Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pandian Stores 2 promo: நீதிமன்றத்தில் முத்துவேல் சொன்ன சாட்சி.. கதறி அழுத தங்கமயில்.. அதிர்ச்சியில் கோமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் 2026 ஜனவரி ஐந்தாம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் யாரும் எதிர் பார்க்காத சம்பவம் தான் நடந்திருக்கிறது. அதாவது பாண்டியன் குடும்பத்தினர் கோட்டில் விசாரணை செய்கின்றனர். அப்போது பாண்டியன் குடும்பத்திற்காக முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் சாட்சி சொல்லி இருக்கின்றனர். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

தற்போதைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்பது பலருக்கும் வியப்பாகவும், ஆச்சரியமாக இருக்கிறது. கூட்டுக் குடும்பமாக வாழ முடியுமா? என்ற கேள்வி இன்றைய தலைமுறையை இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது. அதற்கு ஒரு பதில் சொல்லும் வகையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருக்கிறது. இதில் ஒரு குடும்பத்திற்குள் இருக்கும் உறவை அழகாக சொல்லி வருகின்றனர்.

Pandian Stores serial vijay tv

ஆனால் இந்த சீரியலில் தற்போது நடந்த மாற்றம் தான் பலரையும் கவனிக்க வைத்திருக்கிறது. அதாவது இந்த சீரியலில் கோமதி பாண்டியன் காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். தங்கள் வீட்டு பொண்ணை தங்களிடம் வேலை பார்த்த பாண்டியன் கல்யாணம் பண்ணிட்டு போயிட்டானே என்ற கோபத்தில் கோமதியின் அண்ணன்கள் சக்திவேல், முத்துவேல் இருக்கின்றனர்.

இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே பகை இருக்கிறது. இந்த நிலையில்தான் பாண்டியன் தன்னுடைய மகனுக்கு தங்க மயிலை திருமணம் செய்து வைத்திருந்தார். ஆனால் தங்கமயில் படிக்கவில்லை அவர் தன்னுடைய மகனை விட இரண்டு வயது அதிகம் என்ற உண்மை இத்தனை நாட்களாக மூடி வைக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது பாண்டியனின் மகன் சரவணன் மொத்த உண்மையையும் சொல்லிவிட்டார்.

அதோடு மயிலுடன் இனி என்னால் வாழ முடியாது என்று அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார். பிறகு விவாகரத்து நோட்டீஸும் அனுப்பி இருக்கிறார். இதனால் கோபமான மயிலின் அம்மா பாண்டியன் குடும்பத்தின் மீது வரதட்சனை கொடுமை கேஸ் கொடுத்து இருக்கிறார். இதில் தான் இப்போது யாரும் எதிர்பார்க்காத சம்பவம் வந்தது. இதுவரைக்கும் பாண்டியன்தான் எங்களுடைய எதிரி என்று இருந்த சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் தன்னுடைய தங்கை மற்றும் தங்கை பிள்ளைகளையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனதும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பாண்டியன் குடும்பத்திற்காக போராடி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாண்டியன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் என்னுடைய மகளை அடித்து சித்திரவதை பண்ணுனாங்க, நகை கேட்டு கொடுமைபடுத்தினாங்க என்று தங்கமயிலின் அம்மா நீதிமன்றத்தில் சொல்லுகிறார். அதற்கு பாண்டியன் நாங்க அப்படியெல்லாம் செய்யல என்று சொல்கிறார்.

பிறகு சக்திவேல் மற்றும் முத்துவேலிடம் என்ன நடந்தது என்று விசாரிக்கிறார்கள். அதற்கு முத்துவேல் என் தங்கச்சி மாப்பிள்ளை இன்னொரு பொண்ணை கொடுமை படுத்துற அளவுக்கு மோசமானவன் கிடையாது என்று சொல்கிறார். பிறகு சக்திவேல் அந்த மயில் குடும்பத்தினர் சொல்றது எல்லாமே பொய் என்று சொல்லி அவர்களுடைய சொந்த ஜாமீனில் பாண்டியன் குடும்பத்தை வெளியே வர வைக்கின்றனர்.

இதனால் பாண்டியன் முத்துவேல் கையை பிடித்து நன்றி சொல்லி கண் கலங்குகிறார். பிறகு முத்துவேல் தோலில் சாய்ந்து கோமதியும் நன்றி சொல்லி அழுது கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் பிரிந்திருந்த இந்த இரண்டு குடும்பமும் இனி இணைய போகிறார்களா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. என்னதான் சண்டை சச்சரவு என்று ஆளுக்கு ஒரு பக்கமாக முகத்தை திருப்பி கொண்டு இருந்தாலும் சொந்த ரத்த பந்தங்களுக்கு ஒரு பிரச்சனை என்ற போது இப்படி ஓடி வருவதை பார்க்கும்போதே சந்தோஷமாக இருக்கிறது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+