கண்ணனை அடிக்கும் மூர்த்தி.. சந்தேகப்படும் முல்லை..பிரச்சனை செய்யும் ரத்தினம்..பரபரப்பான தருணம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி ஐஸ்வர்யாவை மன்னித்து மீண்டும் சகஜமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு வரும் கண்ணன் நக்கலாக பேசி மூர்த்தியிடம் அடி வாங்குகிறார்.
ஐஸ்வர்யாவை தேடி மீண்டும் ஐஸ்வர்யாவின் சித்தி வந்ததால் முல்லை சந்தேகப்படுகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜூன் 12-ம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில உங்களுக்காகத்தான் புது கார் புக் பண்ணி இருக்கேன்னு ஜனார்த்தனன் சொல்லிக் கொண்டிருக்க, எதற்கு வேண்டாத செலவு எல்லாம் என்று ஜீவா கேட்க, பிரசாந்த் மாப்பிள்ளை மட்டும் காரில் வராரு நீங்களும் ஜம்முனு கார்ல வரணும் என்று மீனா அம்மா கூறிக் கொண்டிருக்கிறார்.

பிறகு இருக்கிற பணத்தை ஏதாவது செஞ்சுதான ஆகணும். அதுக்கு மேல படுத்து தூங்கவா முடியும். உங்களுக்கு ஏதாவது செஞ்சு தரணும்னு ஆசைப்படுகிறேன் என ஜீவாவிடம் ஜனார்த்தனன் கூற மீனாவும் அப்பாவுக்கு சப்போர்ட் செய்கிறார். பிறகு ஜீவாவும் மீனாவும் நடக்குது போல நடக்கட்டும் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.
அதைத்தொடர்ந்து மூர்த்தி ஐஸ்வர்யாவோடு வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது டெலிவரி நாள் பக்கத்துல வந்துட்டு ஏதாவது ஒர்க் அவுட் எல்லாம் செய்றியா? வேலையெல்லாம் செய்றியா? என்று மூர்த்தி கேட்க, ஐஸ்வர்யா தான் செய்யும் ஒர்க் அவுட் எல்லாம் அவரிடம் செய்து காட்ட அதை பார்த்து மூர்த்தி சிரித்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு வரும் கண்ணன் மூர்த்தியிடம் வம்பு செய்து கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் சிரித்துக்கொண்டிருந்தது நீங்கதானா என்று கேட்டு ஐஸ்வர்யா கிட்ட மட்டும் பேசி சிரிக்கிறீங்க? என்கிட்ட பேச மாட்டீங்களா? என்று கண்ணன், அப்படியே உங்களை எப்படி சிரிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும் என மூர்த்தியின் இடுப்பில் கிச்சு கிச்சு மூட்ட கோபமான மூர்த்தி கண்ணன் தலையில் கொட்டு வைக்கிறார்.
பிறகு இன்னும் ரெண்டு மூணு மாசத்துல உனக்கு குழந்தை பிறக்கப் போகுது. நீ சின்ன புள்ள மாதிரி பண்ணிக்கிட்டு இருக்கியா? என மூர்த்தி திட்டிவிட்டு செல்கிறார். அதைத்தொடர்ந்து முல்லையும் தனமும் பேசி கொண்டு இருக்க, அப்போது ஐஸ்வர்யாவின் சித்தி வீட்டிற்கு வருகிறார். என்ன தினமும் வந்த மாதிரி இருக்கு என்று முல்லை கேட்க எனக்கு உங்க மேல அக்கறை இருக்கு என்று சொல்லி ஐஸ்வர்யா எங்கே என்று கூப்பிடுகிறார்.
பிறகு கொஞ்சம் கீரை பறிக்கணும் அதான் வந்தேன் வா ஐஸ் என்று ஐஸ்வர்யாவை கூப்பிட்டு தனியா போய் அவரிடம் பணம் கேட்ட பிறகு ஐஸ்வர்யா 25,000 பணத்தை கொடுக்க உங்களுக்கு எதுக்கு இவ்ளோக்கெல்லாம் பணம் என்று சித்தி கேட்க அதே நேரத்தில் முல்லை அங்கு வர ஐஸ்வர்யா சமாளித்து பேசுகிறார் ஆனாலும் முல்லைக்கு சந்தேகம் வந்து தனத்திடம் அக்கா ஏதோ தப்பா நடக்குதுன்னு எனக்கு தோணுது என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து முல்லை கதிர் இன்னும் வராதது தான் கோபத்தில் குழம்பிக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் ஐஸ்வர்யா எதார்த்தமாக பேச அவரை திட்டி அனுப்புகிறார் பிறகு கதிர் பற்றி திட்டியபடியே பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் கதிர் வீட்டிற்கு வருகிறார் பிறகு கதிர் வீட்டில் அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்துவிட்டு முல்லையிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அடுத்ததாக ஹோட்டலில் முல்லையின் அப்பா அனைவருக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்க அங்கே வரும் ரத்னம் அவரிடம் பிரச்சனை செய்கிறார் புரோட்டா பழசா இருக்கு இதெல்லாம் யாராவது சாப்பிடுவாங்களா என்று பிரச்சனை செய்து கொண்டிருக்கும்போது அங்கே கதிர் வருகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
நாளைக்கான எபிசோட்டில் ரத்தினம் போன் பேசியபடி பைக்கில் நிற்க அந்த பக்கம் கதிரும் முல்லையும் நடந்து வருகின்றனர் அப்போது போனை வைத்தபடி பைக்கில் வேகமாக வந்து முல்லையின் வயிற்றில் ரத்தினம் மோதி விட்டு நிற்காமல் செய்கிறார் முல்லை தரையில் கீழே விழுந்து வயிற்றில் அடிபடுகிறது இந்த பரபரப்பான பிரமோ வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications