பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கர்ப்பத்தை சொன்ன மயிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சரவணன்! இனி மீனா எடுக்கும் முடிவு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் 2026 மார்ச் இரண்டாம் தேதி முதல் 7ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ (Pandian Stores 2 serial March 2-7, 2026 Promo) வெளியாகியிருக்கிறது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. இதைக் குறித்து தங்கமயில் சரவணனிடம் போய் சொல்லி இருக்கிறார். அப்போது எதிர்பாராத சம்பவம் நடைபெறுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் (Pandian Stores 2 serial Promo) அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புதான் ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்த சீரியலில் தங்கமயில் செய்த ஏமாற்று வேலைகளும், பொய்யும் குடும்பத்திற்கு தெரியாத அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டு இருக்கின்றனர். அதோடு அவரை விவாகரத்து செய்வதற்காகவோ சரவணன் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் சரவணன் முன்னாள் காதலி அஞ்சலியை சரவணன் மீட் பண்ணியிருக்கிறார். இப்போது இருவரும் மனம் விட்டு பேசிக்கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க தங்கமயிலுக்கு மீனா வேலை வாங்கி கொடுத்து உதவி செய்திருக்கிறார். ஆனால் தங்க மயிலுக்கு வேலை வாங்கி கொடுக்கக் கூடாது என்று செந்தில் ஏற்கனவே மீனாவிடம் சொல்லி இருந்தார். ஆனாலும் மீனா அதை கேட்காமல் தான் தங்கமயிலுக்கு உதவி செய்திருக்கிறார்.
இந்த நிலையில் ரசிகர்கள் எதிர்பார்ப்பது போலவே இப்போது தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார். அதை தற்போதைய ப்ரோமோவில் உறுதி செய்திருக்கின்றனர். மயில் வாமிட்டிங் ஆக வருகிறது என்று சொன்னதும் டாக்டரிடம் செக் பண்ணுவோம் என்று மீனாதான் கூட்டிக்கொண்டு போகிறார். அங்கு டாக்டர் மயில் கர்ப்பமாக இருக்கீங்க என்று ரிப்போர்ட் கொடுக்கின்றனர்.
இதைக் கேட்டு மீனாவும் அதிர்ச்சியில் தான் இருக்கிறார். அடுத்ததாக தங்கமயில் சரவணனை கோவிலில் சந்தித்து இந்த விஷயத்தை சொல்ல அதற்கு சரவணன் இன்னும் நீ எங்களை ஏமாற்ற பார்க்கிறாயா? ஒருவேளை நீ கர்ப்பமாக இருந்தால் கூட அதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல. இது யாருடைய குழந்தைன்னு எனக்கு தெரியாது என்று கோபத்தில் சொல்ல தங்கமயில் அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்: சக்திவேலுக்கு தெரிந்த உண்மை.. கர்ப்பமான மயில்! சரவணன் சொன்ன விஷயம்
ஏற்கனவே தங்கமயில் ஒரு ஆளுக்கே அவருடைய அம்மா சாப்பாடு போட முடியாது என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். இப்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று இருந்தால் பஞ்சாயத்துக்கு பஞ்சமே இல்லை. இப்போதுதான் தங்கமயிலுக்கு வேலை கிடைத்தது. இனி 17,000 வருமானம் வருகின்றது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
விஜய்யை பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? ஜூலியை கடுமையாக விமர்சித்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்
இந்த நிலையில் குழந்தை விஷயத்தில் சரவணன் பேசியதை பார்க்கும்போது தங்க மயிலுக்கு இந்த நிலைமையா என்று நினைக்கத் தோன்றுகிறது. ஒரு விதத்தில் தங்கமயிலை பார்க்கும்போது பாவமாக இருந்தாலும், இன்னொரு விதத்தில் சரவணன் தான் பாவம் என்றும் சொல்ல வைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications