பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கோமதி வைத்த ஸ்டேட்டஸ், மீனாவிடம் வம்பு செய்த மயில்! பாண்டியன் உருப்படியாக எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 29ஆம் தேதிக்கான எபிசோடில், கோமதி வைத்திய ஸ்டேட்டஸை பார்த்து மயில் குடும்பமே கோபத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் மயில் தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள முக்கிய முடிவு எடுத்திருக்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடில், கோமதி தனியாக ஹாலில் வந்து படுத்துக் கொள்கிறார். அம்மாவின் இந்த நிலையை பார்த்து கதிர் மனம் உடைந்து போகிறார். ராஜியுடன் ரூமில் தங்குமாறு அம்மாவிடம் சொல்ல, "அதெல்லாம் வேண்டாம்டா, நான் பார்த்துக்கிறேன்" என்று கோமதி மறுத்து விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
இதையடுத்து ரூமுக்கு வரும் கதிரிடம் ராஜி, "என்னால தான் எல்லா பிரச்சனையும். என்னை கல்யாணம் பண்ணதால தான் உனக்கு இவ்வளவு கஷ்டம்" என்று வருத்தமாக சொல்கிறாள். அதற்கு கதிர், "அதெல்லாம் எதுவும் இல்லை. நம்ம ரெண்டு பேரும் இப்போ சந்தோஷமா தான் இருக்கோம்" என்று சொல்ல, அதை கேட்டு ராஜி இன்ப அதிர்ச்சி அடைகிறார்.
அதே நேரத்தில், சுடர் கோமதி வைத்திருந்த ஸ்டேட்டஸை போனில் பார்க்கிறார். அதில் கோமதி தனது அண்ணன் குடும்பத்தோடு எடுத்த போட்டோவை பார்த்து, அதை அம்மா பாக்கியத்திடம் காண்பிக்கிறார். அந்த போட்டோவைபார்த்த பாக்கியம், "என் பொண்ணை வீட்டை விட்டு அனுப்பிட்டு, இவங்க இங்க கூத்தடிக்குது பாரு" என்று புலம்புகிறார்.
பாண்டியன் மனசு
அப்போது அங்கு வரும் மயிலிடம் அந்த போட்டோவை காட்டி, "நீ இங்க சாப்பிடாம கஷ்டப்பட்டு இருக்க, இங்க பாரு எந்த கவலையும் இல்லாம விருந்து சமைச்சு சாப்பிட்டுட்டு இருக்காங்க" என்று கண்டமேனிக்கு பேசுகிறார் பாக்கியம். இதனால் சூழ்நிலை மேலும் பதற்றமாகிறது.
மறுநாள் காலை, பாண்டியன் மனசு மாறுவார் என்ற நம்பிக்கையில் கோமதி அவருக்கு காபி கொண்டு வந்து பேச முயற்சி செய்கிறார். ஆனால் பாண்டியன், கோமதி கொடுத்த காபியை கூட வாங்காமல், "நேத்தே பேசக்கூடாதுன்னு சொல்லிட்டேன். இல்லன்னா எங்காவது கண் காணாத இடத்துக்கு போயிருவேன்" என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். இதனால் கோமதி எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து ஒதுங்கி போகிறார்.
இதற்கிடையில், செந்தில் மீனாவிடம் காபி கேட்க, "பேச மாட்டேன்னு சொன்னீங்களே, அப்புறம் உங்களுக்கு நான் எதுக்கு காபி போட்டு தரணும்?" என்று மீனா பதிலடி கொடுக்கிறார். நீங்களே கிச்சனுக்கு போய் காபி போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்வதால் செந்தில் அப்செட் ஆகிறார். அதற்கு, "என் அம்மா என்ன பிரச்சனை இருந்தாலும் அப்பாவுக்கு தேவையானதை செய்வாங்க" என்று செந்தில் சொல்ல, "நான் உங்க அம்மா மாதிரி எல்லாத்தையும் கேட்டுட்டு அமைதியா இருக்க முடியாது" என்று மீனா தெளிவாக பதில் சொல்கிறாள்.
மயில் அதிர்ச்சி
அடுத்ததாக ஆபீசுக்கு கிளம்பும் மீனாவை பார்ப்பதற்காக மயில் வந்து நிற்கிறார் "என்னை வீட்டை விட்டு அனுப்பிட்டு, நீங்க விருந்தெல்லாம் வைச்சு சந்தோஷமா இருக்கீங்க" என்று மயில் சொல்ல, "நீங்க பேச வேண்டியது என்கிட்ட கிடையாது. இங்க நிற்காதீங்க" என்று சொல்லிவிட்டு மீனா உள்ளே சென்று விடுகிறார். இதனால் மயில் அதிர்ச்சி அடைகிறார்.
இதனிடையில் கடைக்கு வரும் கோமதியை பார்த்ததும் பாண்டியன் மேலும் அப்செட் ஆகிறார். கோமதி சரவணனிடம், "நான் வேணா உதவிக்கு வரட்டுமா?" என்று கேட்க, அதைக் கேட்ட பாண்டியன் கடும் கோபமடைந்து, "மரியாதையா இவளை வீட்டுக்கு கூட்டிட்டு போய் விட்டுடு. இவளோட உதவியால தான் இத்தனை நாள் கடை நடத்தினோமா?" என்று பேசுகிறார். இதனால் கோமதி சோகமாக அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications