பாண்டியன் ஸ்டோர் 2: பாண்டியனால் கதிருக்கு வந்த சோதனை.. செந்தில் சொன்ன வார்த்தை! மீனாவுக்கு தான் புது பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 ஜூன் 27ஆம் தேதிக்கான எபிசோடில் கதிர் மீது பாண்டியன் மீண்டும் கோபத்தை காட்டுகிறார். அதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதுபோல மீனாவிற்கு செந்திலால் புது பிரச்சனை வந்திருக்கிறது. என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நேற்று செந்திலுக்காக மீனாவே பாண்டியனிடம் 10 லட்சம் பணத்தை கொண்டு வந்து கொடுத்து செந்திலை காப்பாற்றி இருந்தார். பிறகு எல்லோரும் கலைந்து சென்றதும் இன்று மீனா அமைதியாக நின்று கொண்டிருக்கிறார். அப்போது கதிர் இவ்வளவு பெரிய பணத்தை எப்படி சீக்கிரமாக ஏற்பாடு செஞ்சீங்க? என்று கேட்க, மீனா செந்தில் தான் என்னை பேங்க்ல போய் எடுத்துட்டு வர சொன்னாரு அதைத்தான் செஞ்சேன் என்று சொல்கிறார்.

ஆனால் கதிர் எனக்கு எல்லா விஷயமும் தெரியும். அண்ணன் என்கிட்ட சொல்லிட்டாரு என்று சொல்கிறார். அதற்கு பிறகு தான் மீனாவிற்கு செந்தில் கதிரிடம் பண விஷயத்தைப் பற்றி பேசியது தெரிகிறது, அதனால் கதிரிடம் நான் அப்பாவிடம் கேட்டு வாங்கிட்டு வந்து விட்டேன் என்று சொல்கிறார். பிறகு கதிர் அப்போ அண்ணனோட வேலை .. என்று கேட்க? அது அப்பா பாத்துக்குவாரு என்று சொல்லிவிடுகிறார்.
பிறகு கடைக்கு போன செந்தில் மீனாவுக்கு போன் செய்ய அந்த போனை கோமதி எடுக்கிறார். என்னடா விஷயம் மீனா வெளியே போய் இருக்கா அவ வந்தா சொல்லுறேன் என்று கேட்க, செந்தில் விளையாட்டாக லவ் யூ சொன்னேன்னு சொல்லுங்கம்மா என்று சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார். இதைக் கேட்டதும் கோமதி பதட்டமாகி விடுகிறார். ராஜி மற்றும் மீனா என்னவென்று கேட்க கோமதி செந்தில் போன் செய்தான் என்று சொல்லிவிட்டு, ஐ என சொல்லத் தொடங்கி பிறகு சமைக்க போறேன் என்று ஓடிவிடுகிறார்.
ராஜி நீங்க ஓகேவா என்று கேட்க, மீனா நான் ஓகே தான் என்கிறார். பிறகு மீனா ரூமில் இருக்கும்போது செந்தில் அங்கு வந்து இருக்கிறார். நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் அப்பாகிட்ட உண்மையை சொல்ல தான் நினைச்சேன். அதுக்குள்ள நீ வந்து பணத்தை கொடுத்துட்டே என்று செந்தில் சொல்லும் மீனா அமைதியாகவே இருக்கிறார். அதற்கு பணத்தை எப்படி ஏற்பாடு செஞ்சா என்று செந்தில் கேட்க, முதலில் மீனா சொல்வதற்கு தயங்குகிறார்கள். பிறகு நீ பேங்க்ல பணத்தை போடாத போது நான் லோனுக்கு ரெடி பண்ணிட்டேன் நல்ல வேலையா சரியா லோன் கிடைச்சிடுச்சு, அதனாலதான் பணப்பிரச்சனை முடிஞ்சது என்று சொல்கிறார்.
பிறகு காலையில் பாண்டியன் கதிரை அழைத்து திட்டிக் கொண்டிருக்கிறார். நீ எக்ஸாமில் வச்ச நான்கு அரியரை எப்போ எழுதி பாஸ் பண்ணுவா என்று கேட்க, கதிர் அமைதியாக இருக்கிறார். படிச்சு பாஸ் பண்ணு உனக்கு நீ கார் ஓட்டுவதுல வாங்குற சம்பளத்துக்கு 100 ரூபாய் அதிகமாக தரேன் என்று சொன்னதும் செந்திலும் பழனியும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கதிர் நான் வரமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். படிச்சு முடிச்சிட்டு உன்னுடைய சொந்த காலில் நில்லு என்று பாண்டியன் திட்டுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications