பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தால் மனம் மாறும் சரவணன்? கோமதி ரியாக்ஷன்! குட்டையை குழப்பிய அப்பத்தா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் (Pandian Stores 2 serial today episode) தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் தகவலை சரவணனிடம் சொல்லத் தயாராகும் நிலையில் ஒரு பெரிய சம்பவம் நடக்கிறது. அதே நேரத்தில் கோமதி வீட்டிலும் ஒரு பஞ்சாயத்து வெடிக்கிறது என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில், தங்கமயில் கர்ப்பமாக இருப்பது அவரது அம்மா பாக்கியத்துக்கு தெரிந்ததும், உடனே மகளை மாமியார் வீட்டில் கொண்டு போய் விட்டுவிடலாம் என்று முடிவு செய்து, பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துக் கிளம்பச் சொல்கிறார்.
ஆனால் மீனா "முதலில் இந்த விஷயத்தை சரவணனிடம் சொல்லட்டும், அதன் பிறகு வீட்டில் பேசலாம்" என்று தடுத்து நிறுத்துகிறார். தங்கமயிலும் "போனில் சொல்ல மாட்டேன், நேரில் தான் சொல்வேன்" என்று உறுதியாக சொல்கிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில், (Pandian Stores 2 serial March 3, 2026 episode) சரவணன், தங்கமயிலை பார்க்க கோவில் குளம் அருகே வருகிறார். தங்கமயில் அவரை "மாமா..." என்று ஆசையோடு அழைக்கிறார். உடனே சரவணன், "நான் தான் உன்னை பார்க்கவே பிடிக்கலன்னு சொன்னேன்ல, அப்புறம் ஏன் என்னை வரச் சொன்ன?" என்று கேட்கிறார்.
அதற்கு தங்கமயில், "நான் ஒரு நல்ல விஷயம் சொல்லப் போறேன். இது நமக்கு மட்டுமில்லை, நம்ம குடும்பத்துக்கே நல்ல விஷயம். நம்ம குடும்பம் பிரிஞ்சு இருக்கே, இந்த விஷயம் கேட்டா எல்லாரும் ஒன்றிணைந்துவிடுவாங்க" என்று சொல்கிறார். அதன்பிறகு அவர், "நான் மாசமா இருக்கேன் மாமா..." என்று நேராக சொல்லிவிடுகிறார்.
கனவாக முடிந்த சந்தோஷம்
இந்த வார்த்தையை கேட்டவுடன் சரவணன், "என்ன டிராமா போடுறியா?" என்று கேட்கிறார். தங்கமயில் உடனே, "இல்ல மாமா, டாக்டர்கிட்ட போய் விசாரிச்சோம்... நமக்கு பாப்பா வரப்போகுது" என்று உறுதியாகச் சொல்கிறார்.
அதைக் கேட்ட சரவணன் கண்களில் கண்ணீர் மல்க, தங்கமயிலின் கையை பிடித்து வயிற்றில் வைக்கிறார். "ரொம்ப சந்தோஷமா இருக்கு மயிலு..." என்று சொல்லி, அவரை தூக்கி சுழற்றி, "நான் அப்பா ஆகப்போறேன்!" என்று மகிழ்ச்சியில் திளைக்கிறார்.
இந்த காட்சி முழுவதும் பார்ப்பவர்களுக்கு நெகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு தான் உண்மை தெரிகிறது - அது எல்லாம் தங்கமயிலின் கனவு! அவர் நினைத்துக்கொண்ட காட்சி மட்டுமே அது. நிஜத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

சக்திவேலை திட்டும் முத்துவேல்
மறுபக்கம் கோமதி வீட்டில் இருக்கும் காந்திமதிக்கு விருந்து போடப்படுகிறது. அதே நேரத்தில், சக்திவேல் தனது அம்மாவை வீட்டை விட்டு அனுப்பியதை பற்றி குமார் அவரை கண்டிக்கிறார்.
அப்போது ஊரிலிருந்து வந்த முத்துவேல் அங்கே வருகிறார். வந்த உடனே சக்திவேலை பார்த்து, "நீ அம்மாவை வீட்டை விட்டு அனுப்பியது ரொம்ப தப்பு. ஒழுங்கா போய் அம்மாவை கூட்டிட்டு வா" என்று கடுமையாக சொல்கிறார்.
சக்திவேல் அதற்கு சம்மதிக்காமல் நிற்க, "நானே போய் அம்மாவை கூட்டிட்டு வர்றேன்" என்று சொல்லி முத்துவேல் நேராக கோமதி வீட்டிற்கு செல்கிறார்.
வீட்டிற்கு வர மறுக்கும் காந்திமதி
கோமதி வீட்டின் வாசலில் இருந்து முத்துவேல் அம்மாவை கூப்பிடுகிறார். முத்துவேலின் சத்தத்தை கேட்டு காந்திமதி, கோமதி மற்றும் வீட்டில் இருந்தவர்கள் எல்லாம் வாசலில் வந்து நிற்கிறார்கள்.
"அம்மா, வீட்டுக்கு வாங்க..." என்று முத்துவேல் சொல்கிறார். அதற்கு காந்திமதி, "நான் இனிமே அந்த வீட்டுக்கு வரமாட்டேன். எனக்கு அந்த வீட்டில் உரிமையே இல்லையாம். அப்புறம் நான் ஏன் வரணும்?" என்று கேட்கிறார்.
"உனக்கு உரிமை இல்லையா? யார் சொன்னது?" என்று முத்துவேல் கேட்க, "உன் தம்பி தான் சொன்னான்" என்று காந்திமதி போட்டுக் கொடுக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கதிரை காப்பாற்ற வந்த முத்துவேல்... ஆனால் அதற்குள் நடந்த கொடூரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications