எனக்கும் ஆதவனுக்கும் பிறந்த குழந்தை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் விலாசினியின் க்யூட்டான வீடியோ!
சென்னை: சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமாக இருக்கும் விலாசினி வெளியிட்ட வீடியோ தான் இப்போ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அவருக்கும் ஆர்ஜே ஆதவனுக்கும் ஒரு குழந்தை இருக்கிறது என்று பலரும் கூறி வந்த நிலையில், முதல் முறையாக தன்னுடைய குழந்தையோடு கொஞ்சி விளையாடும் க்யூட்டான வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

சீரியல் நடிகை விலாசினி
விலாசினி மற்றும் ஆதவன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுள்ளனர் என்ற தகவல்கள் சில நாட்களாக பரவி வந்தன. இதற்கு லைவில் விலாசினி மறுப்பு தெரிவித்திருந்தார். ஆனால் அவர்கள் லிவிங்கில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் குழந்தையோடு இருக்கும் வீடியோவை வெளியிட்டதும் அது பேசு பொருளாக மாறி இருக்கிறது.
அதாவது, தனது சமூக வலைதளத்தில் ஒரு அழகான வீடியோவை வெளியிட்டு, தனது குழந்தையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த குழந்தையின் பெயர் "மீரா ஆதவன்" என்றும், "என் வாழ்க்கையில் கிடைத்த வரம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ஜே விலாசினி பதிவு
அந்த வீடியோவில், கர்ப்ப கால ஸ்கேன் வீடியோஸ், டெலிவரி நேரத்தில் எடுத்த புகைப்படங்கள், குழந்தை பிறந்தது முதல் தற்போது வரை எடுத்த சில அழகான தருணங்கள் ஆகியவற்றையும் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இத்தனை நாளாக தனிப்பட்ட வாழ்க்கையை வெளியே காட்டாமல் வைத்திருந்த விலாசினி, தற்போது தனது குழந்தையை வெளிப்படையாக அறிமுகப்படுத்தியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை
விலாசினி தற்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் வாகை சூடவா போன்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருப்பது சின்னத்திரை ரசிகர்களிடம் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
மேலும் விலாசினி, பழைய பேட்டியில் தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களை மனம் திறந்து பகிர்ந்திருந்தார். அதில், "இசையமைப்பாளர் இளையராஜா எனக்கு மாமா முறை தான்" என்று கூறிய அவர், பெரிய குடும்பம் இருந்தாலும் தனக்கு உதவி கிடைக்காத வேதனையையும் வெளிப்படுத்தினார்.
சின்ன வயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டிருந்த விலாசினி, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு போன்றவர்களுடன் வளர்ந்த நினைவுகளையும் பகிர்ந்தார். பாடகியாக வேண்டும் என்ற ஆசையுடன் வாய்ப்புகளை தேடி அலைந்த அவர், பின்னர் RJ, VJ ஆக தனது பயணத்தை தொடங்கி சீரியல் உலகில் அடியெடுத்து வைத்தார்.
முதல் திருமண வாழ்க்கை
ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக அமையவில்லை. திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள், முதல் கணவரின் துன்புறுத்தல் போன்ற காரணங்களால் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்ததாகவும், அந்த காலகட்டம் மிகவும் கஷ்டமானதாக இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு விலாசினியின் குழந்தையின் முதல் பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. அதற்கு பிறகு இப்போது தன்னுடைய குழந்தையுடன் எடுத்த அழகிய வீடியோக்கள் புகைப்படங்களை அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருக்கிறார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் பலரும் இனியாவது விலாசினியின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்திருக்கட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications