பாண்டியன் ஸ்டோர்ஸ்: வீட்டுக்கு வந்ததும் அரசி சொன்ன வார்த்தை! ஆடிப்போன பாண்டியன்.. பாவம் மனுஷன்! மீண்டும் பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 ஜூலை 17ஆம் தேதிக்கான எபிசோடில் அரசி குமார் பற்றி சொன்ன உண்மைகளை கேட்டு குமாரின் பெரியப்பா மற்றும் அப்பாவிற்கு சண்டை வருகிறது. அதே நேரத்தில் அரிசி வாழ்க்கைக்காக குழலி முக்கிய கேள்வி கேட்டிருக்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் அரசியை வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு வந்ததும் இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கிறது நீ அன்னைக்கே உண்மையை சொல்லி இருக்கலாமே? அந்த குமார் தான் என்னை கடத்திட்டு போனான் என்று சொல்லி இருந்தா நாங்க அப்பவே என்ன முடிவெடுத்து இருக்கணுமோ அதை எடுத்து இருப்போமே என்று பாண்டியன் சொல்ல, உங்ககிட்ட சொல்ல எனக்கு பயமாயிருந்தது அப்பா.

Pandian Stores Vijay TV

நீங்க அவன் சொன்னதை நம்பிட்டீங்களோனு பயந்துட்டேன் என்று சொன்னதும், பாண்டியன் அதிர்ச்சி அடைகிறார். என்னை விட அந்த கடத்தினவனே பரவாயில்லன்னு நினைச்சிட்டியா? அந்த அளவுக்கு நான் உன்னை கொடுமைப்படுத்தி இருக்கேனா? உன் மேல நம்பிக்கை இல்லாம நடந்திருக்கேனா? என்று ஃபீல் பண்ணி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது அரசி எனக்கு பயமா இருந்துச்சு ஏற்கனவே படம் பார்க்க போனேன்னு உண்மை தெரிஞ்சதும் நீங்க எல்லாரும் நடந்துக்கிட்டது வச்சு பயந்துட்டேன் என்று சொன்னதும், சரவணன் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே என்று கேட்கிறார்.

அதற்கு மீனா நீங்க அரசியை தியேட்டர்ல வச்சு பார்த்தபோது நேரடியா வந்து மாமா கிட்ட சொன்னிங்களே... அதை விட்டுட்டு நீங்க அண்ணன் தம்பிகள் பேசி, அரசி செஞ்சது தப்புன்னு புரிய வச்சிருக்கலாமே அப்படி வச்சிருந்தா அரசி இதையும் நம்பி சொல்லி இருப்பா என்று சொன்னதும் தங்கமயில் தன்னுடைய புருஷனுக்காக சப்போர்ட் பண்ணி பேசுகிறார். இதனால் வாக்குவாதம் ஏற்படுகிறது.

பிறகு பாண்டியன் எல்லாரையும் அமைதியாக இருக்க சொல்லி இனி யாரும் எது பண்ணினாலும் தயவு செய்து சொல்லுங்க என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார். மறுபக்கத்தில் குமார் வீட்டில் சண்டை நடக்கிறது. அப்போது குமாருடைய பெரியப்பா நீ தான் அந்த பொண்ணை கடத்தி கூட்டிட்டு வந்து இருக்க என்று கோபப்பட்டு அவரை போட்டு அடிக்கிறார். அதற்கு குமாரின் அப்பா என் பையனை அடிக்காத நீதான் ஓடுகாளி பிள்ளையை பெத்து வச்சிருக்க, அவ பண்ணுன கேவலத்தால தான் அந்த குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று என் மகன் இப்படி பண்ணுனான் என்று சப்போர்ட் பண்ணி பேசுகிறார்.

இதனால் குமார் குடும்பத்திற்குள் சண்டை வருகிறது. அடுத்ததாக குழலி, ராஜி, மீனா, அரசி பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது நல்லவேளை அன்னைக்கு சண்டை வந்ததால தான் உண்மைய சொன்னா.. இல்லன்னா இன்னும் உண்மைய சொல்லாம அந்த வீட்டிலேயே கஷ்டப்பட்டுட்டு இருந்திருப்பார் என்று குழலி சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு ராஜியும் மீனாவும் எங்க கிட்ட சொல்லக்கூடாதுன்னு சத்தியத்தை வாங்கிட்டு ஒரு வழியா நீயாவது சொல்லிட்டியே இப்பதான் எங்களுக்கு நிம்மதியா இருக்கு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது குழலி அத்தை பையன் கிட்ட பேசி உனக்கு மீண்டும் கல்யாணத்தை பண்ணி வச்சிடலாமா? என்று கேட்க, அதற்கு மீனாவும் ராஜியும் அரசி பட்ட கஷ்டம் போதும் இனியாவது அவள் ஆசைப்பட்ட படிப்பை படிக்கட்டும். அதுக்கப்புறம் அவளுடைய வாழ்க்கையை பார்த்துக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+