கண்ணனுக்காக சண்டையிடும் ஜீவா..மீனாவின் பதிலடி..மூர்த்தியிடம் போகும் ஜீவா... திடீர் திருப்பங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளைகாப்புக்கு வந்த கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை ஜனார்த்தனன் பண விஷயத்தில் அவமானப்படுத்துகிறார்.

கண்ணனுக்கு ஆதரவாக பேசி ஜீவா ஜனார்த்தனனிடம் சண்டையிட்டு திட்டுகிறார்.

மீனா ஜீவாவிற்கு ஆதரவாக பேச ஜீவா ஃபீல் பண்ணுகிறார்.

Pandian Stores serial 2023 May 19th promo and Episode Highlights

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மே 19ஆம் தேதிக்கான எபிசொட்டின் ஆரம்பத்தில் ஜனார்த்தனன் வீட்டுக்கு வளைகாப்புக்கு சொல்ல வந்த கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை ஜனார்த்தனன் அசிங்கப்படுத்துகிறார். மண்டபத்திற்கு வெளியே ஏதாவது பந்தல் எதுவும் போட்டு நீங்க அங்க தான் வளைகாப்பு நடத்த போறீங்களா? என்று கேட்க அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நாங்க எதுக்கு அப்படி பண்ணனும் என்று ஐஸ்வர்யா பதிலடி கொடுக்கிறார்.

நானும் கண்ணனும் கிராண்டா எதுவும் பண்ண கூடாதா என்று ஐஸ்வர்யா கேட்க? எந்த இடத்தில எப்படி வேணாலும் நடத்தலாம் ஆனால் அது பணம் இல்லாம செய்ய முடியாது என்று நான் சொல்கிறேன் என ஜனார்த்தனன் கூறி யாருக்கு என்ன தகுதி இருக்குன்னு தெரிஞ்சு அதுக்கு தகுந்தாலும் ஆசைப்படணும் நின்னு கிட்டே காலை முடியுமா அப்படி நீட்டுனா கீழே விழுந்து விடுவோம் தொடர்ந்து அவமானப்படுத்தி கொண்டே இருக்க கடுப்பான ஜீவா என்ன மாமா இப்படி பேசுறீங்க என்று கேள்வி கேட்கிறார்.

என் தம்பி பேங்க்ல வேலை பார்க்கிறான். மாசம் சம்பளம் நான் வாங்குகிறேன். அவனால வளைகாப்பு நடத்த முடியாதா? என்று கேட்க உங்க தம்பி என்ன 20 வருஷமா வேலை செஞ்சு கிட்டு இருக்காரு? என்று ஜனார்த்தனன் கேட்க, இவன் வயசுல கவர்மெண்ட் வேலைக்கு போறது சாதாரண விஷயம் கிடையாது. வளைகாப்பு வைக்க போறேன்னு சந்தோஷமா சொல்ல வந்திருக்கான் உங்களுக்கு வேணும்னா வாழ்த்தணும் இல்ல முடியலன்னா பேசாம அமைதியா இருக்கணும் என்று கோபத்தோடு பேச ஜனார்த்தனன் எழுந்து சென்று விடுகிறார்.

பிறகு மீனா கயலை ஸ்கூலில் இருந்து கூட்டிக்கொண்டு வர அப்பாவும் அம்மாவும் அமைதியாக இருப்பதை பார்த்து இதுக்கு முன்னாடி எல்லாம் கயல் ஸ்கூலில் இருந்து வரும்போது ஓடி வந்து பேக்கை வாங்கிக்கிடுவ ஆனா இன்னைக்கு என்ன இப்படி இருக்க என்று அம்மாவிடம் கேட்க, இன்னைக்கு மாப்பிள்ளை அப்பாவை எதிர்த்து பேசிட்டாரு என்று சொல்லி போட்டு கொடுக்க ஜீவா என்ன சொன்னாரு என்று மீனா கேட்கிறார்.

Pandian Stores serial 2023 May 19th promo and Episode Highlights

அதற்கு மீனாவின் அம்மா வளகாப்பு சொல்வதற்காக கண்ணனும் ஐஸ்வர்யாவும் வந்திருந்தாங்க என்று சொல்ல நான் வர வரைக்கும் அவங்கள உட்கார வச்சு இருக்காங்களாம் என்று மீனா கேட்டு, ஜீவா எப்போதும் தப்பா பேச மாட்டான் என்று சப்போர்ட்டாக பேசி கொண்டு இருக்க அந்த நேரத்தில் ஜீவாவும் வீட்டில் வந்து வாசலில் நின்னபடியே இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதுக்கு மீனாவின் அப்பா நான் என்ன செஞ்சாலும் மாப்பிள்ளைக்கு நன்றி கிடையாது. உனக்கு நன்றி கிடையாது என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பிறகு ஜீவாவிடம் அப்பா உன்னை ஏதாவது பேசினார்களா? என்று மீனா கேட்க பரவாயில்ல, நீ என்னை எப்பவும் விட்டுக் கொடுக்காமல் பேசுற என்று ஜீவா மீனாவை தோளில் சாய்த்து பாராட்ட நீதான் எப்பவும் உன் குடும்பத்துடன் என்னை விட்டுக் கொடுப்ப ஆனா நான் கொடுக்க மாட்டேன் என்று மீனாவும் கூறுகிறார்.

அதுக்கு மீனாவின் அப்பா நான் என்ன செஞ்சாலும் மாப்பிள்ளைக்கு நன்றி கிடையாது. உனக்கு நந்தி கிடையாது என்று சொல்லி கிளம்பி விடுகிறார். பிறகு ஜீவாவிடம் அப்பா உன்னை ஏதாவது பேசினார்களா? என்று மீனா கேட்க பரவாயில்ல, நீ என்னை எப்பவும் விட்டுக் கொடுக்காமல் பேசுற என்று ஜீவா மீனாவை தோலில் சாய்த்து பாராட்ட நீதான் எப்பவும் உன் குடும்பத்துடன் என்னை விட்டுக் கொடுப்ப ஆனா நான் கொடுக்க மாட்டேன் என்று மீனாவும் கூறுகிறார்.

பிறகு உங்க அப்பா பண்றத எல்லாம் பார்க்கும்போது எனக்கு எங்க அண்ணனை எவ்வளவோ பரவாயில்லை, நான் இங்க வந்து இருக்கவே கூடாதுன்னு தோணுது என்று கூறிக் கொண்டிருக்கிறார். மீனா இந்த வார்த்தை உன்னுடைய வாயிலிருந்து எப்ப வரணும் என்று நான் எதிர்பார்த்தேன் இப்ப நீ சொல்லிட்ட, இதைத்தான் நான் அன்றே மீனா சொன்னால் நீ கேட்கவில்லை என்று ஜீவாவை நக்கல் செய்கிறார்.

அடுத்ததாக ஜனார்த்தனன் வெளியே ஒரு ஆளை பார்ப்பதற்காக வர அங்கே மூர்த்தியும் வருகிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது மூர்த்தி, ஜனார்த்தனனிடம் டீ குடிக்கிறீங்களா என்று கேட்க, உடம்புக்குள்ள இத்தனை நோயை வச்சுக்கிட்டு எப்படி வெளியே சாப்பிட முடியும். நான் குடிக்கிறது கிடையாது உங்களுக்கு ஏதாவது சுகர் எதுவும் இருக்கிறதா என்று கேட்க, இல்லை என்று மூர்த்தி சொல்ல சீக்கிரமா வந்து விடும் என்று ஜனார்த்தனன் சொல்கிறார்.

உங்களுக்கு 40 வயசு தாண்டிட்டு இல்ல அதனால தான் நான் சொல்றேன். உங்களுக்கு வரணும்னு ஆசைப்படவில்லை என்று ஜனார்த்தனன் சமாளிக்க, அப்போது அவர் தேடி வந்த நபர் அங்கே வந்துவிட உங்க மூத்த பெண்ணை தான் நீங்க கஷ்டப்பட்ட குடும்பத்தில் கட்டி கொடுத்துட்டீங்க என்று கூற, அதற்கு என் மூத்த பெண்ணுக்கு என்ன? அவளும் அவ மாப்பிள்ளையும் என்கூட தான் இருக்காங்க என்று சொல்ல, அந்த நபர் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் பிரிய மாட்டார்கள் என்று சொன்னாங்க என்று சொல்கிறார்.

அதற்கு என் மாப்பிள்ளை கிட்ட எல்லாம் சொத்து பொறுப்பையும் நான் கொடுத்துட்டு நான் நிம்மதியா இருக்கேன் என்று சொல்கிறார். அப்போது மூர்த்தி எனக்கு வேலை இருக்கிறது நான் கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப, உங்க தம்பிய பத்தி கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்று ஜனார்த்தனன் கூறுகிறார்.

பிறகு மூர்த்தி ஒரு இளநீர் கடையில் இளநீர் குடித்துக் கொண்டிருக்க அந்தப் பக்கமாக வரும் ஜீவா மூர்த்தியை பார்த்து அவர் பக்கத்தில் போய்க் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+