கொலைகாரனாக மாறும் கதிர்.. பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்கு கிடைத்த அதிர்ச்சி
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கதிர், முல்லையில் இந்த நிலைமைக்கு காரணம் ஆன ரத்தினத்தை கொலை செய்ய முயற்சி செய்கிறார்.
குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர் குடும்பத்திற்கு அடுத்த அதிர்ச்சி கதிரால் வரப்போகிறது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் 17ஆம் தேதிக்கான எபிசோட்டின் ஆரம்பத்தில், முல்லைக்கு
குழந்தை நல்லபடியாக பிறந்திருக்கிறது. அதுபோல முல்லையும் குழந்தையும் நல்லபடியாக இருக்கிறார்கள் என்று சொல்ல, மொத்த குடும்பமும் சந்தோஷத்தில் இருக்கின்றனர். பிறகு நான் இந்த விஷயத்தை முல்லையின் அம்மா அப்பா கிட்ட பொய் சொல்லிட்டு வருகிறேன் என்று மீனா கிளம்புகிறார்.
அதே நேரத்தில் வீட்டில் முல்லைக்கு என்ன ஆனதோ என்று தெரியவில்லையே என்று முல்லையின் அம்மா பதறியபடி இருக்க, கண்ணன் நான் போய் பார்த்துட்டு வருகிறேன் என்று கிளம்புகிறார். அப்போது வீட்டிற்குள் வரும் மீனா சந்தோஷமாக பார்வதியை கட்டிப்பிடித்துக் கொள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்து என்னவென்று கேட்கின்றனர். பிறகு முல்லையின் குழந்தையும் முல்லையும் நன்றாக இருக்கிறார்கள் என்று மீனா கூறி அனைவருக்கும் இனிப்பு கொடுக்கிறார்.
பிறகு அனைவருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வர சொல்லி கண்ணனிடம் சொல்ல கண்ணன் பணம் இல்லயே என்று தவிக்கிறார். பின்பு மீனா பணத்தைக் கொடுத்து அனுப்பி சாப்பாடு வாங்கிட்டு வர வைக்கிறார். அப்போது முல்லையின் அம்மா சாப்பிட மறுக்க நான் உங்களை சாப்பிட வைத்து விட்டு அக்காவுக்கு போன் பண்ணி சொல்லணும் என்று சொல்லி சந்தோஷமாக அவர்களை சாப்பிட வைக்கிறார்.

அதே நேரத்தில் மருத்துவமனையிலும் எல்லோருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வரச் சொல்லி, ஜீவாவிடம் கதிர் சொல்ல தனம் எனக்கு வேண்டாம் என்று மறுக்க ,பின்பு அனைவரும் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து கதிர் முல்லைக்கு ரத்தினத்தால் அடிபட்டது குறித்து யோசித்துக் கொண்டு இருக்கிறார்.
அப்போது ஜீவா என்னவென்று கேட்க ரத்தினம் தான் இத்தனை பிரச்சனைக்கு காரணம் என்று கதிர் சொல்லி, நீ இங்க பார்த்துக்க நான் இப்ப வருகிறேன் என்று சொல்லி கிளம்புகிறார். ஜீவா எவ்வளவோ தடுக்கும் கேட்காமல் கதிர் ஹாஸ்பிடல் விட்டு வெளியே போய் ரத்தினத்தை அடிக்கிறார். இருவரும் கைகலப்பாகிக் கொண்டிருக்கும் போது கடைசியில் ரத்தினம் கீழே விழுந்து கிடக்க அவருடைய தலையில் கதிர் கல்லை தூக்கி போட ஆக்ரோஷமாக நிற்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications