பாண்டியன் ஸ்டோரில் பரபரப்பு.. கிரகப்பிரவேசத்தில் ஏற்பட்ட பிரச்சனை.. பிரசாந்தை அடித்த மூர்த்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகியிருக்கிறது.
அதில் கிரகப்பிரவேசத்தில் புது வீட்டிற்கு தனலட்சுமியின் பெயர் வைத்ததால் அடுத்தடுத்த பிரச்சனை வருகிறது.

அதே நேரத்தில் ஜீவாவிற்கும் பிரசாந்துக்கும் ஏற்பட்ட சண்டையில் மூர்த்தி பிரசாந்தை அடிக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மூர்த்தியின் புது வீட்டிற்கு வரும் முல்லையின் அம்மா ரோட்டில் நின்றபடியே வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். இவ்வளவு பெரிய வீடு கட்டிட்டாங்களா? இது அதிசயமா இருக்கு? இவங்க குருவிக்கூடு மாதிரி தானே வீடு கட்டுவாங்க. இப்போ என்ன இவ்வளவு பெருசா கட்டி இருக்காங்க என்று நக்கல் அடிக்க, முல்லையின் அப்பா பேசாம வாய மூடிட்டு சும்மாவா என்று கூப்பிட்டு போகிறார்.

அதை தொடர்ந்து உள்ளே வந்த நிலையில் அங்கே தனலட்சுமியின் பெயர் வீட்டிற்கு வைத்திருப்பதை பார்த்து," அவ வீட்டில் கொடுத்த வீடா இது..? எதுக்கு அவ பெயர் மட்டும் போடணும். இத போய் நான் கேட்டுட்டு வரேன்" என்று முல்லையின் அம்மா கிளம்ப, அப்போது அங்க வந்த முல்லை நீ சும்மாவே இருக்க மாட்டியா? எந்த பிரச்சனையும் பண்ணாம ஒழுங்கா உள்ளே வா என்று திட்டி கூட்டிட்டு போகிறார்.
ஆனாலும் முல்லையின் அம்மா அந்த நேரத்தில் அங்க வந்த கதிரிடமும் இதை பற்றி பேச, கதிரும் ஏதேதோ சொல்லி சமாளித்து அனுப்புகிறார். அதைத் தொடர்ந்து அந்த பக்கமாக வந்த மீனாவிடமும் இது பற்றியே முல்லையின் அம்மா கேட்க, அதற்கு அக்காவோட பெயரை வைக்க சொன்னதே நாங்க தான் என்று முல்லையில் அம்மாவிற்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

இதைத்தொடர்ந்து மீனாவின் அப்பா, அம்மாவும் வீட்டிற்கு வருகின்றனர். அவர்களும் தனத்தின் பெயரை வீட்டிற்கு வைத்ததால் கோபப்பட்டு உன் பெயரை வைத்தால் என்ன ஆகிட போகுது என்று மீனாவிடம் திட்டிக் கொண்டிருக்கின்றனர். மீனா அவர்களையும் சமாளிக்கிறார். பிறகு தனத்தின் அண்ணா மற்றும் அம்மா வீட்டிற்கு வருகின்றனர்.
அவர்கள் வீட்டு வாசலில் தனம் பெயர் வைத்திருப்பதை பார்த்து ஒரு பக்கம் சந்தோஷப்பட்டாலும், இனி இந்த பொறுப்பையும் சேர்த்து அவர் தலையில் போடுவதற்காக தான் இப்படி வச்சிருக்காங்க. இனி எல்லா குழந்தைகளையும் தனம் தான் வளர்த்து விடனும். அதுக்காக தான் இப்படி பண்றாங்க என்று தனத்தின் அம்மா திட்டி கொண்டு இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து வீட்டில் கிரகப்பிரவேசம் நடத்துவதற்காக எல்லோரும் சாமி போட்டோக்களை கொண்டு உள்ளே வருகின்றனர். பிறகு அங்கு நடக்கும் சடங்குகளில் தனமும் மூர்த்தியும் மாலையும் கழுத்துமாக இருந்து அதை செய்கின்றனர். இதை பார்த்த முல்லையின் அம்மா இவங்கதான் இதை பண்ணனுமா? என்று கேட்க, அதற்கு தனத்தின் அம்மா இவங்க தானே வீட்டில் பெரியவங்க என்று பேச, அங்கே சண்டை வருகிறது. பிறகு முல்லை அவருடைய அம்மாவை திட்ட ஒரு வழியாக பிரச்சனை இல்லாமல் எல்லோரும் பூஜையில் ஈடுபடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகின்றது.
அதைத்தொடர்ந்து நாளைக்கான ப்ரோமோவில் ஜீவாவின் சட்டையை பிடித்து மல்லியின் மகனான பிரசாந்த் மன்னிப்பு கேளு மன்னிப்பு கேளு என்று மிரட்டி கொண்டிருக்க, அதை பார்த்து கதிர் கோபம் அடைகிறார். அப்போது இதை பார்த்த மூர்த்தி பிரசாந்த்தை அடித்து தள்ளி, என் தம்பி மேல கை வைப்பியா? என்று பேசுகிறார். இனி அடுத்த வாரம் இதை வைத்து பெரும் சண்டை நடக்க இருக்கிறது.












Click it and Unblock the Notifications