பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் குழந்தை பற்றி சரவணன் சொன்ன வார்த்தை! அடி வெளுத்து வாங்கிய கோமதி! பாண்டியன் எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஏப்ரல் 13ஆம் தேதி முதல் பதினெட்டாம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கமயிலின் கர்ப்பம் விஷயம் பற்றி மீனா மொத்த குடும்பத்திடமும் சொல்லி இருக்கிறார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோமதி சரவணனை அடித்து வெளுத்து வாங்கி இருக்கிறார். பாண்டியனும் எதிர்பாராத பெரிய முடிவு எடுத்திருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் பற்றிய உண்மைகள் தெரிந்ததும் சரவணன் குடும்பத்திடம் சொல்ல அதனால் மொத்த குடும்பத்தினரும் தங்கமயிலை வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்கின்றனர். அது போதாததற்கு தங்கமயிலிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று சரவணன் சொன்னதால் விவாகரத்து வழக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார். இந்த விஷயத்தை ஏற்கனவே சரவணனிடம் மயில் சந்தோஷமாக சொன்ன போது சரவணன் அதை நம்பவில்லை. ஏற்கனவே ஒருமுறை இதுபோல சொல்லி கடைசியில் குழந்தை இல்லை என்று தெரிய வந்ததால் அதேபோல இப்போதும் என்னை ஏமாற்றுகிறாயா என்று சரவணன் சொல்லிவிட்டார். அது போதாததற்கு இந்த குழந்தைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை இது யாருடைய குழந்தையோ தெரியாது என்று சொல்லிவிட்டார்.
இதனால் மயில் இந்த குழந்தை விஷயத்தை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மீனாவிடம் சத்தியம் வாங்கி இருந்தார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில் மீனாவும் தங்கமயிலும் பேசிக் கொண்டிருக்கும் விஷயம் பாண்டியன் மற்றும் மொத்த குடும்பத்திற்கும் தெரிய வருகிறது. இதனால் கோமதி கோபமாக உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் நம்ம குடும்பத்தை இவ்வளவு அசிங்கப்படுத்தின அந்த தங்கமயில் கூட நீ சேர்ந்து சுத்திகிட்டு இருப்ப என்று திட்டுகிறார்.

பாண்டியனும் அந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு பண்ணுன அநியாயத்தை எல்லாம் நீ மறந்துட்டியா என்று கேட்கிறார். உடனே மீனா அவங்க கூட சேர்ந்து சுத்துவதற்கு காரணம் அவங்க கர்ப்பமா இருக்குறாங்க... நம்ம குடும்பத்தோட வாரிசு அவங்க வயித்துல வளருது என்று சொன்னதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.
அதற்கு பாண்டியன் சரி அந்த பொண்ணு கர்ப்பமாக இருந்தால் அந்த விஷயத்தை முதலில் சரவணனிடம் சொல்லி இருக்க வேண்டாமா? என்று கேட்க, அதற்கு மீனா ஏற்கனவே சரவணன் மாமா கிட்ட அக்கா சொன்னாங்க... அதற்கு அவர் இது யாரோட குழந்தைன்னு கேட்டாரு. எனக்கும் அந்த குழந்தைக்கு சம்பந்தம் இல்லைன்னு சொல்லிட்டாரு என்று சொன்னதும் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அந்த நேரத்தில் கதிர் அங்கு வர அவரிடம் ஏன்டா இப்படி பண்ணுன என்று கோமதி கன்னத்தில் அறைக்கிறார். அதோடு ஒரு பக்கம் கோர்ட் கேஸ் போயிட்டு இருக்கு இன்னொரு பக்கத்தில் குழந்தை வரப்போகுது... என்ன இருந்தாலும் அந்த குழந்தை தான் நம்ம குடும்பத்தோட மூத்த வாரிசு என்று பாண்டியன் சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக ப்ரோமோ முடிவு அடைந்து இருக்கும் நிலையில் அடுத்த வாரம் இதை வைத்து பெரிய பஞ்சாயத்து வரப்போகிறது என்று தெரிகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications