கொலை முயற்சி செய்யும் கதிர்..மீனா கேட்ட கேள்வி.. கதறிஅழும் முல்லை.. கோபத்தில் பார்வதி
சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கொலை முயற்சி செய்ய கடைசி நேரத்தில் ஜீவா வந்து தடுத்து விடுகிறார்.
முல்லை கண் முழித்ததும் குடும்பத்தினர் அனைவரும் சென்று பார்த்து ஆறுதல் படுத்துகின்றனர்.
முல்லையின் அப்பாவும் அம்மாவும் கண்கலக்கி அழ அதை பார்த்து கதிர் அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஜூன் 19ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் கதிர் ரத்தினத்தை அடித்து உதைத்து தலையில் கல்லை தூக்கி போட்டு கொல்ல முயற்சி செய்யும் நேரத்தில ஜீவா வந்து தடுத்து விடுகிறார்.
நீ இவனை கொன்னுட்டு ஜெயிலுக்கு போயிட்டா முல்லையோடு நிலைமையும், உன் குழந்தையோட நிலைமையும் என்னன்னு நெனச்சு பார்த்தியா? என்று ஜீவா திட்டி, கதிரை அந்த இடத்தில் இருந்து கூட்டிக்கொண்டு வந்து தனியாக ஒரு இடத்தில் வைத்து கதிருக்கு அறிவுரை கூறுகிறார்.
பிறகு எல்லோரும் மருத்துவமனையில் இருக்கும் போது மீனா எல்லோருக்கும் சொல்லிட்டேன் ரொம்ப சந்தோஷப்படுறாங்க என்று மீனா கூறி பிறகு குழந்தையை பார்க்க வேண்டும் ஆனால் இந்த ஹாஸ்பிடலில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்கு என்று பேசிக்கொண்டு ஸ்வீட் வாங்கிட்டு வாங்க என்று கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கு வரும் டாக்டரிடம் கதிர் மட்டுமாவது முல்லையை போய் பார்த்துட்டு வரட்டும் என்று தனம் கெஞ்ச டாக்டர் சரி என்று கூறுகின்றனர். பிறகு கதிர் ரூம்பிற்குள் வந்து முல்லை இருக்கும் நிலைமையை பார்த்து ஃபீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். அப்போது கண் விழித்த முல்லை பாப்பாவை பாத்தீங்களா? என்று கேட்க, பாப்பாவை இன்குபேட்டரில் வைத்திருக்கு இப்போதைக்கு பார்க்க முடியாது என்று பக்கத்தில் இருந்த நர்ஸ் சொல்கிறார்.
பிறகு கதிர் முல்லையிடம் நான் கவனமாக இருந்திருக்கணும் என்று மன்னிப்பு கேட்டபடி பேசிக் கொண்டிருக்க, முல்லை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார். பிறகு தனம், மீனா, ஜீவா என எல்லோரும் வரிசையாக முல்லையை பார்க்க வருகின்றனர். பிறகு மீனா முல்லையிடம் கதிர் மற்றும் முல்லை அப்பா பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து முல்லையின் அப்பாவும் அம்மாவும் முல்லையை வந்து பார்த்து கண்கலங்கி பேசிக் கொண்டிருக்கின்றனர். பிறகு தனம் அவர்களுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருக்கிறார். பிறகு வெளியே வந்து கதிரிடம் முல்லையின் அம்மா அப்பாவும் கண்கலங்கி அழுது கொண்டிருக்க கதிர் அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து மூர்த்தி, தனம் கோயிலுக்கு வருகின்றனர். தனம் கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டு இருக்கும்போது, மூர்த்தி தான் வேண்டுதல் வைத்ததால் தேங்காய் வாங்கிட்டு வந்து உடைத்துக் கொண்டிருக்கிறார். கூடவே முல்லையின் அப்பாவும் தேங்காய் உடைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications