பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: பாண்டியன் குடும்பத்திற்கு வர போகும் பெரிய பிரச்சனை.. செந்திலிடம் மாமனார் சொன்ன விஷயம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஜூலை ஒன்றாம் தேதிக்கான எபிசோடில் பாண்டியன் செந்திலை அசிங்கப்படுத்தி பேசுகிறார். அதே நேரத்தில் அவருடைய மாமனார் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சக்திவேல் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்கின்றனர். அப்போது குமார் சாப்பிட உட்காரும்போது அரசியை சாப்பாடு பரிமாற சொல்கிறார். அவர் சாப்பாடு வைக்கும்போது குமார் வேணும்னே தட்டை தள்ளி வைக்க சாப்பாடு டேபிளில் விழுந்து விடுகிறது. இதனால் குமார் கடுப்பாகி உன்னை எல்லாம் என்ன வளர்த்தாங்க? உனக்கு இது கூட சொல்லிக் கொடுக்கலையா? என்று திட்டுகிறார்.

அதற்கு குமாரின் அம்மா வந்து நீ சாப்பிட உட்காரு நான் பாத்துக்குறேன் என்று சொல்கிறார். ஆனால் அப்போ இதை யாரு சுத்தம் பண்ணுவாங்க என்று குமார் கேட்க, அரசி நானே சுத்தம் பண்ணுகிறேன் என்று அதை சுத்தம் பண்ணிவிட்டு போகிறார். இதை பார்த்து அப்பத்தா கடுப்பாகி குமாரை திட்டுகிறார். பிறகு குமார் தன்னுடைய ரூமில் தனியாக இருக்கிறார். அப்போது அரசி வருகிறார். அவரைப் பார்த்ததும் உன்னை அசிங்கப்படுத்துவது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று குமார் சொல்லிக் கொண்டிருக்கும் போது, அரசி குமாரை போது அடித்து தாலி கயிற்றை வைத்து கழுத்தை நெரிக்கிறார். அப்போது குமார் அலற அரசி அழுத்தி பிடித்து விடுகிறார்.
ஒரு கட்டத்தில் அவரை வெளியே போய் படுக்க சொல்ல அதற்கு நான் போக மாட்டேன் என்று குமார் சொல்கிறார் பொய் தான் ஆகணும் என்று மிரட்டி படுக்கையை கொடுத்து வெளியே தள்ளுகிறார். அப்போது சக்திவேல் வந்து என்ன ஆச்சு என்று கேட்க, அவ கூட எனக்கு படுக்க பிடிக்கல என்று குமார் சமாளிக்கிறார். உடனே சக்திவேல் நான் கூட அந்த பாண்டியன் பொண்ணு சாம்பாரை கொட்டியே உன்னை கொன்னுடுவானு நினைச்சேன் ஆனா நீ திமிரா இருந்து என் பையன்னு நிரூபிச்சிட்டேன் என்று சொல்லிக் கொண்டு போகிறார்.
மறுபக்கத்தில் மீனாவின் அப்பா செந்திலுக்கு போன் செய்து உடனே வர சொல்கிறார். என்ன விஷயம் என்று சொல்லாததால் மீனாவும் செந்திலும் பதட்டமாக கிளம்புகின்றனர். அப்போது பாண்டியனிடம் போய் இதை சொல்ல போக பாண்டியன் செந்திலுக்கு ஒரு வேலையை சொல்கிறார். அதற்கு செந்தில் நான் மீனா வீட்டுக்கு போயிட்டு வரவா என்று கேட்க, இப்போ எதுக்கு போற? நைட்டு போகலாமே, இல்ல சாப்பாடு டைமில் போகலாமே என்று சொல்கிறார்.
அப்போதும் மீனா வந்து அப்பா அவசரமா வர சொன்னாரு அவருக்கு உடம்புக்கு எதுவுமோனு பயமாயிருக்கு என்று சொன்னதுமா கோமதி நீங்க ரெண்டு பேரும் உடனே போய் அப்பாவை பாருங்க, என்ன ஆச்சுன்னு எனக்கு கால் பண்ணி சொல்லுங்க என்று அனுப்பி வைக்கிறார். அடுத்ததாக மீனா அப்பா வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நீ உங்க உடம்புக்கு எதுவும் இல்லையே என்று கேட்க அதற்கு அவர் அதெல்லாம் ஒன்னும் இல்ல வேலை விஷயமா தன் பேசணும்னு வர சொன்னேன் மாப்பிள்ளைக்கு பொதுப்பணி துறையில் வேலை போட்டு கொடுத்து இருக்காங்க. போன் வந்ததும் ஆர்டர் வாங்க போகணும் என்று சொல்கிறார். இதை கேட்டு செந்தில் இன்ப அதிர்ச்சி அடைந்து நிற்கிறார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications