பாண்டியன் ஸ்டோர்ஸ்: குமாருக்காக கோமதி சொன்ன விஷயம்! பாண்டியன் கொடுத்த அதிர்ச்சி! கலங்கும் குடும்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், குடும்ப உறவுகள் மற்றும் பிரச்சனைகள் சுற்றியே நகர்ந்து வருகிறது. சமீபத்தில் குமாருக்கு ஏற்பட்ட பிரச்சனையால், பாசமான அந்த குடும்பம் இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. நேற்று நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக, இன்றைய எபிசோட், குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான மனப் போராட்டங்களை உணர்வுபூர்வமாகக் காட்டியது.

குமாரின் தவிப்பு
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் குமார் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இரக்கின்றனர். அப்போது தன் மீதான பிரச்சனையால் மனம் உடைந்துபோன குமார், "சாப்பாடு தொண்டையில் இறங்கவில்லை" என்று பாதியிலே எழுந்து போய் விடுகிறார். மாரி கண்ணீருடன், "அவன் குழந்தையாக இருக்கும்போது எப்படிச் சாப்பிடுவான்?" என்று அழுகிறார்.
அதைத்தொடர்ந்து குமாரின் அம்மா ராஜியிடம் அழுதப்படியே வீட்டில் நடந்த பிரச்சனைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். எப்படியாவது குமார் மீது கொடுத்த கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்க சொல்லி மீண்டும் வற்புறுத்துகிறார். குமாருடைய மனம் மாற்றம் பற்றி சொல்லிக்கொண்டு இப்போ குமாரை ஜெயிலில் போட்டால் எப்படியும் ஐந்து வருடத்திற்கு வெளியே வர முடியாது நீ தான் ஏதாவது செய்யணும் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
மறுபுறம், குமாரின் பாட்டி, மகள் கோமதியிடம் குமாரின் நிலைமையைக் குறித்துப் பேசி அழுகிறார். மகனின் நிலை கண்டு கோமதியும் கலங்கி நிற்கிறார். இது குடும்பத்தில் உள்ள மூத்த உறுப்பினர்கள் படும் துயரத்தைக் காட்டுகிறது.
ராஜியின் முடிவும், பாண்டியனின் கோபமும்
குமார் மீது புகார் அளித்த ராஜி, சாலையில் தனியாக நடந்து வரும்போது, வடிவு அவரைச் சந்திக்கிறார். "நீ வீட்டை விட்டுப் போனதில் இருந்து மொத்த சந்தோஷமும் இல்லாமல் போச்சு. ஒருநாள் கூட நாங்க சிரிக்கவும் இல்லை, சந்தோஷமாவும் இல்லை" என்று வடிவு வருத்தத்துடன் சொல்கிறார். ராஜி, "கவலைப்படாதே, எல்லாம் சரியாகிடும்" என்று ஆறுதல் சொல்கிறார். அப்போது, வடிவு, "அந்தக் கம்ப்ளைன்ட்டை வாபஸ் வாங்கச் சொல்" என்று ராஜியிடம் கேட்க, ராஜி அதிர்ச்சியடைகிறார்.
மனம் குழம்பிப்போன ராஜி, மீனாவிடம் நடந்த அனைத்தையும் சொல்கிறார். மீனாவோ, "நீ மாமாவிடம் (பாண்டியனிடம்) குமாரின் பிரச்சனையைப் பற்றிப் பேசு" என்று ராஜியிடம் அறிவுறுத்துகிறார்.
இதனிடையே, கோமதி, தன் தாயின் கண்ணீர் கதையை பாண்டியனிடம் சொல்கிறார். இதைக் கேட்ட கதிர் கோபப்பட, பாண்டியன், "குமாரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்" என்று உறுதியாகக் கூறிவிடுகிறார். குடும்பம் இரு வேறு துருவங்களாக நிற்பது தெளிவாகத் தெரிகிறது.
பிறகு கோமதி ராஜி மற்றும் அரசியிடம் நடந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார். அரசிடம் நீ என்னை தப்பா நினைச்சுறதா. உன்ன ஒரு நாள் முழுக்க கடத்தி வைத்து அவன் சித்திரவதை பண்ணுனதை இப்போ நினைத்தாலும் கொலை நடுங்குது. ஆனால் அவனுக்கு தண்டனை கிடைத்து உள்ளே போயிட்டா அதற்குப் பிறகு என்னுடைய அண்ணன் குடும்பம் என்ன ஆகும்னு தெரியல. அதை நினைத்து தான் பயமா இருக்கு என்று புலம்பிக் கொண்டிருக்கும்போது ராஜி தானும் மாமாவிடம் இதை பத்தி தான் பேச வந்தேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
நீதிமன்றத்திற்கு சென்ற குமார்
பாண்டியனின் மனமாற்றத்திற்காகக் காத்திருந்த குமார், அவருக்கு மன்னிப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த பிறகு, தனது வழக்கறிஞர் சக்திவேல் உடன் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்.
ஒருபுறம் குமாரின் குடும்பத்தினரின் கண்ணீர், மறுபுறம் பாண்டியன் மற்றும் கதரின் பிடிவாதம் என, குடும்பம் பிளவுபடும் தருணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பாண்டியன் மனம் மாறுவாரா? குமாருக்கு நீதி கிடைக்குமா? அல்லது குடும்பம் பிளவுபடுமா? - அடுத்து வரும் எபிசோடுகள் இந்த கேள்விகளுக்கு விடை அளிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
குலதெய்வ கோவிலில் கணவருடன் மகிழ்ச்சியை பகிர்ந்த மணிமேகலை.. அடடா சூப்பர்! குவியும் வாழ்த்துக்கள் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு நடிகர் சிம்புவுடன் கல்யாணமா? லீக்கான போட்டோ.. பின்னணி சம்பவம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications