வட்டிக்கு பணம் வாங்கி பிரச்சினையில் சிக்கும் ஐஸ்வர்யா.. கண்ணனை அவமானப்படுத்தும் ஜனார்த்தனன்
சென்னை: ஐஸ்வர்யா வட்டிக்கு பணம் வாங்கி தன்னுடைய வளைகாப்பை பிரமாண்டமாக செய்ய முடிவு எடுக்கிறார்.
மீனாவின் வீட்டிற்கு வளைகாப்பு பங்க்ஷனுக்கு கூப்பிட சென்ற ஐஸ்வர்யா மற்றும் கண்ணனை ஜனார்த்தனன் அவமானப்படுத்துகிறார்.
இரவு முழுக்க தனம் நெஞ்சு வலியில் துடிக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே 18ஆம் தேதிக்கான எபிசோட் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா அவருடைய சித்தியிடம் பணம் கேட்க அவர் வட்டிக்கு வாங்கி தருவதாகவும் தன்னிடம் பணம் எதுவுமில்லை என்று கூற அதுவும் எனக்கு ஓகே என்று ஐஸ்வர்யா சொல்ல அதைக் கேட்டு கண்ணன் அதிர்ச்சி அடைகிறார்.
அடுத்ததாக இரவு தனத்திற்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க, முல்லை என்னாச்சு என கேட்டு மருத்துவமனைக்கு போவோமா என சொல்கிறார். அதற்கு வேண்டாம் நான் பார்த்துக்கொள்கிறேன் நீ போய் படு என்று அனுப்பி வைத்துவிட்டு தனியாகவே சமாளித்து விடுகிறார்.

விடிந்ததும் தனமும் முல்லையும் சிரித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு கண்ணனும், ஐஸ்வர்யாவும் வருகின்றனர். காலையிலே சிரிச்சு பேசிக்கிட்டு இருக்கீங்க என்று ஐஸ்வர்யா கேட்க ஏன் நாங்க பேசக்கூடாதா என்று முல்லை கேட்கிறார். பிறகு இவர்களை எதிர்பார்த்ததும் தனம் என்ன விஷயம் எனக் கேட்க ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு வைத்திருக்கும் விஷயத்தை சொல்கிறார். அதுவும் பெரிய மண்டபத்தில் செய்யப் போவதாக சொல்ல முல்லையும், தனமும் அதிர்ச்சி அடைகின்றனர்.
பிறகு நீங்க எதுக்கு இப்போ பண்றீங்க, அடுத்த மாதம் நாங்களே பண்றோம் என்று தனம் சொல்ல, ஐஸ்வர்யா அதெல்லாம் வேண்டாம் நாங்களே பண்ணிக்கிறோம் என்று திமிராக பேசுகிறார். நான் இங்கே வந்தது இங்கே இருந்து விடுவேன் என்று நீங்கள் நினைக்காதீங்க. நான் போய்ருவேன் என்று கூறிவிட்டு பிறகு கிளம்பி போகிறார்.

அடுத்ததாக வளைகாப்புக்கு அழைப்பதற்காக ஜீவா வீட்டுக்கு செல்கின்றனர். அங்கு ஜீவாவிடம் வளைகாப்பு வைக்கும் விஷயத்தை சொல்ல, அவரது மாமனார் மண்டபத்துக்கு நிறைய செலவாகும், சாப்பாடுக்கு செலவுக்காக என்ன பண்ணுவீங்க என்று நக்கல் அடிக்கிறார். இதை பார்த்த ஜீவா கடுப்பாகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications