Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது! மயிலுக்கு எதிராக வீடியோ ஆதாரத்தை காட்டிய மீனா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்று முழுக்க நகை விவகாரத்தை மையமாக வைத்து பரபரப்பாக நகர்ந்தது. மயில் குடும்பத்தின் ஏமாற்று வேலைகளுக்கு மீனா சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்ன நடந்தது என்று விரிவாக.

இன்றைய எபிசோட் தொடக்கத்திலேயே, மீனா நகை பற்றி சொன்ன விஷயத்தை கேட்டு கோமதி அதிர்ச்சியடைந்து, "என்னடி சொல்ற?" என்று கேட்கிறாள். அப்போது மீனா, தாலி பிரித்து கோர்க்கும் பங்ஷனிலேயே ராஜிக்கும் தனக்கும் இந்த விஷயம் தெரியும் என்று வெளிப்படையாக சொல்லிவிடுகிறாள்.

Pandian Stores serial vijay tv

இதைக் கேட்ட சரவணன் கடும் கோபமடைந்து, "இதுவும் உண்மை கிடையாதா? என் அப்பா அம்மா உங்கிட்ட வந்து நகை போடுங்கன்னு கேட்டாங்களா? இவ்வளவு கேவலமா நடந்துட்டு எங்க குடும்பத்தை பத்தி தப்பா பேசுறீங்க" என்று கொந்தளிக்கிறான்.

அப்போது பாக்கியம்,"இவுங்க எல்லாரும் குடும்பமா சேர்ந்து பொய் சொல்றாங்க மேடம். நாங்க 80 பவுன் நகை போட்டோம். எங்களுக்கு அது வேணும்" என்று பிடிவாதமாக சொல்கிறாள்.

உடனே கதிர் இடையில் புகுந்து, "இவுங்க பொய் பேசுறாங்க. ராஜி இந்த விஷயத்தை அன்னைக்கே என்கிட்ட பேசினா" என்று உண்மையை சொல்லிவிடுகிறான்.

பாக்கியத்துக்கு அதிர்ச்சி

வாக்குவாதம் உச்சத்துக்கு சென்ற நிலையில், இன்ஸ்பெக்டர், "யார் பொய் பேசுறாங்கன்னு நாங்க கண்டுபிடிக்கிறோம். உங்க மகள் மயிலை ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க" என்று சொல்கிறார்.

இதனால் பாக்கியம் பம்மி, "அவளுக்கு உடம்பு சரியில்லை மேடம்" என்று நடிக்க ஆரம்பிக்கிறாள். ஆனால் இன்ஸ்பெக்டர், "அவள் இங்க வந்தாகணும்" என்று உறுதியாக சொல்கிறார்.

இதனை தொடர்ந்து பாக்கியம், மாணிக்கத்தை அனுப்பி மயிலை அழைத்து வரச் சொல்கிறாள். இதனிடையே மீனா ராஜிக்கு போன் செய்து, "நம்ம பயந்த மாதிரியே நடந்துருச்சு. நகையை வைச்சு விளையாட ஆரம்பிச்சுட்டாங்க" என்று சொல்கிறாள். அதற்கு ராஜி, "நான் இப்பவே ஸ்டேஷன் கிளம்பி வர்றேன் அக்கா"என்று சொல்லி கிளம்புகிறாள். இதனை தொடர்ந்து கதிர், "நானே போய் கூட்டிட்டு வர்றேன்" என்று வீட்டுக்கு செல்கிறான்.

ராஜி, மீனாவுக்கு அதிர்ச்சி

இதற்கிடையில், மீனாவிடம், "இந்த உண்மையை முன்னாடியே எங்ககிட்ட ஏன் சொல்லலை?" என்று பாண்டியனும் கோமதியும் கோபப்படுகின்றனர். அதற்கு மீனா, மயில் கெஞ்சியதையும், ஒரு பொண்ணோட வாழ்க்கை கெட்டுப் போக வேண்டாம் என்று நினைத்தோம் என்று மீனா சமாளிக்கிறார்.

அதன்பின் ராஜியும் மயிலும் அங்கு வந்து சேருகின்றனர். பாக்கியம், மகளை தனியாக கூப்பிட்டு நல்லா இருக்கு திட்டுகிறாள். அதன் பிறகு இன்ஸ்பெக்டரிடம் பேசும் மயில், "80 பவுன் நகை போட்டோம். இது இப்படி கருத்து போச்சுன்னு எனக்கு தெரியலை"என்று அம்மா சொல்லிக்கொடுத்ததை போலவே பொய் பேசுகிறாள்.

இதைக் கேட்ட மீனா, ராஜி இருவரும் கடும் அதிர்ச்சி அடைகின்றனர். மீனா, "தாலி பிரிச்சு கோர்க்குற பங்ஷன்ல வைச்சு நடந்த எல்லாத்தையும் மறந்துட்டீங்களா?" என்று கேட்கிறாள்.

கடுப்பான ராஜி

அதற்கு மயில், "நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு புரியலை" என்று பல்டி அடிக்கிறாள். இதனால் ராஜி கடுப்பாகி, "நீங்க ஏன் அக்கா இப்படி மாறிட்டீங்க? இவ்வளவு கேவலமா நடந்துக்கிறீங்க" என்று கேட்கிறாள்.

உடனே மீனா, "நம்ம அன்னைக்கு எடுத்த வீடியோல இவுங்க பேசுறது எல்லாம் இருக்கும்ல" என்று ராஜியிடம் சொல்கிறாள். இதைக் கேட்ட மயில் பதற ஆரம்பிக்கிறாள்.

அப்போது மீனா, "உங்களை மகள் மாதிரி நடத்துன இந்த குடும்பத்தை நாசம் பண்ண பிளான் பண்ணிட்டீங்களா? சரவணன் மாமா என்ன பண்ணாரு? கொஞ்சமாவது அவர்மேல பாசம் இருந்தா உண்மையை சொல்லுங்க" என்று கோபமாக கேட்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

வீடியோ ஆதாரம் இருக்கு என்று மீனா மிரட்டியதால் இனி மயில் உண்மையை சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்படி சொன்னால் மயில் குடும்பத்திற்கு பெரிய பிரச்சனையும் வரப்போகிறது. இல்லை என்றால் பாண்டியன் குடும்பத்தினர் இந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி வெளியே வர போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. இதற்கான பதில் நாளைக்கான எபிசோடில் தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+