பாண்டியன் ஸ்டோரில் இனி செம சம்பவம்.. சுகன்யா நாடகத்தை உடைத்த அரசி.. போலி கல்யாணத்தை தெரிந்த மீனா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் 2025 ஜூன் மூன்றாம் தேதிக்கான எபிசோடில் அரசி குமாரவேலுவை பழி வாங்குவதற்காக போலி திருமணம் செய்த விஷயம் மீனா மற்றும் ராஜுக்கு தெரிய வருகிறது. அதே நேரத்தில் சுகன்யா தான் அரசியை வீட்டை விட்டு அனுப்பி வைத்தது என்ற உண்மையையும் அரசி உடைத்திருக்கிறார். இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அரசி போட்ட நாடகத்தை பார்த்து கோபமான குமரவேல் காரில் இருந்து இறங்கி ஓட வேண்டியது தானே? எதுக்கு எங்க வீட்டுக்கு வந்த? என்ன பழி வாங்குவதற்காகவா? என்று வெறுப்பேற்றுகிற மாதிரியே பேசிக் கொண்டிருக்கிறார். அதோடு நான் நினைச்சா உன் குடும்பத்தை இன்னும் அலற விடுவேன் பாக்குறியா என்று அரசியை அடிக்க போக அரசி, மேலே படாமல் விலகி விடுகிறார்.

குமாரவேலுக்கு அடி
இந்த நாள் குமாரவேல் கடுப்பாகி விடுகிறார். இதனால் கையை முறுக்கி அரசியை குத்த அரசி நகர்ந்ததால் குமார் கை மரக்கட்டையில் பட்டு விடுகிறது. இதனால் குமாரவேல் வலியில் கத்துகிறார். குமாரவேல் சத்தத்தை கேட்டு குமாரவேலின் அம்மாவும் அப்பத்தாவும் ஓடி வர அரசி குமாரவேல் கீழ விழுந்து விட்டதாக சமாளித்து விடுகிறார். அடுத்ததாக அரசி குமாரை நீங்க என்னை கதற விடுவீங்கன்னு சொன்னீங்க? ஆனா நீங்க கதறுதீங்க போல என்று நக்கலாக கேட்கிறார்.
கோபத்தில் பழனி
அந்த நேரத்தில் பழனி வர அரசி அவரிடம் வீட்டில் எல்லாரும் எப்படி இருக்காங்க? என்று கேட்க, பழனி அரசியிடம் முகம் கொடுத்து பேசாமல் இருக்கிறார். மீனா உன்னிடம் பேசணும்னு சொன்னா அதனால கோயிலுக்கு கூட்டிட்டு வர சொல்லி இருக்கா... அதான் வந்தேன் என்று கோபமாகவே பேசுகிறார். பிறகு அரசியை கூட்டிக்கொண்டு பழனி பேசாமல் கோவிலுக்கு வருகிறார். அங்கு மீனா, ராஜியை அரசி பார்க்கிறார். அவர்கள் எதற்காக இப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டா என்று கேட்கின்றனர். அதற்கு அரசி முதலில் பொய் சொல்லி சமாளிக்கிறார்.
அரசி சொன்ன உண்மைகள்
ஆனால் ராஜியும் மீனாவும் அதை நம்பாமல் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க, பிறகு குமார் போட்டோவை டிசைன் செய்து இறக்கியது பற்றி அரசி சொன்னதும் கோபத்துடன் குமாரை அடிக்கப் போகிறார். அதற்கு மீனா அவரை நிறுத்தி பொறுமையா முழுதாக கேட்போம் என்று சொல்கிறார். பிறகு அவன் போட்டோ வச்சு மிரட்டியதனால் தான் கல்யாணம் பண்ணுனியா என்று மீனா கேட்டது அதற்கு அரசி குமராவேல் கடத்தி வைத்திருந்த விஷயத்தையும் காரில் வரும்போது குமராவேல் பேசிய பேசிதையும் சொன்னதும் ராஜி அதிர்ச்சி அடைகின்றனர்.
அரசியின் முடிவு
அப்போ இந்த தாலி எதற்கு அதை தூக்கி போட்டுட்டு வா என்று மீனா கூப்பிட்ட, அந்த குமாரவேல் என்ன வச்சி நம்ம குடும்பத்துக்கு என்ன பண்ணனும் நினைச்சானோ அதையே அவனுக்கு செய்யப் போறேன் என்று சொல்கிறார். ஆனாலும் நான் செஞ்ச ஒரே தப்பு சுகன்யா அத்தை கிட்ட பேசுனது தான். கல்யாணத்துக்கு முதல் நாள் சுகன்யா தான் தன்னை அனுப்பினார் என்ற விஷயத்தையும் அரசி சொன்னதும் மீனா இந்த சுகன்யா அரசியை அனுப்பி வச்சிட்டு நம்ம கூட ஒண்ணுமே தெரியாது போல தேடி இருக்கு என்று கோபத்தில் பேசிக் கொண்டிருக்கிறார். இனி சுகன்யா பற்றிய உண்மைகள் பாண்டியன் குடும்பத்திற்கு தெரிய வரும்போது தான் சுகன்யா எதற்காக பாண்டியன் குடும்பத்தை பழிவாங்குவதற்காக வந்தார் என்பது தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications