பாண்டியன் ஸ்டோர்ஸ்: மீனாவால் வீட்டை விட்டு போன கோமதி.. அதிர்ச்சியில் பிள்ளைகள்! காந்திமதி போடும் நாடகம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், (Pandian Stores 2 serial today episode) 2026 மார்ச் 14ஆம் தேதிக்கான எபிசோடில், மீனா உடன் கோமதி வீட்டை விட்டு வெளியே போயிருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டில் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறுகிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தன் பேரன் குமாரின் திருமணத்தை தடுத்து நிறுத்தியதால் வீட்டை விட்டு துரத்திவிடப்பட்ட காந்திமதி, தற்போது தனது மகள் கோமதி வீட்டில் வசித்து வருகிறார். அவர் இங்கு வந்த பின்னர் தன் மகளும், மருமகன் பாண்டியனும் பேசாமல் இருப்பதை பார்த்து அவர்களை சேர்த்து வைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அதேபோல் அரசியை தன்னுடைய பேரன் குமாருக்கு கல்யாணம் பண்ணி வைக்கவும் ஒரு பிளான் போட்டிருக்கிறார். ஆனால் இதற்கு அரசி சம்மதம் தெரிவிக்கவில்லை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
இன்றைய எபிசோடில்,( Pandian Stores 2 serial March 14 Episode) கோமதி மீனாவுக்கு போன் செய்து கோவிலில் வைத்து திட்டியதற்கு மன்னிப்பு கேட்கிறார். பிறகு தான் ஸ்ரீரங்கம் போவதாகவும், தனக்கு துணையாக நீயும் வரும்படி கூறுகிறார். அதற்கு மீனா, "நேத்து கோவில்ல வச்சு என்னைய அவ்வளவு திட்டிட்டு இப்போ கூட வான்னு கூப்பிடுறீங்க. இனிமேல் என்னைய திட்டக்கூடாது" என்று சொல்கிறார். இதற்கு கோமதி, "நீ எதுக்காக தங்கமயிலை கூட்டிட்டு வந்த. அதனால தான் நான் உன்னைய திட்டுனேன்" என்று பதில் சொல்கிறார். பின்னர் இருவரும் பேசிக் கொண்டு சமாதானம் ஆகிறார்கள். அதன் பிறகு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வர சம்மதிக்கிறார் மீனா.
கோவிலுக்கு போகும் கோமதி
அதற்குப் பிறகு மீனா, செந்திலிடம் தான் அத்தையோடு ஸ்ரீரங்கம் போகும் விஷயத்தை சொல்லுகிறார். அதேபோல் கோமதியும் வீட்டில் தன்னுடைய அம்மாவிடம் மட்டும் சொல்லிவிட்டு கிளம்புகிறார். "நான் ஸ்ரீரங்கம் போறேன்... வர்றதுக்கு நைட் ஆகிடும்" என்று கூறிவிட்டு வெளியேறுகிறார்.
காந்திமதியின் பிளான்
கோமதி ஸ்ரீரங்கம் போவதை பார்த்த காந்திமதி, இதை பயன்படுத்தி எப்படியாவது கோமதியையும் பாண்டியனையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். அந்த நேரத்தில் கோமதி தன்னுடைய போனை வீட்டிலேயே மறந்து வைத்து சென்றது காந்திமதிக்கு தெரிய வருகிறது. அதைப் பார்த்த அவர் அந்த போனை வைத்தே ஒரு பிளான் போடுகிறார்.
கோமதி சொன்ன விஷயம்
இதற்கிடையில் கோமதி மற்றும் மீனா பஸ் ஸ்டாப்புக்கு சென்ற பிறகு தான், கோமதி தனது போனை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்ததை கவனிக்கிறார். அதற்கு மீனா, "திரும்பி போய் எடுத்துக்கலாமே" என்று சொல்ல, கோமதி "என் போன் இல்லேனா என்ன... உன்னோட போன் இருக்குல்ல. அதனால் பிரச்சனை இல்லை" என்று சொல்லிவிட்டு கோவிலுக்கு கிளம்புகிறார்.
காந்திமதியின் மாஸ்டர் பிளான்
வீட்டில் இருக்கும் காந்திமதி, கோமதியின் போனை சைலண்டில் போட்டு வைக்கிறார். அதற்கு ஏதேனும் கால் வந்தால் சத்தம் கேட்கிறதா என்பதை பார்க்க, அரசியின் போனை வாங்கி அதற்கு கால் செய்து பார்க்கிறார். சத்தம் வராததை உறுதி செய்த பிறகு, அந்த போனை ஒரு டப்பாவிற்குள் போட்டு அடைத்து வைக்கிறார்.
தவிக்கும் குடும்பம்
பின்னர் காந்திமதி தனது டிராமாவை ஆரம்பிக்கிறார். வீட்டில் உள்ளவர்களிடம் "உங்க அம்மாவை காலையில் இருந்தே காணோம்" என்று சொல்லுகிறார். அதைக் கேட்ட வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் கோமதிக்கு போன் செய்து பார்க்கிறார்கள். போன் ரிங் ஆனாலும் அவர் எடுக்கவில்லை.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி எப்படியாவது பாண்டியனையும் கோமதியையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என்று காந்திமதி முடிவு எடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. அடுத்த வார எபிசோட்டில் பாண்டியன் கோமதியை தேடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்: ஒன்று சேர்ந்த மருமகள்கள்.. கோமதி குடும்பத்தில் பெரிய குழப்பம்! பாவம் பாண்டியன் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது













Click it and Unblock the Notifications