பாண்டியன் ஸ்டோர்ஸ் கதை மாறிடுச்சே! அடுத்தடுத்து கர்ப்பம்.. ராஜி கண்டுபிடித்த உண்மை.. தரமான சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஏப்ரல் 24ஆம் தேதிக்கான எபிசோடில், பழனி தன்னுடைய மனைவி சுகன்யா கர்ப்பமாக இருப்பதாக மொத்த குடும்பத்தினரிடமும் சொல்லி இருக்கிறார். இதனால் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். ஏற்கனவே தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார் அதை தொடர்ந்து இப்போது சுகன்யாவும் கர்ப்பமாக இருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று விரிவாக பார்க்கலாம்.

Pandian Stores 2 serial Pandian Stores serial 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்ததும் அவரை மீண்டும் வீட்டிற்கு வர சொல்லி கோமதி கூப்பிட போயிருந்தார். அதற்கு தங்கமயில் நான் இப்போதைக்கு எங்கும் வரவில்லை என்று சொல்லி முடித்து விட்டார். இது ஒரு பக்கம் இருக்க, இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் பழனியும் சுகன்யாவும் கோமதி வீட்டிற்கு வருகின்றனர்.

அடுத்த குழந்தை

அப்போது பாண்டியன் வீட்டில் எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கமாக இருக்க, அனைவரையும் பழனி ஹாலுக்கு வர சொல்கிறார். பிறகு எல்லோரிடமும் ஸ்வீட் கொடுத்து சுகன்யா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டதும் கோமதி உட்பட எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். ஏற்கனவே வீட்டுக்கு ஒரு குழந்தை வரப்போகுது, இப்போது அடுத்த குழந்தையும் வரப்போகுது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

குடும்பத்தில் சந்தோஷம்

அந்த நேரத்தில் பழனி செந்திலுக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல, செந்திலும் வாழ்த்துக்கள் சொல்கிறார். பிறகு ட்ரீட் வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக பழனியும் கதிரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிர் பழனிக்கு வாழ்த்துக்கள் சொல்கிறார். பிறகு பழனி கதிரிடம் நீயும் சீக்கிரமா குழந்தை பெத்துக்கிட்டா நாம எல்லாரும் ஒன்னா வளர்ந்த மாதிரி நம்முடைய குழந்தைகளும் ஒன்றாக வளரும் என்று சொல்கிறார்.

அதற்கு கதிர் என்னால, இப்போதெல்லாம் குழந்தையை பற்றி யோசிக்கவே முடியாது. முதலில் ராஜி ஐபிஎஸ் ஆகணும், நானும் பிசினஸ் கவனிக்கணும் அதற்குப் பிறகு பார்த்துக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு அம்மாச்சியை உங்க கூட வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா என்று கேட்க, பழனி என்ன ஆச்சு எதுவும் பிரச்சனையா என்று கேட்கிறார்.

குழப்பத்தில் பழனி

இல்ல நம்ம வீட்டுல அப்பா அம்மாவு இதுவரைக்கும் இப்படி சண்டை வந்ததே கிடையாது. ஆனால் அம்மாச்சி இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் அவங்க ரெண்டு பேரும் ரொம்ப நாள் பிரிஞ்சி இருந்தாங்க. இனிமேலும் அது போல ஒரு பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று தான் நான் இப்படி யோசிக்கிறேன் என்று கதிர் சமாளிக்கிறார். (ஏற்கனவே ராஜி அப்பா முத்துவேல் தனக்கு கேன்சருக்கான ட்ரீட்மென்ட் எடுக்குறதுக்கு முன்னாடி தன் அம்மாவோட கொஞ்ச நாள் வாழனும்னு ஆசைப்பட்டதால எப்படியாவது அப்பத்தாவே அந்த வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கதிர் ப்ளான் போடுகிறார்)

கதிர் போடும் பிளான்

ஆனால் கதிர் பேசுவதை பார்த்து ஏதோ சம்பவம் இருக்கு என்று புரிந்து கொண்ட பழனியும் அப்பத்தாவிடம் சென்று நீ நம்ம வீட்டுக்கு வந்துரு அப்பத்தா என்று கூப்பிட, அதற்கு அப்பத்தா முடியாது என்று சொல்லி விடுகிறார். நான் சக்திவேலுடன் சண்டை போட்டுட்டு அங்கிருந்து வந்து இருக்கேன், இப்போ அவன் கூப்பிடாம நான் அந்த வீட்டுக்கு வந்தேன்னா அவன் என்கிட்ட மீண்டும் சண்டைக்கு வருவான் என்று சொல்லி விடுகிறார்.

Pandian Stores 2 serial Pandian Stores serial 2

ராஜி கண்டுபிடித்த உண்மை

இதனால் கதிர் சோகமாக இருக்கிறார். இதை எல்லாமே ராஜி கவனித்து விடுகிறார். பிறகு ராஜியும் கதிரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது இதுபற்றி ராஜி கதிரிடம் கேட்கிறார். உனக்கு அப்பத்தா நம்ம வீட்ல இருக்கிறதுல எதுவும் பிரச்சனையா? எதற்காக அப்பத்தாவை அனுப்பி வைக்க பாக்குற என்று கேட்க, அதற்கு எந்த உண்மையையும் சொல்லாமல் கதிர் சமாளித்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+