பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஜெயிலை விட்டு வந்த பாண்டியன் குடும்பத்திற்கு காத்திருக்கும் அதிர்ச்சி! சிக்கும் மீனா, ராஜி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 7ஆம் தேதிக்கான எபிசோடில் மயில் குடும்பத்தினர் சொன்ன பொய்கள் எல்லாம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுகிறது. இதனால் பாண்டியன் குடும்பத்திற்கு ஜாமீன் கிடைக்கிறது. ஆனால் வெளியே வரும் குடும்பத்தினருக்கு புதிய அதிர்ச்சி காத்திருக்கிறது. என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மயில் அம்மா கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக பாண்டியன், அவருடைய மகன்கள் மற்றும் கோமதி எல்லோரும் ஒருநாள் முழுக்க ஜெயிலில் இருந்தனர். பிறகு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.

Pandian Stores serial vijay tv

அப்போது பாண்டியன் குடும்பத்தினர் தன்னுடைய மகளை அடித்து சித்திரவதைப்படுத்தினாங்க, தினமும் வேலை செய்ய சொல்லி கொடுமைப்படுத்தினாங்க.. அதனால என் பொண்ணு வயிற்றில் இருந்த குழந்தை கூட அபார்ஷன் ஆகிவிட்டது என்று நாடகம் போடுகிறார். இதைக் கேட்டு பாண்டியன் குடும்பத்தினர் அதிர்ச்சியாகின்றனர்.

பிறகு பாண்டியன் குடும்பத்தினரிடம் விசாரணை நடக்கிறது. அப்போது பாண்டியன் இவங்க சொல்ற மாதிரி எல்லாம் எதுவுமே நடக்கல போய் கம்ப்ளைன்ட் கொடுத்து எங்கள் குடும்பத்தை எல்லாரையும் ஒரு நாள் முழுக்க ஜெயிலிவைத்துவிட்டார்கள் என்று ஃபீல் பண்ணுகிறார்.

அடுத்ததாக கதிரிடம் விசாரணை நடக்கிறது. அப்போது மயில் சொன்ன பொய்கள் எல்லாவற்றையும் சொல்கிறார். அதோடு நான் இனி மயிலுடன் சேர்ந்து வாழப்போவது இல்லை என்று சொன்னதும் மயில் அழுது ஆர்ப்பாட்டம் பண்ண அவரை அவருடைய அம்மா சமாதானம் செய்கிறார். பிறகு பாண்டியன் வழக்கறிஞர் மயில் குடும்பத்தினர் செய்த ஏமாற்று வேலைகளை எல்லாம் ஆதாரத்துடன் நிரூபிக்கிறார்.

மேட்ரிமோனியில் வந்து மயில் எம்ஏ படித்திருக்கிறார் என்று சொன்னது, அவருடைய வயதை குறைத்து ஏமாற்றியது, பிறகு வேலை விஷயத்தில் ஏமாற்றியது அதைத் தொடர்ந்து கர்ப்பமே உண்டாகாமல் குழந்தை அபார்ஷன் ஆகிவிட்டது என்று நாடகம் போட்டது என எல்லாவற்றையும் ஆதாரத்துடன் நிரூபிக்கிறார்.

Pandian Stores serial vijay tv

அடுத்ததாக மயில் வழக்கறிஞர் இவங்க பண்ணுன கொடுமைகள் எல்லாவற்றையும் பக்கத்து வீட்டுக்காரங்க பார்த்து இருக்காங்க, அவங்க கிட்ட விசாரிக்கணும் என்று சக்திவேல் மற்றும் முத்துவேலிடம் விசாரிக்கின்றனர். அவர்கள் இருவருமே பாண்டியன் குடும்பத்தில் அப்படி ஒரு பிரச்சனை நடக்கவே இல்லை, இந்த பொண்ணு குடும்பத்தினர் தான் ஏமாற்றி வேலை செஞ்சி இருக்காங்க என்றும் பாக்கியம் கோர்ட்டில் வந்து தங்களுக்கு சாதகமாக சாட்சி சொல்ல சொல்லி பேசியது எல்லாவற்றையும் சொல்லிக் கொடுக்கின்றனர்.

கடைசியாக பாண்டியன் மற்றும் அவருடைய மனைவி பிள்ளைகளுக்கு ஜாமீன் கிடைக்கிறது. அப்போது இது பற்றி மீனா, ராஜி, அரசி எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் பழனியிடம் அந்த பொண்ணு குடும்பத்தில் இருந்து ஏதாவது டிமாண்ட் பண்ணுனாங்களா என்று மீனாவுடைய அப்பா கேட்கிறார்.

அதற்கு பழனி அவங்க கொடுத்த நகை மற்றும் பொருட்கள் எல்லாவற்றையும் கொடுக்க சொல்லி கேட்டிருக்காங்க என்று சொன்னதும் மீனாவும் ராஜியும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு இருவரும் பேசும் போது எனக்கு மயில் அக்கா பற்றி யோசிக்கும் போதே பயமாயிருக்கு நாம இந்த உண்மையை குடும்பத்திடம் மறைத்தது தப்புன்னு தோணுது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து மீனாவின் அப்பா மீனாவை ராஜி மற்றும் அரசியல் வீட்டிற்கு கூட்டிட்டு போக சொல்லிவிட்டு எல்லோரும் ஸ்டேஷனுக்கு போகின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. இனி நாளைக்கான எபிசோடில் தங்கமயில் நகையை பற்றிய விஷயத்தை வைத்து புது பிரச்சனை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+