லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்ட கண்ணன்.. கோபத்தில் மூர்த்தி.. தனத்தின் பரிதாப நிலை..எதிர்பாராத முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா சித்தி இடம் கடன் வாங்கியது குடும்பத்திற்கு தெரிய வருகிறது.

அதே நேரத்தில் கண்ணன் அடுத்தடுத்து பணம் கொடுப்பது லஞ்ச பணம் என்பதை ஐஸ்வர்யா கண்டுபிடித்து விடுகிறார்.

Pandian Stores serial 2023 July 7th Episode Kannan who was caught taking a bribe

இந்த நிலையில் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் ஜீவாவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜீவா மீண்டும் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்து வாழ வேண்டும் என்று மீனா வற்புறுத்திக் கொண்டிருக்கிறார்.

Pandian Stores serial 2023 July 7th Episode Kannan who was caught taking a bribe

அக்கா இடத்துல வேற யாராவது இருந்திருந்தால் இந்த மாதிரி உங்க குடும்பம் இருந்திருக்காது. ஆரம்பத்தில் இருந்தே இந்த குடும்பத்தை கட்டி காப்பாற்றி வைத்தது அக்காவும் மாமாவும் தான். இப்ப ஆசைப்பட்டு அவங்க கேக்குறாங்க அதை நீ செய்ய மாட்டேன் என்று சொல்ற, உனக்கு தான் அந்த வீட்ல யாரும் மேலையும் கோபம் இல்லை என்று சொல்லிட்டல்ல. அப்புறம் ஏன் அங்க வர மாட்டேங்கிற என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு ஜீவா நான் வரமாட்டேன் என்று சொல்லல, முதல்ல வீட்டு வேலை முடியட்டும் வீடு கட்டி முடிந்ததும் நாம அங்க போறதை பத்தி பேசலாம் என்று அப்படியே பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். அதைத்தொடர்ந்து கதிரும் முல்லையும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கதிர் குழந்தை பிறந்த பிறகு நீ என்னை கண்டுக்கவே மாட்டேங்குற என்று ஃபீல் பண்ணிக் கொண்டு இருக்க, அதற்கு முல்லை சமாதானப்படுத்துகிறார்.

Pandian Stores serial 2023 July 7th Episode Kannan who was caught taking a bribe

இந்த நிலையில் கண்ணன் வீட்டிற்கு வருகிறார். வந்ததும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க கண்ணனை பார்த்து கடுப்பான மூர்த்தி திட்டி விடுகிறார். அவரை சமாதானப்படுத்தும் தனம் சாப்பிட கூப்பிடுகிறார். அதைத்தொடர்ந்து கண்ணன் தான் வாங்கிய லஞ்ச பணம் 25 ஆயிரம் ரூபாயை ஐஸ்வர்யாவிடம் கொடுக்க, அதைப் பார்த்து ஐஸ்வர்யா அதிர்ச்சியாகி இந்த பணம் ஏது என்று கேட்கிறார்.

பிறகு கண்ணன் சமாளிப்பதை பார்த்து, நீ லஞ்சம் வாங்கி இருக்கியா? ஏற்கனவே வீட்ல மாமா எவ்வளவு கோபத்தில் திட்டிட்டு இருக்காங்கன்னு தெரியுதா? இந்த நேரத்தில் இது தெரிஞ்சா இன்னும் ரொம்ப கோபப்படுவார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவு அடைகிறது.

Pandian Stores serial 2023 July 7th Episode Kannan who was caught taking a bribe

இதைத்தொடர்ந்து நாளை எபிசோட்டில் கண்ணன் வாங்கிய லஞ்சம் பணத்தை ஐஸ்வர்யா அவருடைய சித்தியிடம் கொடுக்கும்போது முல்லை பார்த்து தனத்திடம் சொல்லிக் கொடுக்கிறார். மேலும் இருவரும் சேர்ந்து தனம் ஐஸ்வர்யாவிடமும் அவருடைய சித்தியிடமும் விசாரிக்க ஆமாம் வளைகாப்புக்காக பணம் கடன் வாங்கினோம் என்று ஒத்துக் கொள்கிறார்கள் இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+