தனம் 2 மாசம் முழுகாம இருக்காம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஹேப்பி!
சென்னை: முல்லை மறைந்த சோகத்தில் இருந்து வரும் பாண்டின் ஸ்டோர்ஸ் குடும்பம் இப்போது மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளது. ஆமாங்க, தனம் 2 மாசம் முழுகாம இருக்காம்.
முல்லையை இழந்த சோகத்திலிருந்து இன்னும் யாரும் மீளவில்லை குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் தொடர்ந்து சோகமாகத்தான் உள்ளனர் .இந்த நிலையில் சற்று ஒரு மகிழ்ச்சியானசெய்தி ஒன்று வந்துள்ளது.
மூத்தவரான தனம் இப்போது முழுகாமல் இருக்கிறாராம் .கதைப்படி அவருக்கு சில நாட்களாகவே வயிறு புரட்டிக் கொண்டிருந்தது. இதுதொடர்பாக வீட்டில் உள்ளவர்கள் கூட கவலைப்பட்டிருந்தனர்.

வயிற்றைப் பெரட்டிய கர்ப்பம்
அடிக்கடி வயிற்றைப் பெரட்டுது பெரட்டுதுன்னு சொல்லிட்டிருந்தார் தனம் .முல்லை கூட டாக்டர் கிட்ட போகலாமாக்கா.. உங்களுக்கு பெருசா ஏதாவது பிரச்சினையாக்கா என்று கேட்டுக் கொண்டிருந்தார் .மாமியாரும் கூட இஞ்சிக் கசாயம் வச்சு குடி தனம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் தனம்தான் அதையெல்லாம் தட்டிக் கொண்டே வந்தார்.

கர்ப்பமானார் தனம்
அவருக்குத் தெரியும் தான் கர்ப்பமாக இருப்பது .ஆனால் அதை வெளிப்படையாக சொல்லாமல் இருந்து வந்தார் .தனது கணவரிடம் கூட அவர் ரொம்பப் பூடகமாகவே இதை சொல்லிக் கொண்டிருந்தார் .இந்த நிலையில் இன்று தனது கர்ப்பத்தை தனத்திடம் டாக்டர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுதான் இன்று வரப் போகும் சீன். இதைத்தான் இப்போது புரோமாவிலும் காட்டிக் கொண்டுள்ளனர்.

சோகம் மறையுமா
முல்லை இறந்த சோகத்தில் இருக்கும் குடும்பத்துக்கு இது மகிழ்ச்சியான செய்திதான் .டாக்டரிடம் தனத்தை செக்கப்புக்காக கூட்டிச் செல்கிறார் மூர்த்தி .அங்கு தனத்தை பரிசோதிக்கும் டாக்டர் தனம் 2 மாசம் முழுகாமல் இருப்பதை உறுதிப்படுத்திச் சொல்கிறார். இதைக் கேட்டு மூர்த்தி பெருமிதத்தில் மூழ்கிறார். மேலும் தனத்துக்கும் கூட பெரும் பூரிப்புதான்.

குத்திக் காட்டிய மீனா அப்பா
இது லேட் பிரக்னன்சி என்பதால் ரொம்பக் கவனமாக இருக்கணும் என்றும் டாக்டர் அறிவுறுத்துகிறார் .சமீபத்தில்தான் மீனாவைக் கூப்பிடுவதற்காக அவரது வீட்டுக்கு தனமும், மூர்த்தியும் போயிருந்தனர் .அப்போது மூர்த்திக்கு குழந்தை பெற வக்கில்லை என்று குத்திக் காட்டி பேசியிருந்தார் மீனாவின் அப்பா .அதைக் கேட்டு ரொம்பவே கோபப்பட்ட தனம் என் கணவரைப் பத்தி பேசினீங்க நடப்பதே வேறு என்று கொந்தளித்திருந்தார்.

கதைப் போக்கு மாறுமா
இந்த நிலையில்இப்போது தனம் முழுகாமல் இருப்பதாக வந்துள்ள செய்தி அடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் என்ன மாதிரியான கொண்டாட்ட மன நிலை இருக்கப் போகிறது என்பதை கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது .மேலும் இந்த கர்ப்பத்தை வைத்து கதைப் போக்கிலும் கூட மாற்றங்கள் கொண்டு வரப்படலாம் என்றும் தெரிகிறது.

என்ன குழந்தை பிறக்குமோ
ஏற்கனவே மீனாவுக்கும் பெண் குழந்தைதான் பிறந்துள்ளது .அக்குழந்தைக்கு கயல் விழி என்றும் பெயர் வைத்துள்ளனர் .இப்போது தனத்துக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்று தெரியவில்லை .ஒருவேளை பெண் குழந்தையாக பிறந்து அதற்கு முல்லை என்று பெயர் வைத்தாலும் வைக்கலாம். யார் கண்டது. கதைப் போக்கை அப்படிக் கொண்டு போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லைதான்.

முல்லை கேரக்டர் என்னாகுமோ
இதற்கிடையே முல்லை கேரக்டர் என்னாகப் போகிறது என்று தெரியவில்லை . சித்ரா நடித்த கடைசி எபிசோட் காட்சிகளும் கூட எப்போது ஒளிபரப்பாகும் என்றும் தெரியவில்லை . அதுகுறித்து இயக்குநரோ, சேனல் தரப்போ எதையும் சொல்லவில்லை. ஆனால் நிச்சயம் சித்ரா நடித்த கடைசிக் காட்சிகளை சிறப்பான நேரத்தில் ஒளிபரப்பலாம் என்று தெரிகிறது. அனேகமாக ஞாயிற்றுக்கிழமை அதைக் காட்டலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications