பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையா இது? முகமெல்லாம் இப்படி இருக்கு! பீல் பண்ணும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் பாகத்தில் நடித்த நடிகை காவியா அறிவுமணி தன்னுடைய முகம் எல்லாம் அடிபட்டு இரத்தத்தோடு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அந்த புகைப்படம் பற்றிய சுவாரசியமான தகவல்களை காவியா அறிவுமணி கூறி இருக்கும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் பல நடிகைகள் சின்னத்திரையில் இருக்க வெள்ளித்திரையில் அடி எடுத்து வைத்து அங்கு தங்களுக்கான ஒரு இடத்தை பிடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் பல நடிகைகள், நடிகர்கள் இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன், சந்தானம் மட்டுமல்லாமல் வாணி போஜன், பிரியா பவானி சங்கர் என்ற பல நடிகைகளும் இருக்கிறார்கள். இந்த வரிசையில் நடிகை காவியா அறிவுமணியும் ஒருவர்.

சமூக வலைத்தளத்தில் பிஸி
இவர் சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார் அதிலும் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அதுபோல போட்டோ ஷூட் மூலமாக சமூக வலைத்தள பக்கங்களிலும் செம ஆக்டிவாக இருந்தார். அடிக்கடி போட்டோஸ் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை பகிர்ந்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
அதிர்ச்சி புகைப்படங்கள்
இப்போது திரைப்படங்களிலும் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் காவியா அறிவுமணியின் முகம் எல்லாம் ரத்தம் வடிந்தபடி இருக்கிறது. அதைபார்த்து பதறி போன ரசிகர்களுக்கு இது சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
நீண்ட பதிவு
அதோடு ஒரு நீண்ட பதிவு வெளியிட்டு இருக்கிறார் அதில் இந்த புகைப்படங்கள் எல்லாம் நிறம் மாறும் உலகில் என்ற திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டவை. இந்த திரைப்படத்தில் மலர் என்ற கேரக்டரில் தான் காவியா நடித்திருக்கிறார். அந்த கேரக்டருக்கு வார்த்தைகளால் நன்றி சொல்ல முடியாது, நான் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு எனக்கு சவாலான ஒரு பாத்திரம் இந்த படத்தில் கிடைத்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை
இந்த கேரக்டர் வார்த்தைகள் இல்லாமல் பேசும். ஆனால் நிறைய விஷயங்களை வெளிப்படுத்தும். நடிப்பதற்கு உண்மையிலே சிறப்பாக இருந்தது. ரசிகர்கள் எனக்கு மிகுந்த அன்பு மற்றும் ஆதரவு தந்ததற்கு நன்றி. என்னை நம்பியதற்காக பட குழுவிற்கு மிகப்பெரிய நன்றி, இந்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.
முல்லை கேரக்டர்
அதுபோல காவியா அறிவுமணி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விஜே சித்ராவின் இறப்பிற்கு பிறகு முல்லை கேரக்டரில் நடித்து வந்தார். ஆரம்பத்தில் இவருக்கு முல்லை கேரக்டர் செட் ஆகுமா என்று கேள்விகள் எழுந்தது. ஆனால் நாட்கள் போகப்போக இவரும் விஜே சித்ராவின் இடத்தை பிடித்துவிட்டார். அதற்குப் பிறகு அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார். திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருந்தார்.

புது திரைப்படங்கள்
அதிலும் மிரள் என்ற திரைப்படத்திலும் இவருக்கு நல்ல கேரக்டர் கிடைத்து இருந்தது. அடுத்ததாக இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவருடைய திரைப்படங்கள் வெளியாகாமல் இருந்தது. இப்போது நிறம் மாறும் உலகில் என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் வெள்ளித்திரையில் தோன்றியிருக்கிறார்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications