுக்கு வந்திருக்கிறார். அதே கோவிலில் மீனாவும் தங்கமயிலும் இருக்கின்றனர். அப்போது என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில், மீனாவின் தோழி வீட்டில் வேலைக்கு சேர்ந்த தங்கமயில், அங்கு கூடுதலாக சமையல் வேலையையும் பார்த்து வருவதால் அவருக்கு சம்பளம் உயர்த்தி மாதம் 17 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறப்படுகிறது. இந்த சந்தோஷமான செய்தியை தங்கமயில் மீனாவுக்கு போன் செய்து சொல்லி, நேரில் சந்திக்க வேண்டும் என கூறுகிறார். அதற்கு மீனா கோவிலுக்கு வரச் சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோடின் (Pandian Stores 2 serial Feb 25 episode) ஆரம்பத்தில், கோமதியிடம் பாண்டியன் தண்ணீர் கேட்கிறார். அதற்கு கோமதி "என் பேரு தண்ணி இல்ல, கோமதி" என நக்கலாக பதிலளிக்கிறார். பாண்டியன் தொடர்ந்து "தண்ணி" என்று கூப்பிட, கோமதி டைனிங் டேபிள் அருகே சென்று தண்ணீர் கேனிடம் "இந்த வீட்டோட தலைவர் உன்னைய கூப்பிடுறாரு, போ" என்று சொல்லி பாண்டியனை நோஸ்கட் பண்ணுகிறார்.
கடுப்பான பாண்டியன்
இதனால் கடுப்பான பாண்டியன் ரூமுக்கு செல்கிறார். பின்னர் பசி எடுத்து தனியாக வந்து சாப்பிட உட்கார்கிறார். கோமதி பரிமாற வராததால், சாப்பாட்டை தானே எடுத்து வைத்துக் கொள்கிறார். பரிமாறத் தெரியாமல் சாப்பாடு மேலையும் கீழையும் சிந்துகிறது. கோமதி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ரூமுக்குள் இருக்கிறார். பாண்டியன் ஒருவழியாக சாப்பிட்டு முடித்து கடைக்கு கிளம்புகிறார்.
மறுபுறம் கோவிலில் தங்கமயிலும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். தங்கமயில் 17 ஆயிரம் சம்பளம் கிடைக்கப் போவதாக சொல்லி மகிழ்ச்சியாக இருக்கிறார். அதே நேரத்தில் கடையில் இருக்கும் சரவணனுக்கு அஞ்சலியிடம் இருந்து போன் வருகிறது. கோவிலுக்கு வரச் சொல்கிறார் அஞ்சலி. உடனே வருகிறேன் என சொல்லி, கடையில் இருந்த பாண்டியனிடம் ஒரு கஸ்டமர் இருக்கு டெலிவரி பண்ணனும் நான் போயிட்டு வரேன் என்று பொய் சொல்லிவிட்டு அஞ்சலியை பார்க்க கிளம்புகிறார் சரவணன்.
மீனா அதிர்ச்சி
சரவணனும் அஞ்சலியும் ஜோடியாக கோவிலுக்குள் செல்கிறார்கள். அதே கோவிலில் மீனாவும் தங்கமயிலும் இருக்கிறார்கள். அப்போது சரவணனையும் அஞ்சலியையும் மீனா பார்த்துவிடுகிறார். இவர்களுக்குள் ஏதோ நடக்கிறது என சந்தேகப்படும் மீனா, தங்கமயில் அவர்களை பார்த்துவிடக் கூடாது என்பதால் அவசரமாக அவரை அழைத்துக் கொண்டு கோவிலைவிட்டு வெளியேறுகிறார். தங்கமயில் சரவணன் - அஞ்சலி இருவரையும் பார்க்கவில்லை. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications