பாண்டியன் ஸ்டோர்ஸ்: பாண்டியன் முன்பு அரசியை அடித்த குமாரவேல்.. கடைசியில் “சாம்பார்” குளியல்.. தரமான சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 ஜூன் 5-ம் தேதி முதல் 7ஆம் தேதி வரைக்குமான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாண்டியனை பழிவாங்குவதற்காக பாண்டியன் முன்பு குமாரவேல் அரசியை அடிக்கிறார். ஆனால் கடைசியில் அரசி குமாரவேலுக்கு சரியான தண்டனை கொடுத்து இருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எதிர்பாராத கதை களத்தால் சீரியல் இப்போது சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே மயில் பற்றிய உண்மைகள் தெரிந்து வந்ததும் சரவணன் குடும்பத்தினர் யாரிடமும் அந்த உண்மைகளை சொல்லாமல் மயிலை அவருடைய வீட்டிலேயே கொண்டு சென்று விட்டு இருக்கிறார். இந்த உண்மைகள் பாண்டியனுக்கு தெரிய வர வரும்போது அவர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் இருக்கிறது.

எதிர்பாக்காத கதை
அதே நேரத்தில் அரசி பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று பிளான் போட்ட குமாரவேலுக்கு எதிர்பார்க்காத தண்டனை கொடுத்திருக்கிறார். தனக்குத்தானே தாலியை கட்டிக் கொண்டு இது குமாரவேல் கட்டிய தாலி என்று குடும்பத்தினருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ஆனால் (இது தேவையில்லாத கதை) இதுபோல யாரும் ரியலாக யோசித்தால் அது தவறான முடிவு. சீரியலில் சுவாரசியத்திற்காக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அரசி எடுத்த முடிவை எல்லோரும் பாராட்டி இருக்கிறார்கள் அவ்வளவுதான்.
பொய்யான திருமணம்
அதுபோல அரசியின் பொய்யான திருமண விஷயத்தை மீனா மற்றும் ராஜியிடம் அரசியே சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த உண்மைகளை வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று அரசி சத்தியம் வாங்கி இருக்கிறார். (இதை வைத்து இனி ஒரு சில வருடங்கள் உருட்டி விடுவார்கள்.) இதற்கு இடையில் இன்று வெளியான ப்ரோமோவில் பாண்டியனை பழிவாங்குவதற்காக பாண்டியன் முன்பு குமாரவேல் வீட்டு வாசலில் பைக்கில் இருந்து கொண்டு என்னுடைய பர்சை எடுத்துட்டு வா என்று அரசியிடம் சொல்கிறார்.

அரசியை அடித்த குமரவேல்
அரசியும் பயந்து போய் பர்ஸை எடுத்துக் கொண்டு வர, இது யார் பர்ஸ்? உன்ன உங்க வீட்டுல எப்படி வளர்த்து இருக்காங்க? என்று பாண்டியன் முன்பு அரசியை தலையில் குட்டுகிறார். இதனால் பாண்டியன் கோபத்தில் பைக்கை போட்டுவிட்டு போகிறார். அடுத்ததாக அரசி வீட்டில் தனியாக இருக்கும்போது அங்கு வரும் குமாரவேல் தனக்கு பசிக்கிறது சாப்பாடு எடுத்து வை என்று அதட்ட அதற்கு அரசையும் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வருகிறார்.

அரிசியின் அதிரடி
அப்போது இப்பதான் உன்னுடைய அப்பாவின் வீக்னெஸ் எனக்கு புரிந்திருக்கிறது, உன்ன அடிச்சு சித்திரவதை செஞ்சா உங்க அப்பா ரொம்பவே பயப்படுறாரு என்று குமாரவேல் சொல்ல, அதற்கு அரசி எங்க அப்பாவ பத்தி எதுவும் சொல்லாதீங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது மீண்டும் குமாரவேல் பேசிக் கொண்டே இருக்க, அதனால் கடுப்பாகும் அரசி சாம்பாரை எடுத்து குமாரவேல் தலையில் ஊற்றுகிறார்.
காமெடி வில்லன்
குமாரவேலு அலறும் சத்தத்தை கேட்டு மொத்த குடும்பத்தினரும் வருகின்றனர். இதனால் அரசி செய்த செயலுக்கு குடும்பத்தினர் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் அரசி எப்படியும் சாம்பார் தெரியாமல் தலையில் கொட்டி விட்டு என்று தான் சமாளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அரசியை அடிக்கப் போக்கும் போது அரசி நழுவிவிட அப்போது அங்கு இருந்த சுவற்றில் குமார் கையை குத்த அவருக்கு தான் அடிபட்டு இருந்தது. இப்போது மீண்டும் அரசியிடம் வம்பு செய்து அடிவாங்கி இருக்கிறார். இந்த சீரியலில் அடி வாங்குவதற்கே செய்து வைத்த வில்லன் கேரக்டர் தான் இந்த குமாரவேல். இன்னும் என்னவெல்லாம் சோதனைகள் அவருக்கு வர போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications