பாண்டியன் ஸ்டோர்ஸ்: போட்டோவில் சிக்கும் ராஜி.. கதிருக்கு வந்த சந்தேகம்! சுகன்யா ஏற்படுத்தும் பிரச்சனை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய எபிசோடு ராஜி மற்றும் கதிரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்துப் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்தது. டான்ஸ் ஷோவுக்குச் சென்ற ராஜிக்கு அங்கே நடந்த சில விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இனி என்ன நடக்கப் போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.

Pandian Stores Vijay TV

அதிர்ச்சியில் ராஜி

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், டான்ஸ் ஆடிப் பழகும் இடத்தில், மாஸ்டர் ஒருவர் ராஜியைத் தொட்டு, "இப்படித்தான் ஆடணும்" என்று சொல்லித் தருகிறார். இது ராஜிக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதைக் கவனித்த நடுவர், ராஜியிடம் "வேற டிரஸ் எதுவும் கொண்டு வரலையா? சுடிதார் மட்டும்தான் கொண்டு வந்தீங்களா?" என்று கேட்கிறார். அதற்கு ராஜி, "இதை மட்டும்தான் கொண்டு வந்தேன்" என்கிறார்.

மாஸ்டரின் செயல் பிடிக்காமல், அங்கிருந்து ராஜி உடனடியாக வெளியே ஓடி வருகிறார். வெளியே வந்த பிறகு, நடந்த விஷயத்தை கதிரிடம் சொல்லலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது, நடுவர் ராஜியிடம் வந்து, "உங்க பெயர் ராஜிதானே?" என்று கேட்டு ஒரு செல்ஃபி எடுக்கிறார். இதனால் ராஜி பயந்து போய் நிற்கிறார்.

கதிர் கேட்ட கேள்வி

இதற்கிடையில், கதிர் ராஜிக்குக் போன் போட்டு, "எல்லாம் சரியா இருக்கா?" என்று கேட்கிறார். ராஜி, நடந்ததைச் சொல்லாமல், "இங்க எந்தப் பிரச்சினையும் இல்லை, நான் நல்லாதான் இருக்கேன்" என்று சமாளிக்கிறார்.

மயிலின் அம்மா செய்யும் பிரச்சனை

மயிலின் அம்மா பாண்டியன் வீட்டுக்கு வந்து, "பக்கத்து வீட்டுப் பொண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கு" என்று சொல்கிறார். அதைக் கேட்ட கோமதி, "ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் குழந்தை பிறக்குது, இந்த வீட்டிலதான் அப்படி ஒண்ணும் நடக்கல" என்று சலிப்பாகப் பேசுகிறார்.

போட்டு கொடுத்த சுகன்யா

கோமதி போனதும் என்ன இவங்க இப்படி பேசுறாங்க என்று மயில் அம்மா மயிலிடம் கேட்க, ஆமா இவங்க குழந்தை இல்லன்னு ஆனதும் ரொம்பவும் கோபத்தில் இருக்கிறாங்க என்று மயில் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த சுகன்யா எந்த வீட்டில் இப்படித்தான் நடக்கிறது இது ராஜ்ஜியம் மீனாவும் எவ்வளவோ தப்பு பண்ணி இருக்காங்க ஆனா அதை எல்லாம் இவங்க மறந்துட்டாங்க மன்னிச்சிடுவாங்க நானும் மயிலும் ஏதாவது சின்ன தப்பு செஞ்சா மட்டும் அதை பெருசா பேசுறாங்க என்று சொல்கிறார். அதைக் கேட்ட மயிலின் அம்மா, "இவளை நம்பலாமா?" என்று மயிலைப் பார்த்துக் கேட்கிறார்.

மறுபக்கம், ராஜி வெளியே தனியாக இருக்க, இரண்டு பேர் அவளிடம் வந்து, "இதுக்கு முன்னாடி ஏதாவது ஷோ செய்தீங்களா? யாராவது தவறாக நடந்துகொண்டார்களா?" என்று கேட்கிறார்கள். ஆனால், ராஜி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருக்கிறார்.

இப்படி, ராஜியின் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேற, அடுத்த எபிசோடில் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+