பாண்டியன் ஸ்டோர்ஸ்: அஞ்சலி பற்றி மீனாவுக்கு தெரிந்த விஷயம்! வார்னிங் கொடுத்த செந்தில்! கோபத்தில் பாண்டியன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial February 20, 2026 Episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 பிப்ரவரி 20ஆம் தேதிக்கான எபிசோடில், மயிலுக்கு மீனா செய்யும் உதவிகள் தெரிந்து செந்தில் மீனாவுக்கு வார்னிங் கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் சரவணன் மற்றும் அஞ்சலி இருவரையும் மீனா ஒன்றாக பார்த்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்றைய எபிசோடில், தங்கமயில் தற்கொலை செய்யப் போன விஷயத்தையும் தான் உதவி செய்த விஷயத்தையும் மீனா கோமதியிடம் சொல்லாமல் மறைத்திருக்கிறார். அதே நேரத்தில் சரவணன் விவாகரத்து செய்ய போகும் விஷயத்தைப் பற்றி அஞ்சலியிடம் பேசி இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
இந்த நிலையில் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில் (Pandian Stores 2 serial today) மீனாவும் செந்திலும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இனி நீ அந்த தங்கமயில் கிட்ட பேசக்கூடாது என்று செந்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது தங்கமயில் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விடுகிறார். அதை செந்தில் கேட்கிறார். அதில் தனக்கு வேலை வாங்கித் தருமாறு தங்கமயில் கேட்டிருக்கிறார். இதை பார்த்து செந்தில் நீ அவங்களுக்கு வேலை வாங்கி கொடுத்தேன்னா நான் உன்னை பத்தி எல்லா விஷயத்தையும் அப்பா கிட்ட சொல்லிடுவேன். அதோட நானும் இனி உன்கிட்ட பேசவே மாட்டேன் என்று வார்னிங் கொடுக்கிறார்.
கதிர் ராஜி ரொமான்ஸ்
அடுத்ததாக கதிர் ராஜி இருவரும் சென்னைக்கு போயிட்டு வந்ததில் இருந்து எப்போதும் ரொமான்ஸ் மூடில் இருக்கிறார்கள். ராஜி கிளாசுக்கு கிளம்பும்போது ஜடையை பின்னிக் கொண்டிருப்பதை பார்த்து கதிர் நீ இப்படி போட்டா நல்லா இல்ல நீ ஃப்ரீ ஹேர் விடு அது உனக்கு அழகா இருக்கும் என்று சொன்னதும் ராஜி முதலில் யோசிக்கிறார். பிறகு சரி என்று அப்படியே கிளம்பி வருகிறார்.
வலியில் துடித்த கோமதி
பிறகு கோமதியிடம் சொல்லிவிட்டு கிளம்பும்போது கோமதி தலைவிரி கோலத்தில் இப்படி போகக்கூடாது என்று கடுப்பாகி தீட்டி அவரை கிளிப் போட்டுவிட்டு போகும்படி செய்கிறார். அதைத்தொடர்ந்து பாண்டியன் வீட்டிற்கு வருகிறார். பாண்டியனுக்கு கோமதி காபி எடுத்துட்டு வர போகிறார். வரும் வழியில் தவறி அவர் மீது காபி சிந்தி விடுகிறது. இதனால் கோமதி வலி தாங்க முடியாமல் கத்துகிறார்.
கடுப்பான பாண்டியன்
அப்போது இதை பார்த்து கடுப்பான பாண்டியன் எப்போ பார்த்தாலும் வீட்டில் இப்படி நாடகம் போட்டுகிட்டே இருப்பாங்களா? இந்த நாடகத்தை பார்த்தாலே கடுப்பாகுது.. ஒரு நாள் உண்மையிலே ஏதாவது வந்தால் கூட நம்ப முடியாமல் தான் போக போறேன் என்று திட்டி விட்டுப் போகிறார். இதனால் கோமதி பீல் பண்ணி கொண்டு இருக்கிறார்.
மறுபக்கத்தில் மீனா கோவிலுக்கு போகிறார் அங்கு தன்னுடைய அம்மாவின் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்ணைப் பார்த்து பேசிக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய மாமியாருக்கு உடல் சரியில்லை என்றதும் ஊருக்கு திரும்பி வந்து விட்டதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு தன்னுடைய மாமியாரை கவனித்துக் கொள்ள யாராவது இருந்தா சொல்லு மீனா என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறார்.
சரவணன் பார்த்த மீனா
அந்த நேரத்தில் கோவிலில் சரவணனும் அஞ்சலியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை மீனா பார்த்து விடுகிறார். ஆனால் அது பற்றி கதிரிடம் பேசாமல் யார் இந்த பொண்ணு என்ற குழப்பத்திலேயே அங்கிருந்து போய் விடுகிறார். பிறகு கோவிலில் இருந்து மீனா நேராக தங்கமயிலை போய் பார்க்கிறார்.
மீனா செய்த உதவி
தங்க மயிலிடம் உங்களுக்கு வேலை ஒன்னு வந்து இருக்கு. என்னோட பிரண்டு அம்மாவை பார்த்துக்க ஆள் தேவைப்படுறாங்க என்று சொல்றதும் தங்கமயில் அதற்கு ஓகே சொல்கிறார். பிறகு தங்கமயிலை கூட்டிக்கொண்டு அந்த வீட்டிற்கு சென்று அறிமுகம் செய்து வைத்து அவரை அங்கேயே வேலைக்கு சேர்த்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications