வயிற்றில் அடிபட்டு துடிக்கும் ஐஸ்வர்யா..மருத்துவமனையில் தவிக்கும் கண்ணன்..இனி நடப்பது இதுதான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஏப்ரல் 27 முதல் 29ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
யூட்யூபில் வீடியோ போட வேண்டும் என்று ஐஸ்வர்யா ஆசைப்பட்டு கடைசியில் வயிற்றில் அடிபட்டு வலியில் துடிக்கிறார்.
கண்ணன் மருத்துவமனையில் மருந்து வாங்க பணம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் யாரும் எதிர்பார்க்காத திருப்பம் நடந்திருக்கிறது. கண்ணனும் ஐஸ்வர்யாவும் புதியதாக யூடியூப் சேனல் தொடங்கியிருக்கும் நிலையில் அதில் டான்ஸ் ஆடி வீடியோ போடுவதற்காக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் கடனுக்கு இஎம்ஐ கட்டுவதற்கு இனி முடியாது என்று கண்ணன் இன்றைய எபிசோட்டில் கூறியதால் கண்ணன் ஐஸ்வர்யா என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கி இன்றைய எபிசோட்டில் ஐஸ்வர்யா சமையல் செய்து அதை வீடியோவாக வெளியிட்டிருந்தார். ஐஸ்வர்யா சமையல் செய்வதை கண்ணன் தான் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அடுத்ததாக டான்ஸ் ஆடி இவர்கள் இருவரும் ஜோடியாக வீடியோ எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஐஸ்வர்யா கீழே விழுந்து வயிற்றில் அடிபட்டு விடுகிறது. இதனால் வயிறு வலியில் ஐஸ்வர்யா துடிக்க கண்ணன் ஐஸ்வர்யாவை மருத்துவமனையில் சேர்க்கின்றனர். அங்கு ஸ்கேன் பார்த்த டாக்டர்கள் அடுத்து சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் குறிப்பிட்ட மருந்து வேண்டும் என்று கண்ணனிடம் சொல்கின்றனர்.
கண்ணன் தன்னிடம் இருக்கும் மருந்தை வாங்குவதற்காக தன்னுடைய காரை கொடுக்க காதலில் பணம் இல்லை என்று அங்கு இருப்பவர்கள் சொல்ல, கார்டில் பணம் இல்லாமல் கண்ணன் தவித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் கண்ணன் கதிருக்கு தான் போன் செய்யப் போகிறாராம்.

வலியில் துடித்துக் கொண்டிருக்கும் ஐஸ்வர்யாவுக்கு உதவுவதற்காக கதிர் மருத்துவமனைக்கு ஓடி வருகிறார். அது மட்டுமல்லாமல் மருத்துவமனைக்கு தேவையான பணத்தையும் கட்டுகிறாராம். இதற்குப் பிறகு ஐஸ்வர்யாவும் கண்ணனும் தங்களுடைய தவறை புரிந்துகொண்டு திருந்தி மீண்டும் குடும்பத்தோடு ஒன்றாக சேர இருக்கிறார்கள். ஏற்கனவே வளைகாப்பு நான் செய்ய மாட்டேன் என்று ஐஸ்வர்யாவின் சித்தி கூறி இருக்கிறார்.

ஐஸ்வர்யாவை ஓடிப்போய் கல்யாணம் பண்ண முடியும் ஆனால் ஓடிப் போய் வளைகாப்பும் பிரசவம் பார்க்க முடியாது என்று மல்லியும் திட்டி இருக்கிறார். இதனால் அப்போது தனம் தான் நாங்கள் ஐஸ்வர்யாவுக்கு பிரசவ பார்த்துக் கொள்ளுவோம் என்று கூறியிருக்கிறார். இதை நினைத்து பார்த்து ஐஸ்வர்யா மீண்டும் தனத்திடம் மன்னிப்பு கேட்டு ஒன்றாக குடும்பத்தோடு சேர இருக்கிறாராம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications