கல்யாணம் பண்ணினது தப்பு..கதறி அழும் கண்ணன்..கோபத்தில் பார்வதி.. திடீர் திருப்பம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஆபத்தான நிலையில் இருந்த முல்லைக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
குழந்தையும் முல்லையும் ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் அனைவரும் சந்தோஷப்படுகின்றனர்.
ஆனால் முல்லையின் அம்மா முல்லை இத்தனை கஷ்டம் பட காரணம் உங்க வீட்டு ராசி தான் என்று மூர்த்தியிடம் கோபப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் 16ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கதிர் வீட்டில் முல்லையின் அம்மாவும், அப்பாவும் அழுது கொண்டிருக்க அவர்களுக்கு மூர்த்தி ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது உங்க வீட்டு ராசியால தான் என் பொண்ணு இவ்வளவு கஷ்டப்படுதா என்று பார்வதி சொல்ல, அதற்கு முல்லையின் அப்பா திட்டுகிறார். எல்லாரும் கஷ்டத்துல இருக்கும்போது நீ இப்படி பேசாத என்று கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து மேலும் மூர்த்தி அவர்களுக்கு ஆறுதல் கூறி கொண்டிருக்கிறார். அப்போது முல்லைக்கு மட்டும் ஏதாவது ஆச்சுன்னா நான் உயிரோடு இருக்கவே மாட்டேன் என்று பார்வதி அழுதபடியே கூற, முல்லையின் அப்பாவும் எனக்கும் இப்போதும் என் பிள்ளையை முதல் முதல்ல என் கையில வாங்குன ஞாபகம் அப்படியே இருக்கு. தவம் இருந்து பெத்த புள்ள இன்னைக்கு இவ்வளவு கஷ்டப்படுது என்று அழுது கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் மருத்துவமனையில் கண்ணன் அழுது கொண்டு தனியாக நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு ஐஸ்வர்யா ஆறுதல் கூறுகிறார். அப்போது கண்ணன் வீட்ல யாருக்கு என்ன பிரச்சனைனாலும் கதிர் அண்ணன் தான் வந்து முன்னாடி நிற்கும் ஆனால் அந்த அண்ணனுக்கு தான் அடிக்கடி பிரச்சினை வந்துகிட்டே இருக்கு.
எங்க வீட்டில முன்னாடி இப்படி எல்லாம் பிரச்சனை வந்ததே இல்ல. நான் என்னைக்கு கல்யாணம் பண்ணி அவங்கள கஷ்டப்படுத்தியதற்கு பிறகு தான் அவங்களுக்கு அடுத்தடுத்து பிரச்சனை வந்துகிட்டே இருக்கு என்று கண்ணன் பீல் பண்ணி அழுது கொண்டிருக்க, ஐஸ்வர்யா இப்படி எல்லாம் பேசாத கண்ணா, கண்டிப்பா முல்லை அக்கா நல்லபடியா குழந்தை பெத்து எடுத்துட்டு வருவாங்க என்று ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து மீனா எல்லோருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வாங்க தனம் அக்கா வயிற்றில் குழந்தை இருக்குது இப்படி சாப்பிடாம இருந்தா நல்லது கிடையாது என்று ஜீவாவிடம் சொல்ல, தனம் எனக்கு பசிக்கல சாப்பாடு வேண்டாம் என்று அழுது கொண்டிருக்கிறார் . அதைத்தொடர்ந்து ஜீவா கதிரை சமாதானப்படுத்துகிறார். எனக்கு சாப்பாடு வேண்டாம் என்று அடுத்தபடியே கூறிக் கொண்டிருக்கிறார். முல்லை தன்னோடு பேசியதெல்லாம் நினைத்து பார்த்து பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் முல்லைக்கு ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கிறது. பிறகு மருத்துவர் வெளியே வந்து குடும்பத்தினரிடம் முல்லைக்கு குழந்தை பிறந்து விட்டது. பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தையும் நல்லா இருக்கு. முல்லையும் நல்லா இருக்காங்க. குழந்தை ஏழு மாசத்திலே பிறந்ததினால இன்குபேட்டர்ல வச்சிருக்கோம். முல்லை இப்போ கொஞ்சம் மயக்கத்துல இருக்காங்க. கொஞ்ச நேரம் கழிச்சு முழிச்சிடுவாங்க என்று சொல்ல, மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications