பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: கோமதியிடம் ஃபிளாஷ்பேக்கை சொல்லி மிரட்டிய ராஜி.. தங்கமயிலுக்கு சரியான அடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மீனாவிடம் பேசாமல் இருக்கும் கோமதியிடம் ராஜூ சொன்ன விஷயத்தை கேட்டு கோமதி அதிர்ச்சியாகிறார். அதே நேரத்தில் கதிரும் ராஜிக்கு சப்போர்ட் பண்ணி ராஜ மீது தனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறார். அதுபோல பாண்டியன் என்ன சொல்கிறார் என்று விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனாவும் செந்திலும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மீனா இன்னைக்கு வேலையே இல்ல ஆனாலும் அசதியாய் இருக்கு என்று சொல்ல, செந்தில் எதையாவது நினைச்சுட்டே இருந்தா அப்படித்தான் இருக்கும் என்று சொல்கிறார். அதற்கு மீனா நான் எதையும் யோசிக்கலையே என்று சொல்கிறார். ஆனால் செந்தில் அப்பா அம்மா பேசாம இருக்கிறது உனக்கு பிரச்சனை இல்லையா? என்று கேட்கிறார்.

அதற்கு மீனா அத்தை, மாமா பேசாமல் இருக்கிறது கஷ்டமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது செந்தில் நான் உண்மையை சொல்லி இருப்பேன் அப்போ ஏன் நீ தடுத்த என்று கேட்கிறார். அதற்கு இந்த லோன் விஷயத்தை விட அது தெரிஞ்சா இன்னும் மோசமாகிடும் என்று சொல்கிறார். அதோடு நாளைக்கு நீங்க வேலைக்கு போறீங்க அதைப்பற்றி யோசிங்க என்று மீனா சொல்கிறார். அப்போது செந்தில் வேலைக்கு போவதற்காக மீனா டிரஸ் எடுத்துக்கு வைத்துக் கொண்டிருக்க செந்தில் சந்தோஷமாகி லவ் யூ சொல்கிறார்.
மறுபக்கத்தில் கோமதி கிச்சனில் இருக்கும் போது ராஜி கோமதியிடம் நீங்க மீனா அக்கா கிட்ட பேச வேண்டியதுதானே என்று கேட்க, அவளுக்கு என் மேல பாசம் மரியாதை அன்பு எதுவும் இல்லை, அதான் என்கிட்ட மறைச்சுட்டா என்று சொன்னதும் அதற்கு ராஜி அப்போ ஒரு விஷயத்தை மறைச்சா பாசம் மரியாதை அன்பு இல்லன்னு அர்த்தமா? என்று கேட்டதும் ஆமா என்று கோமதி சொல்ல, அப்போ உங்களுக்கு மாமா மேல பாசம் மரியாதை, அன்பு இல்ல தானே என்று கேட்டதும், அப்படியெல்லாம் இல்லை அவர் மேல எனக்கு நிறைய இருக்கு என்று சொல்கிறார்.
அப்போ ஏன் எனக்கும் கதிருக்கும் நடந்த கல்யாணத்தை சொல்லல, மறைச்சீங்க? என்று கேட்க கோமதி பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார். அதற்கு ராஜி அக்கா செஞ்சது தப்புன்னா நீங்க செஞ்சதும் தப்புதான் என்று சொல்கிறார். இதை கதிரும் கேட்டுக் கொண்டிருக்கிறார். உடனே கோமதி கதிரிடம் பாருடா இவ பேசுறத என்று கேட்க, என் தலைவி பேசினால் சரியாகத்தான் இருக்கும் என்று சொன்னதும் அதை அங்கு வந்த ராஜி கேட்டு சிரிக்கிறார்.
அடுத்ததாக தங்கமயில் சரவணனிடம் இந்த மீனா பொண்ணு இப்படி பண்ணும்னு நினைக்கல. அத்தையையே ஏமாத்திட்டா? எனக்கு மனசே கேட்கல என்று சொல்ல, அவங்க பண்ணுனது தப்புன்னா நீ பண்ணது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? அவங்க பண்ணுனதால யாருக்கும் நஷ்டம் கிடையாது ஆனால் நீ செஞ்ச வேலை? நீ எல்லாம் அடுத்தவங்கள பத்தி பேசலாமா? என்று திட்டி விட்டுப் போகிறார்.
அடுத்த நாள் காலையில் கோமதி பாண்டியனிடம் இன்னைக்கு செந்தில் வேலைக்கு போறான். நீங்க இருக்க வேண்டாமா என்று கேட்க, அவன் வேலைக்கு போறதுக்கு நான் எதுக்கு இருக்கணும் என்று பாண்டியன் கோபப்படுகிறார். அதற்குப் பிறகு கோமதியிடம் தங்கம் வெள்ளி நீங்க மீனாவிடம் பேசாததால நானும் பேசல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு ராஜி கோபப்படுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications