பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: பாண்டியன் செய்த செயலால் கதறி அழுத கோமதி.. மயில் அப்பாவுக்கு கிடைத்த ஆதாரம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Pandian Stores 2 serial March 21th Episode )பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 2026 மார்ச் 21ஆம் தேதிக்கான எபிசோடில், பாண்டியன் செய்த செயலை பார்த்து கோமதி அழுது இருக்கிறார் அதே நேரத்தில் சரவணன் மயில் உடைய அப்பாவிடம் வசமாக சிக்கி இருக்கிறார் என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் (Pandian Stores 2 serial today episode) இன்றைய எபிசோடில், வீட்டுக்குள் ஆரம்பத்திலேயே ஒரு சின்ன விஷயம் பெரிய மனக்கசப்பாக மாறும் சூழ்நிலை உருவாகிறது. காலையில் கோமதி வீட்டை துடைத்துக் கொண்டிருக்கிறார். அப்போது அரசி, "எனக்கு டீயே கொடுக்கல" என்று குறை சொல்ல ஆரம்பிக்கிறார். ஆனால் கோமதி நான் வீடு துடைத்து முடித்த பிறகு தான் தருவேன் என்று சொல்லி விடுகிறார். அதைத் தொடர்ந்து காந்திமதியிடம் அரசி, "என்னம்மா இப்படி பொண்ணை வளர்த்திருக்கீங்க?" என்று கேட்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்
அதற்கு காந்திமதி, "நான் வளர்த்த வரைக்கும் நல்லாத்தான் இருந்தா... இப்ப தான் இப்படி மாறிட்டா" என்று பதில் சொல்ல, சூழ்நிலை இன்னும் கொஞ்சம் கசப்பாகிறது. அப்படியே அந்த நேரத்தில் பாண்டியன் வெளியிலிருந்து டீ வாங்கிக்கொண்டு வந்து, அரசிக்கும் காந்திமதிக்கும் கொடுத்து தானும் குடிக்கிறார். ராஜ் ஏ டி குடிக்க கூப்பிட அதையெல்லாம் பார்த்த கோமதி கோபப்படுகிறார்.
பாண்டியன் செய்த செயல்
இதோடு பாண்டியனின் ஆட்டம் முடிந்துவிடவில்லை. "ஊர்ல சாப்பாட்டுக்கே நூறு ஹோட்டல்கள் இருக்கு. எனக்கு பசிச்சா அங்க போய் சாப்பிடுறேன். இனிமேல் எனக்காக வீட்டில் யாரும் சமைக்க வேண்டாம்" என்று பாண்டியன் சொன்னது, கோமதிக்கு ரொம்பவே கஷ்டமாகிறது. இதை கேட்டதும் அவர் கோபத்திலும் மனவருத்தத்திலும் உடைந்து போகும் நிலையில் இருக்கிறார்.
அழுத கோமதி
அதைக்கண்டு கதிர், கோமதியை ஆறுதல் படுத்த முயற்சிக்கிறார். அப்போது கோமதி அழுது விடுகிறார். அதற்கு கதிர் "அவருக்கு வேண்டாம்னா சரி, நீ சமைக்கிற சாப்பாட்டை நான் சாப்பிடுறேன்" என்று சொல்லி அவளை சமாதானப்படுத்துகிறார். ஆனாலும் கோமதி எதுவும் பேசாமல் அமைதியாக கண்ணீர் வடிக்கிறார்.
இதற்கிடையில் பாண்டியன் கடைக்குச் சென்று தனது வேலைகளை கவனித்து கொண்டிருக்கிறார். அப்போது பழனி அங்கு வருகிறார். உடனே சரவணன், "நீங்க கொஞ்சம் கடையை பாத்துக்கோங்க, நான் கோவிலுக்கு போயிட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். கோவிலுக்கு சென்ற சரவணன், அங்கே அஞ்சலியிடம் வீட்டில் நடந்த பிரச்சனைகளை எல்லாம் பகிர்ந்து பேசுகிறார்.
நண்பரின் அட்வைஸ்
அந்த நேரத்தில் அவர்களுடைய காலேஜ் நண்பர் ஒருவரை பார்க்கின்றனர் பிறகு எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த நம்பர் கதிருக்கு டைவர்ஸ் ஆக போற விஷயத்தை பற்றி கேட்கிறார் குரூப்பில் யாரோ இதைப் பற்றி மெசேஜ் போட்டு இருந்தாங்க என்று சொன்னதும் கதிர் ஒரு நிமிடம் மகிழ்ச்சி அடைகிறார்கள் அந்த நம்பர் நீயும் அஞ்சலியும் இப்போ மீட் பண்ணி இருக்கீங்க என்றால் ஏதோ ஒரு நல்ல விஷயமாகத்தான் இருக்கும் நீங்க ரெண்டு பேரும் காலேஜில் அவ்வளவு லவ் பண்ணுனீங்க இனி உங்களுடைய வாழ்க்கையை நீங்கதான் முடிவு எடுக்கணும் என்று சொல்லிவிட்டு போகிறார்.
அதிர்ச்சியில் அரசி
பிறகு கதிரும் அஞ்சலியும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அதை , மயிலின் அப்பா பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு ஒளிந்து கொண்டு மொபைலில் வீடியோ எடுக்கிறார். கடைசியாக அரசி ரோட்டில் நடந்து வந்து கொண்டிருக்கும் போது குமார் அவரிடம் ஒரு கவரை கொடுத்து இது அப்பத்தாவுக்கு மாத்திரை கொடுத்து விடு என்று சொல்கிறார். அங்கே மாத்திரையுடன் இரண்டு சாக்லேட் இருக்க அது வேண்டாம் என்று அரசி சொன்னாலும் குமார் கேட்காமல் அதை நீயே வச்சுக்கோ என்று சொல்கிறார். உடனே அதை தூக்கி எறிய போகும்போது யாரையோ பார்த்து அரசி அதிர்ச்சியாகி நிற்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications