பாண்டியன் ஸ்டோர்ஸ்: ஏமாந்து போகும் சரவணன்! மீனா கேட்ட கேள்வி.. பாண்டியன் குடும்பத்திற்கு வந்த சிக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்தில் மற்றும் மீனா தனிக்குடித்தனம் சென்ற பிறகு, அவர்களின் ஈகோ மற்றும் குடும்பப் பாசம் குறித்த போராட்டம்தான் இப்போதைக்கு கதையின் முக்கியமான திருப்பம். கணவரின் கட்டாயத்துக்காகத் தனிக்குடித்தனம் வந்த மீனா, இன்று மாமியார் வீட்டுப் பாசத்துக்காக செய்த ஒரு சிறிய பொய், இருவருக்கும் இடையே பெரிய வாக்குவாதத்தைக் கிளப்பியது.

Pandian Stores serial vijay tv 2

தனிக்குடித்தனம்

செந்தில் ஆடம்பரச் செலவு செய்வதை விரும்பாத மீனா, தனிக்குடித்தனம் வருவது தனக்கு விருப்பம் இல்லை என்றாலும், கணவரின் கட்டாயத்துக்காக அரசு கொடுத்த விடுதியில் வேண்டா வெறுப்பாகத் தங்கியிருக்கிறார். மீனா ஒருபக்கம், "செந்தில் ஒரு மாதம் கூடத் தாக்குப்பிடிக்காமல் உடனே வந்துவிடுவார்" என்று தனக்குத்தானேச் சமாதானம் சொல்லிக்கொண்டாலும், செந்தில் தன் அப்பா வீட்டிற்குத் திரும்பி வர மாட்டார் என்பது மீனாவுக்கு நன்கு தெரியும்.

ஆறுதல்

செந்திலுக்கு அவருடைய மாமனார், மாமியார் ஆறுதலாக இருக்கிறார்கள். அதேபோல, மீனாவுக்கு அவரது மாமனார், மாமியார் தான் ஆறுதலாக இருக்கிறார்கள். "எப்படியாவது மாமியார் வீட்டுக்கு போவோம், அவங்க கையால சாப்பிடுவோம் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் மீனாவுக்கு, ஆபீஸில் அதிக வேலை இருந்ததால், அவர் சமையல் செய்யாமல் நேரடியாக இரவு தனது மாமியார் வீட்டிற்கு வந்துவிட்டார். அங்கே வடை, சிக்கன் என்று விருந்துச் சமையல் தயாராகிக் கொண்டிருந்தது!

பொய் சொன்ன மீனா!

விருந்துச் சாப்பாடு தயாராக இருக்கும்போது, மீனாவிற்குச் செந்தில் போன் போடுகிறார். சட்டையை அயர்ன் பண்ணச் சொல்லியும், சமையல் செய்து வைக்கச் சொல்லியும் செந்தில் உத்தரவு போட, விருந்துச் சாப்பாட்டிற்காக ஏங்கிக் கொண்டிருந்த மீனாவுக்குக் கடுப்பானது. செந்திலின் ஆர்டர்களை விரும்பாத மீனா, அங்கிருந்துப் புறப்பட மனமில்லாமல், "தனது கணவர் இங்கேயே இருக்கச் சொல்லிவிட்டார்" என்று மாமியாரிடம் பொய் சொல்லிவிடுகிறார்.

செந்திலின் வருகை

மீனா அங்கேயே இருப்பதாகக் கேள்விப்பட்ட செந்தில், உடனே அம்மாவுக்குப் போன் போட்டுப் பேசிவிட்டு, சற்றும் தாமதிக்காமல் கோபத்துடன் தனது வீட்டிற்கு வந்துவிட்டார். வீட்டிற்கு வந்த செந்திலுக்கும், மீனாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சண்டையின் முடிவில், மீனா உண்மையைச் சொல்லிவிடுகிறார்.

"செந்தில் இங்கு இருக்கச் சொல்லவில்லை" என்ற உண்மையை மீனா தனது மாமியாரிடம் சொல்லிவிடுகிறார். இதைத் தொடர்ந்து, செந்தில் தனது அண்ணன், தம்பி மற்றும் மாமாவையும் அழைத்துக் கொண்டுச் சமைக்காத வீட்டிற்குச் சென்றுவிடுகிறார். அங்கு எல்லாரும் சேர்ந்து முட்டைப் பொரியல் செய்துச் சாப்பிடுகிறார்கள்.

குடும்ப பாசம் Vs. தனி ஆசை

வித்தியாசமான ரசனை கொண்ட செந்திலின் ஆசை குறித்து அண்ணன் தம்பிகள் பேசிக் கொள்கிறார்கள். "இப்படி ஒரு அழகான வீட்டை வைத்துக் கொண்டு மீனா அங்கேயே (மாமியார் வீட்டிலேயே) இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறாள்" என்றுச் செந்தில் தனது ஆதங்கத்தைச் சொல்ல, தம்பிகளில் ஒருவர், "ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி அண்ணா. உனக்குத் தனியாக இருக்க வேண்டும் என்று ஆசை, ஆனால் அண்ணிக்குக் குடும்பமாக இருக்க வேண்டும் என்று ஆசை" என்று எடுத்துச் சொல்கிறார்.

மீனாவின் பாசமும், செந்திலின் தனித்து வாழும் ஆசையும் எப்போது இணையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இதோடு இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் காட்சிகள் முடிவுக்கு வந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+